அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத் திடுக்குறல் ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் இது அந்த மாதிரியான திடுக்குறல் அல்ல. சற்று வித்தியாசமான, சற்று பரவசம் கலந்த திடுக்குறல் என்று சொல்லலாம். விழிப்பு வந்ததும் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். தான் வீட்டிற்தான் இருக்கிறேனா அல்லது கப்பலிற் தன் கபினுக்குள்ளா என உணர்வுக்குத் தட்டுப்படாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விழித்தான். கப்பலில் ஜெனரேட்டரின் இரைச்சல் அப்போதுதான் காதுக்கு எட்டுவதுபோலிருந்தது. அட, நீயெங்கோ நானெங்கோ என்ற சலிப்புடன் மீண்டும் படுக்கையில் விழுந்தான். மறுபக்கம் திரும்பித் தலையணையை அணைத்துக்கொண்டு கண்களை மூடினான். கனவில் மூழ்கிவிட ஆசையாயிருந்தது. கனவில் மனைவி மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினாள். மென்மையாகவும் இனிமையாகவும் பேசினாள். கனவுகள் எப்போதுமே இப்படித்தான் போலும். மனசு விரும்புவதை படம் பிடித்து காட்டுகின்றன. ‘தொட்டதெற்கெல்லாம்’ கூச்சமைடைந்தாள். ‘சும்மா இருங்கோ’ எனப் பொய்க்கோபத்துடன் கையில் ஒரு அடியும் போட்டாள். அவ்வளவுதான். அத்தோடு விழிப்பு வந்துவிட்டது.
அந்தத் தமிழர், காலை ஒன்பதிற்குப் படுக்கையை விட்டெழுந்து கழிவறைக்குச் சென்று தன் சலம் பாய்ச்சிய பின், வழக்கம் போல் அன்று சவரம் செய்வதிலிருந்து தப்பலாமா எனக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மில்லிமீற்றர் நீளத்தில் அவரின் நாடியிலிருந்து கீழே தூங்கிய நரை வளர்த்தி, கோதுமை-மா இடியப்பம் பிழியும் போது வரும் வெள்ளைப் புழு-வால் போல் தோன்றிற்று. அதை இன்னும் ஒருநாள் இருக்க விடமுடியுமென முடிவெடுத்த மறுகணம், வளரும் புழுக்களுக்கும் தான் போட்டிருந்த சட்டையின் கழுத்து-வெட்டுக்கும் மத்தியில், நெஞ்சின் மேற்பக்கம் ஒரு பெரிய கரிய இலையான் போல் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டார். சாவகாசமாக அதை நுள்ளிப் பிடுங்கிக் கண்ணால் பார்த்து, நுகர்ந்தும் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் ஒன்று! நல்லதான எதையும் எறிந்து வீணாக்க மாட்டாதார், அதைத் தன் வாயினுள் போட்டு நாக்கில் வைத்துத் துழாவித் தாலாட்டி அன்புடன் மெல்லமாகக் கடித்து அதை மிகமிகச் சுவைத்து உண்டார். அதன் பின்னர் பல்விளக்கி முகம் கழுவித் தன் காலை உணவைத் தயாரிக்கக் குசினிக்குச் சென்று ஓரத்தில் இருந்த சிற்றலை மின்னடுப்பின் கதவைத் திறந்து எதையோ உள்வைத்தார்.
பலத்த காற்று வீசும்போதே ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய் அலறிக்கொண்டு வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய் வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான். ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல், காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே, ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய் வந்தது கோபம்
மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!
“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.
இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.
நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.
என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.
அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.
‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’
‘ஏன் என்ன பிரச்சினை?’
‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’
‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது அவளுக்கு. நெஞ்சுக்குள்ள இனம் தெரியாத கவலை,
யோசனை, எல்லாம் தான் அவளுக்கு. என்ன ஒவ்வொருநாளும் ‘போன்’ செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான்
அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு.
‘யாருக்கு ‘போன்’ எடுத்தனீங்க?’ அவள் கேட்டாள்.
ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம். ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை, சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள் சோர்வுற, பெண்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்ய என, நீ, நான் நம் வயதொத்தவர்கள் இந்நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவு முதிர்ச்சியற்றவர்களெனினும் ஆதி அந்தம் என எதுவும் விளங்கவில்லை எனினும்- உண்மை மெதுவாக துலங்க ஆரம்பித்தது. காலையில், யூதர்கள் பின்வாங்கும் நிலையில் அவர்கள் எரிச்சலுடன் மிரட்டல் விடுத்தவாறு இருந்தபோது– ஒருபெரிய லாரி ஒன்று எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது.. படுக்கைகளின் ஒரு சிறு தொகுப்பு இங்கும் அங்கும் விரைவாக, எரிச்சலுடன் எறியப்பட்டது. நான் வீட்டில் பழஞ்சுவர் ஒன்றின் மீது வியந்து நின்று கண்ட நிலையில் உனது தாய், அத்தை மற்றும் குழந்தைகள் லாரியில் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னுடைய தந்தை ,உன்னை, உனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை பொருட்கள் மீது உள்ளெறிந்தவாரிருந்தார். உனது தந்தை என்னைப் பற்றி ஓட்டுநரின் மேற்புறம் காணப்பட்ட பலகைக்கு மேலாக உயர்த்தினர்; அங்கு எனது சகோதரன் ‘ரியாத்’ அமைதியாக அமர்ந்திருந்தான். நான் ஒரிடத்தில் அமைதியாக அமரும் முன் லாரி நகரத் தொடங்கியது. அன்பிற்குரிய ஆக்ரி, ராஸ் நாகுராவிற்கு செல்லும் சாலை எம்மை அழைத்துச் சென்ற வழியில் வாகனம் கிளம்பியதும் கண்களிலிருந்தும் மறையத் துவங்கியது.
தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா? அவனுக்குப் புரியவில்லை. எனினும் அழுகை தேவைப்படுகிறது. எதற்காகவோ என்று காரணம் தெளிவாகாவிடினும் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.
ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .
தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது. அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம். நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோமீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர் குடியிருப்பு, இரயில்வே நிலையம் மற்றும் கடைகள் இருப்பதனால் அந்த நகரத்திற்கு விவசாயிகள் தங்களின் நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு வருவார்கள். அந்த நகரத்தில்; நான் மிருக மருத்தவராக இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான். ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு அங்கும் நீடித்தது.