கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியால் மனிதர்கள் முடங்கிப்போயிருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் உலா வர மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த குறும்படம் ஒன்று இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறும்படம் பல இளைஞர்களையும் அதே போன்ற முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உந்துதலை அளித்திருக்கிறது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.
கடந்த ஞாயிறன்று (29.10.201) மாலை ‘விம்பம்’ அமைப்பினரால் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள TMK house இல் trance – உரு குறுந்திரைப்படம் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஞானதாஸ் காசிநாதர், ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஆகிய இருவருடனும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. வழமைக்கும் மாறாக அதிகமானோர் கலந்து கொண்ட அந்நிகழ்வானது அக்குறும்படம் மீதான பல்வேறு பட்ட விமர்சங்களுடனும் பார்வைகளுடனும் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போர் தந்த வழியில் இருந்து இன்னமும் மீளாத ஈழத்தில் போர்க்காலக் கட்டத்தில் காணாமல் போன தனது மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு தாயின் துயரக் குரலாக அமையும் இக் குறும்படமானது போருக்கும் அப்பால் சாதாரண மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் பற்றி அதிகம் பேசுகின்றது. ‘உரு’ என்ற சாமியாடல் முறைமையையும் அச்சாமியாடலின் மூலம் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையையும் பேசு பொருளாகக் கொண்டு அதன் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக அமைந்திருக்கும் இக்குறும்படமானது எம் முன் வைக்கும் கேள்விகள் ஆயிரம்.
இக்குறும்படத்தின் வெளியீட்டின் பின்னான கலந்துரையாடலில் ஞானதாஸ் காசிநாதர் அவர்கள் “போரின் வலியினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் அனைவருக்கும் மேற்கத்தைய முறைமையில் அமைந்த உளவளச்சிகிச்சை பெறுவதற்குரிய போதுமான வசதிகள் இன்றில்லை. இவ்வகையில் இத்தகைய சாமியாடல் முறையும் தீர்க்கதரிசனங்களும் அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் பெரிதும் உதவி புரிகின்றன” என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். அத்துடன் அரங்கில் இருந்த பெரும்பான்மையோரும் ‘உரு’ என்ற சாமியாடல் முறையையும் அது உரைக்கும் தீர்க்கதரிசன முறைமையிலும் மிகவும் உண்மை இருப்பதாகவே தமது நம்பிக்கையினை வெளிப்படுத்தினர். இவர்கள் மட்டுமன்றி இன்று தற்போது ஈழ இலக்கியத்தில் காத்திரமாக இயங்கி வரும் பெரும்பாலான படைப்பாளிகளும் சாமியாடல்களிலும் சாமிமார்கள் கூறும் தீர்க்கதரிசங்களில் அதிக நம்பிக்கையினையே தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ‘கனவுச்சிறை’ இல் தேவகாந்தனும் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ இல் யோ.கர்ணனும் ‘பெர்லின் நினைவுகள்’ இல் பொ.கருணாகரமூர்த்தியும் இத்தகைய பாத்திரங்களை உலவ விட்டு இவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போன்ற தமது கருத்தினை அப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இவ்வழக்கானது எமது மண்ணில் தொன்றுதொட்டே பாரம்பரியமாக இருந்து வருவதனால் இவர்கள் மனங்களிலும் ஆழ ஊடுருவியுள்ளதையே வெளிப்படுத்துகின்றன. ஆயினும் பல தசாப்தகாலங்களாக ஈழ இலக்கிய உலகில் அரசோச்சிய இடதுசாரி இலக்கியவகையில் இவை போன்று குறிப்புகளோ நம்பிக்கைகளோ எதுவும் இல்லை. இது போன்ற நம்பிக்கைகள் இன்று எமது இலக்கியங்களிலும் படைப்புக்களிலும் அதிகம் வேரூன்றுவதற்கு எமது இலக்கிய உலகில் பின் கதவு வழியாக உள் நுழைந்த பின்நவீனத்துவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது எமது அனுமானம் ஆகும்.
ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.
இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான ‘பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)’ திரைப்படம் பேசுகிறது.
அழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் நாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கௌதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கௌதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது.
சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.
– நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் எழுதிய சிறப்பு மிக்க பதிவு. அவரது ‘R.P. ராஜநாயஹம்‘ என்னும் வலைப்பதிவிலிருந்து நன்றியுடன மீள்பிரசுரம் செய்கின்றோம். சாவித்திரி பற்றி அரிய தகவல்களைக்கொண்டுள்ள கட்டுரை இது. –
கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.
சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு உண்டு. தேவதாஸ், மிஸ்ஸியம்மா, மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு. களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு. அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி. திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி. பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி. அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி
அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.
சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி. பத்மினி, சரோஜாதேவி, தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.
வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில், பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.
கடந்த வாரம் 2017 தைப்பொங்கலோடு உலகமெங்கும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது . இளைய தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படம் திரைக்கு வந்தது. உலகமெங்கும் திரைக்கு வந்த அந்தப் படம் டென்மார்க்கிலும் பல இடங்களில் திரையிடப்பட்டது.
என் மகன் விஜய் ரசிகன் என்பதால் அவன் பைரவா தியட்டரில் பார்க்க வேண்டும் என்று ஒரு மாசத்துக்கு முன்னமே என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் ஓம் ஓம் என்று சொல்லி காலத்தை கடத்தலாம் என்று நினைத்து வந்த எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வசமாக மாட்டிக்கொண்டு விட்டேன். எனது வீட்டில் இருந்து 40 km தொலைவில் இருக்கின்ற அந்த தியட்டரில் “பைரபா” பார்பதற்காக நுழைந்தேன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மக்கள் இருந்தார்கள். அதிகமாகப் பிள்ளைகளின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள்தாம் அதிகமாக இருந்தார்கள்.
இந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தைச் சொல்லும் கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ஜேகபதிபாபு,டேனியல் ,பாலாஜி ,தம்பி ராமையா சதீஸ் மற்றும் பலரது நடிப்பில் இருந்தது அந்தப்படம் ஒளிப்பதிவு பாடல்கள் சிறப்பாக இருந்தன. கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்
சொந்தம் பந்தம் என யாருமே இல்லாத ஓர் அனாதையான விஜய் தன் நண்பனோடுசென்னையில் அறையொன்றில் ஒன்றாக இருக்க அறிமுகமாகிற விஜய வங்கியொன்றில் வராத கணக்குகளை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரியான ஒய் ஜி மகேந்திரன் ‘மைம்’ கோபிக்கு கொடுத்த பல லட்சம் பணம் வட்டி ஒழுங்காக கட்டாததால் ஒய் ஜி மகேந்திரன் திருப்பி கேக்க போய் தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு காசும் கொடுக்காமல் அவமானப் படுத்தி திருப்பி அனுப்பிவிட ,அவர் வந்து விஜயின் உதவியை நாடுகிறார்.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.
கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?
பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.
ஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்’இளையநிலா’ எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.
– ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அண்மையில் மறைந்த பாலுமகேந்திரா அவர்கள் ‘மூன்றாம் பிறை’ என்னும் பெயரில் வலைப்பதிவொன்றை பெப்ருவரி 2012இல் ஆரம்பித்து நடாத்தி வந்தார். அதிலவர் எழுதியிருந்த கட்டுரைகளை ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ இணைய இதழ் பதிவு செய்கின்றது. – பதிவுகள் –
பாலுமகேந்திரா பேசுகிறேன்….
நண்பர்களே…, என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.
I
திரையை அறிவார்த்த சூத்திரங்களால் ஒழுங்கு செய்த ஐசன்ஸ்டைனின் மாண்டாஜ் முறைமையின் தீவிர எதிர்ப்பாளனாக நான் இருக்கிறேன். உணர்வுகளைப் பார்வையாளனக்கு கொண்டுசேர்க்கும் என்னுடைய சொந்த வழிமுறையானது முற்றிலும் வேறானது. ஐசன்ஸடைன் சிந்தனைகளை எதேச்சதிகாரத் தன்மை கொண்டவையாக மாற்றிவிடுகிறார். இது இறுக்கமானதாக இருக்கிறது. ஒரு கலைப்படைப்பின் வசப்படுத்துகிற தன்மையான சொல்லப்படாத நழுவல்கள் ஏதும் இதில் இல்லை. – ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி
துண்டுக் காட்சிகளை சாரீயான இடங்களில் வைத்து ஒழுங்கு செய்து அர்த்தங்களை உருவாக்கும் மாண்டாஜ் கோட்பாடு ஒரு நாவலின் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இடைவெட்டில்லாத நீளமான காட்சிகள் ஒரு கவிதையின் தன்மை கொண்டதாக இருக்கிறது. இடைவெட்டில்லாத நீளமான காட்சியமைப்பானது வாழ்க்கையின் அசலான பகுதிகளை நம்முன் வைக்கிறது. இயற்கையை அதன் தூய வடிவில் காமிராவின் முன் கிடக்கச்செய்கிறது. – ஆந்த்ரே பசான்
இரண்டாம் உலகப்போரினால் விளைந்த துயரங்களும் அதற்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளின் வளர்ச்சியும் புறவுலகின் மீதான மக்களின் பார்வையில் ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லாவிதமான கலைப்படைப்புகளிலும் வேறுபட்ட அழகியற்கூறுகளின் வளர்ச்சிக்கு அடிகோலியது. மேற்கண்ட மாற்றம் சினிமாவிலும் நிகழ்ந்தது. ஐசன்ஸ்டைனின் மான்டாஜ் கோட்பாடு கோலோச்சிய காலத்தில் ஏறத்தாழ 1950க்குப் பிறகு நீளமான அதேநேரத்தில் குறைவான காமிரா சலனம் கொண்ட காட்சியமைப்பானது ஒரு தனித்த அழகியலாக பரிணமித்தது.
ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால்; அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது. படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் அழவழச நெரசழநெ னளைநளந. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.