கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பில் செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது .
அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.
‘நைட் ஸிஃப்ட்” வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்பதை பூட்டியிருந்த கதவு காட்டியது. இப்படி சில நாட்களில் அவர்களுக்கு பொறுப்புணர்வு மிகுதியானதுபோல் நேரத்துடன் வேலைக்குப் போய்விடும் அற்புதம் நடப்பதுண்டு. கதவைத் திறந்து வீட்டுக்குள் போனதும் தனிமையை மறக்க ரேடியோவை ‘ஓன்” பண்ணினேன். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…” என அது பாடியது. இரவு வேலைக்குப் போகிறவர்களெல்லாம் தூக்கம் கெட்டு கடமையே கண்ணாக இருப்பார்களாக்கும் என அது அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது உறங்க முடியாது. சமையல் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. உத்தியோக நிமித்தம் இந்த நகரத்துக்கு வந்து தங்குமிட வசதி கருதி ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள். நகரத்தையண்டிய பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியிருந்தோம். நித்தியானந்தன் கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை பார்க்கிறவன். கோபாலச்சந்திரன் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. தொழிற்சாலை ஒன்றில் ‘ஸிஃப்ட் என்ஜினியரா”கக் கடமையாற்றுகிறவன் நான். அன்றாடம் வேலைக்குப் போவது, வருவது, சாப்பாட்டுக் கடைகளில் போய் எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து அறைகளில் ஒதுங்குவது என்று எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உப்புச் சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாமே எனக் கருதி ‘நாங்களே சமைக்கிற” திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூவருமே திருமண வயதில் (திருமணத்தை எதிர்பார்த்து) காத்திருக்கும் இளைஞர்கள். வந்து வாய்க்கப்போகிற மனைவிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் பற்றிய பயம் (அல்லது ஆர்வம்) உள்@ர எங்களுக்கு இருந்தது. விளையாட்டாகவேனும் சமையற் கலையைக் கற்றுத் தேர்ந்துவிடலாமே என்ற ஆசைதான்.
கைபேசி ஒலிக்கிறது!
எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!
பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.
நான் குழப்பமடைகிறேன்.
மன உளைச்சல். நேரத்திலேயே வீடு திரும்புகிறேன்.
“என்னங்க….சீக்கிரமா திரும்பிட்டிங்க?”
“வதனி……சந்துரு எங்கே…..?”
தூக்கத்திலிருந்து விழித்த … மீனா அதிர்ந்துபோனாள். ! கலைந்து போய்கிடந்த … அவளது சேலைத்தலைப்பினூடாக … தன் மார்பகங்களை ரசித்தபடி மேயும். காமக்கண்களை கண்டவுடனேயே அவளது நித்திரை பாதியிலேயே பறந்து போனது. பக்கத்தில் கிடந்த தன் மகன் செவ்வேளைப் பார்த்தாள். அவனையும் காணவில்லை என்றவுடன், ‘திக்’ கென்றது அவளது நெஞ்சு. காயங்களுடன் … முனகிக்கொண்டிருக்கும் ஒரு சிலரைத் தவிர, மிகுதிப்பேர் நல்ல நித்திரை என்பதற்கு அந்த மண்டபத்தில் போட்டிபோட்டு கேட்கும். குறட்டைச்சத்தங்கள் … சாட்சியாக இருந்தது. மீனா படுக்கையை விட்டெழுந்து . . தன் மகனைத் தேடி வெளியே ஓடினாள். வழமையாகவே … அடிக்கடி அவன் போயிருக்கும் இடம்தான் இப்பவும் அவன் போயிருந்தது. அந்த அகதிமுகாமின் பின்பக்கத்தின் முட்கம்பி வேலியருகில் ஏதோ .. பறிகொடுத்தவன் போல குந்தியிருந்ததை கண்ட மீனா துடித்தே போனாள். முட்கம்பி வேலியையே .. வெறித்து பார்த்துக்கொண்டிருந்த, செவ்வேளின் கன்னம் இரண்டிலும் அடிக்கடி வழிந்தோடி துடைப்பாரின்றி .. காய்ந்துவிட்ட கண்ணீர் சுவடுகள்.அவனின் சோகத்தை புடம்போட்டு காட்டியது.!
சந்திரனுக்கு அன்று ஜாதகத்தில் ‘புது மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்’ என எழுதியிருக்க வேண்டும்.சில கிரகங்கள் உச்சத்தில் …இருந்திருக்கலாம். “கோட்டை கட்டி விடாதே தம்பி,அவை அனுபவங்கள் மட்டும் தான்,அனுபவிக்கிறது இல்லை !”அவனுடைய ராசி அவனுக்கு தெரியாதா, என்ன நக்கலாக ஒரு ‘உட்குரல்’?சிரித்துக் கொண்டான். விடிந்தும் விடியாத பனிக்காலைப் பொழுதில் (சிறிது இருட்டாக இருந்தது), காலை 7.00 மணி போல ரேடியோ ஓடரைப் பெற்றவன், காரின் டிக்கி திறந்திருப்பது போல தோன்ற, இறங்கிப் போனான். அந்த இருட்டில் நிலத்தில் ஒரு ‘10 டொலர் பிளாஸ்டிக் தாள்’ கிடக்கிறது தெரிந்தது. அந்த ‘கெண்டக்கி சிக்கின் ஃபாஸ்ட்பூட்’ கடையின் பார்க்கிங் பகுதியிலே காலையிலே எல்லா டாக்சிகளும் அடையிறது வழக்கம். அதிக பனி பொழிந்து கொண்டு இருந்தாலும் ‘7.00 மணிக்குப் பிறகு பார்க் பண்ணக் கூடாது’என்ற நகரசபையின் வீதிப் பலகையைக் காட்டி காவலர்கள் அபராத டிக்கற்றுக்களைத் தந்து அரியண்டம் தருவார்கள்.இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதால் நகர அரசுக்கு நிறைய செலவுகள் ஏற்படுகின்றன. அந்த துண்டு விழுகைகளை சீராக்குவதற்காக இரக்கமற்ற முறையில் காவலர்களைக் கடமையைச் செய்ய வைக்கிறார்கள். அதற்காக, அம்புகளாக, ரொபோவாகவா நடக்க வேண்டும்! நடக்கிறார்களே.
முறையாகச் சங்கீதம் கற்று, தாளம் தப்பாமல் பாடாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஏதோ தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடுகிறார் பார்வதி.அரைமணிநேரம் இதமாகத் தொட்டிலை ஆட்டியபின்னரே ஒன்றரை வயதே நிரம்பிய பேரன் இன்பன் அமைதியாகத் தூங்கத் தொடங்குகிறான். தன்னை மறந்து உறங்கும் பேரனின் அழகை இரசித்தவாறு சோபாவில் அமர்கிறார். ஐம்பத்தெட்டு வயதை அவர் கடந்திருந்தாலும் வீட்டுவேலைகளைச் சளைக்காமல் தான் ஒருவரே செய்துவிடும் சுறுசுறுப்பு அவர் வயதையும் மறைத்திருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் நூல்கள் மற்றும் உள்ளுர் மாத,வார இதழ்களை வாசிக்கும் வழக்கத்திற்கும் மாறாகத் தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் மனைவியைக் கண்டு வியப்புறுகிறார் கணவர் ரெங்கன். வெளியே சென்று வீடு திரும்பிய அவர் குளித்து உடைமாற்றம் செய்து கொண்டு மீண்டும் வரவேற்பு அறையில் நுழைந்த அவர், மனைவியின் அருகிலுள்ள இருக்கையில் அமர்கிறார்.
குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுதபோதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது. அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாமற் கிடந்திருக்கிறான். சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டையில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். அதையும் வெட்டி அடுப்புக்கு வைக்காதவரையிற் சரிதான். சேவலொன்று பொழுது விடிந்துவிட்ட செய்தியை இப்போதுதான் வந்து (அறை) கூவல் விடுத்தது. அப்பன் இருக்கும் கோலத்தை நான்கு கோணத்திலும் நின்று திரும்பித் திரும்பிப் பார்த்தது. “கவலைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு எழுந்திரு!” என இன்னொருமுறை கூவியது. சேவல் யாரோ ஒரு வீட்டுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அயலிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிச் சம்பளமில்லாத உத்தியோகம் செய்யும் சேவையுணர்வைப் பார்;த்தால் அப்பனுக்கும் ஓர் உற்சாகம் தோன்றியது. ஆனால் அந்தக் கணநேர உற்சாகத்தையும் அழுத்தும் எந்தப் பக்கம் போகலாம் என்று புரியாத கவலைகள். வீடு வாசலை விட்டு உடுத்த உடுப்போடு ஓடிவந்த கவலைகளை ஒருபக்கம் போட்டுவிடலாம். தனக்குச் சொந்தமில்லாத இருப்பிடத்தில் அகதி எனும் பட்டத்துடன் சீவிப்பது.. வயிற்றுப்பாட்டுக்கு அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்பது.. அதையும் விட்டால் வேறு வழி இல்லாதிருப்பது போன்ற கவலைகளை எங்கே போடுவது?
மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும். இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.
“அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.
9.2.2014.- எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக இருந்து கதையுங்கோ’ என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டான். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவாதான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு இடவசதி, சாப்பாடு, விசா பெறுவதற்கான ஆலோசனைகள்; என்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் மனம் படைத்தவர். பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ‘றெஸ்ரோரன்ட்’ ஒன்றில் வேலை செய்பவர். அங்கு பலவிதமான வேலை வாய்ப்புக்கள் வரும்போது அவற்றில் அகதியாக வரும் இளைஞர்களை ஈடுபடுத்தும் செல்வாக்கு மிக்கவர். பிரெஞ்சு முதலாளிகள் மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.
இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றின் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நான். ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தில் அவ்வப்போது வரும் வாகனங்கள் இந்த அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.