கவிதை: தாலாட்டு…

*பிரான்சில் அன்னையர் தினம் (29.05.2016)

பத்மா இளங்கோவன்அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ… ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா…
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்… ..

அன்னையர் தினம்..
அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக… ..!

அம்மா..
உன்னை நினைத்துப் பார்த்தேன்..
பாடினேன் ஒரு பாட்டு..
அது
என் தாலாட்டு…
தூங்குவாயா அம்மா…
என் தாலாட்டுக் கேட்டு… ..
முடியுமா உன்னால்… ..?

Continue Reading →

ஒரு வழிப்போக்கனின் கவிதை 02

கவிதை கேட்போம் வாருங்கள்!விசித்திர உலகமாய் மாறிவிட்டது ….!!!

தினப் பத்திரிகையை வாசித்து ….
உலக நடப்பை விவாதித்து ….
கொண்டிருந்த இருவரைப் பார்த்து ….
தோளில் இருந்த துணியால் ….
வாயை பொத்தியபடி சிரித்த ….
வழிப்போக்கன் ……..!!!

பேசத்தொடங்கினான் ….!!!

விசித்திர உலகமையா ……
உண்மை உலகை ஒருமுறைசுற்றி…..
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி …..
வந்து விடுகிறது – இதுதான் இன்றைய …..
உண்மையின் இன்றைய நிலை ….!!!

Continue Reading →

உள்ளமதைத் திருப்புங்கள் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின  – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.

தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !

Continue Reading →

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!1. அப்படியில்லை நான்

அப்படியில்லை நான் என பேசுகின்றான்
ஆடை கிழிந்து
கூந்தல் கலைந்து
அனுமதி மீறலை கடந்த
வண்ண சேலைக்காரி
கண் கலங்கி நிற்கின்றாள்
அப்படியில்லை நான் என கதறுகின்றாள்
கூட்டம் யோசிக்கிறது நாமும் அன்று அப்படியில்லை நான் என சொல்லியவர்கள் தானே
நானும் அப்படியில்லை  என என்னிடமே சொல்லி பார்க்கிறேன்
அவர்கள் நம்ப மறுப்பதை போல
நான் நம்ப மறுக்கிறேன்
முதலில் அப்படியில்லை என்பதன் அர்த்தம் என்ன
மருத்துவமனையில் ஆய்வு அறிக்கை வாங்குமிடத்தில் சொல்லும் அப்படியில்லையா
காவல் அதிகாரி கைது செய்யும் போது சொல்லும் அப்படியில்லையா
கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேட்கும் போது சமாளிக்கும் படி சொல்லும் அப்படியில்லையா
முதலில் அப்படியில்லையின் அர்த்தம் பகிருங்கள்
இந்த காகங்களை பாருங்கள் அரிதான சாப்பாடை பகிர்ந்து உண்கிறது
உங்களிடம் நான் சாப்பாடை கேட்கவில்லை
அர்த்தம் கேட்கிறேன்
நீங்கள் தயவு செய்து விட்ஜென்ஸ்டீனை படித்து விட்டு என்னை குழப்பும் படி அர்த்தம் உரைக்காதீர்
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இதோ பிடித்துக்கொள்ளுங்கள் “அப்படியில்லை நான்”

Continue Reading →

தாயாக நீ….

வாண்மதி உந்தன் கடனுக்காக
அடகுவைக்கப்பட்ட
அநாதைப்பெண்ணவள்

ஆயிரம் கேள்விகள் கேட்பேன்
ஒரு பதிலேனும்
சொல்லிவிடு!

பெத்தவள் பாவத்துக்கு
பாவையவளை
பலியாக்கியது நியாயமா?

சிரிப்பைத்தொலைத்த
மழழைப்பருவம்
ஏக்கம் சுமந்த பள்ளிப்பருவம்
கனவைத்தொலைத்த
கன்னிப்பருவம்

எல்லாப்பருவங்களின்
ஏக்கங்களை மட்டும்
எனக்குச் சீதனமாக்கி
என்னைத் தாரைவார்த்த
நாட்கள்

இன்னும் நெருஞ்சிமுள்ளாய்
குத்துகிறது அம்மா

Continue Reading →

கவிதை: அதிசயக்குழந்தை

1. அதிசயக்குழந்தை – பூதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!
ஒட்டு துணிகூட இல்லாமல் …
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ….
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ….
விளையாடிகொண்டிருந்தான் ….
அதிசயக்குழந்தை …….

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் …
எதற்கு என்று கேட்டான் அவன் ….!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ….
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே …
என்றேன் ….

நீங்க மட்டும் அழுகில்லையோ…?
என்றான் அவன் – மேலும் சொன்னான் ….

Continue Reading →

ஜெயராமசர்மா கவிதைகள் மூன்று!

1. சிறக்க வாழ்ந்திட !

கவிதை கேட்போம் வாருங்கள்!மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் !

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா இருந்துவிடின்
சாதனையின் நாயகனாய் தலைநிமிர நின்றிடுவாய் !

அறத்தினைநினை அன்பையணை
சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு
இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு
சிறக்கவாழ்ந்திட சிந்தனைசெய்திடு !

Continue Reading →

மே-15. உலகக் குடும்ப தினம்.

மே-15.  உலக குடும்ப தினம்.

உறவினைப் போற்றிடு!  உணர்வினைப் பகிர்ந்திடு!
உண்மையைப் பேசிடு!  ஒற்றுமை கொண்டிடு!
அறத்தினை வளர்த்திடு! அன்பினைப் பகிர்ந்திடு!
ஆதரவு தந்திடு!  ஆனந்தம் கண்டிடு!
பறவையைப் பார்த்திடு!  பாசத்தைக் கற்றிடு!
பகிர்ந்திட வாழ்ந்திடு!  பட்டொளி வீசிடு
பிறவியின் பயனெடு!  பிரிவினை மறந்திடு!
பிளவினை தடுத்திடு! பெருமையைக் காத்திடு!

Continue Reading →

கவிதை: கடற் குழந்தை!

கவிதை: கடற் குழந்தை!

பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை

செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு

அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் 

Continue Reading →

‘அன்னையர் தினக்கவிதை’: அகத்தில் வைத்துப் பூசிப்போம்

மே 8  – அன்னையர் தினம்!

'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊனுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

Continue Reading →