யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்” .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் “என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் ” என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “
“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் “
“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்”
“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் “
“உனக்கு எப்ப நியுஸ் வந்தது “
“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்”
“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல”
“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன ”
Continue Reading →