‘நிழல்’ சினிமா இதழ் தனது உத்தியோகபூர்வமான இணைய இதழினை வெளியிட்டுள்ளது. இணையத் தள முகவரி: http://www.nizhal.in அனைவரையும் இணையத் தளத்திற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியத் தாருங்கள்.
எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல! நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.
மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரைப் பறிப்பது மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.
தீபா மேத்தாவின் ‘வாட்டர்’
உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகின்றன. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம். “ஜூன் 23 – சர்வதேச விதவைகள் தினம்” என்று ஐநா அறிவித்துள்ளது. கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.
[புதுடெல்லி, மே.20, 2011] டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். 58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.
சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.
நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
“நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது” என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி” எனும் குறுநாவலை படிக்கையில். வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இது நிகழ்கிறது.