” பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….” என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம் ‘ . என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார் பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் . யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில் பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் . இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும் இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன் பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .
நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, ப+ச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.
“இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன்.
அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள்.
“நான் அதைச் சொல்லயில்லை..!”
“குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!”
“உண்மையாவா?” ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.
குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.
என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான். அதன் ஆசிரியர் ஜேம்ஸ், சில அலம்பல்களை வெட்டி எடிட் பண்ணி, சனிக்கிழமை வாரமலரில் போட்டு விடுவார்.அவருடைய முதல் கதை பிரசுரமான போது அவரிமிருந்து சிறு கடிதமும் வந்திருந்தது.”இளம் எழுத்தாளரே (உச்சி குளிர்ந்து விட்டது) தொடர்ந்து எழுதும். உம்முடைய எழுத்தில் ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது”என்று எழுதியிருந்தார். ‘கதை’ கிடையாவிட்டால் மெளனம்! இவர் புரிந்து கொள்வார். இவர் அதை மீள வாசித்து திருத்தம் செய்து செப்பனிட்டு மீள ஒரு தடவை எழுதுவார்.அதை 2 நாள் விட்டு எடுத்து வாசிக்கிற போது சிலவேளை அவருக்கு திருப்தி இல்லாமலும் இருக்கும்.அதை திருத்தி, செருக..அது புதிய பாதையில் பயணிக்கும்.அப்படி அவர் ஒரு கதையை 5 தடவைகள் கூட எழுதியிருக்கிறார்.அதற்குப் பிறகு யோசியாது பலகணிக்கு அனுப்பி விடுவார். ஜேம்ஸுற்கு தான் சித்திரவதை. அப்படி இருந்த 3 கதைகளை சேர்த்து ஒரு நாவல் போல அனுப்பினார். பலகணியில் தொடராக வந்து விட்டது.
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய் வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது.
என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின் என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும் துணிச்சல் எவனுக்கு வரும் ? என்னமாய் பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள் அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?
– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. ‘பால்ய விவாஹம்’ என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் ‘பால்ய விவாகம்’ பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
அவன் உரையாடலுக்குப் பிறகு கிளர்ச்சி உடலில் பரவியது.என் பற்கள் கீழ்உதட்டைக் கவ்விக்கொண்டன. பனிக்காற்று ஈர உடலுடன் ஊடுருவிய சுகம் அவனது சொற்கள்.எத்தனை முறை முயற்சித்தும் கிடைக்காத அந்தத் தருணம் இன்றோடு நிறை வேறிவிடும்.அவன் சொன்ன விதிகள் மனம் மறந்து தெளிவுற்றது. விரல்களால் கண்ணைப் பிசைந்து கொண்டு பக்கத்தில் பார்வைச் சிதறவிட்டேன். அவனது சரிரம் மறைந்து கொண்டும் கடிகாரம் சுறுசுறுப்புக் கொண்டும் இருந்தது.
நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். ‘அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்’ என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.
‘சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை. எங்களுக்கோ சொந்த மொழி! இந்த தமிழ் மொழி’யை வேற ஒருத்தன் கற்க வாறான் என்றால், எங்களையே குழப்புற மொழியாக வைத்திருந்தால்,அவன் தலையை பிய்க்க மாட்டானா? அறிவு ரீதீயாக பொருந்தாமலும் கிடக்கிறதே. ஆனால்,’சாமச்சேவல்’ என்பதில் ஒரு பொருந்தாமையும் இருக்கிறதாகப்படுகிறது. எங்க’பண்டிதர்களை என்ன செய்யலாம்?’என்ற ஆத்திரத்தோடு சைக்கிளை மிதித்தான். இலக்கணச் சுத்தமாக எந்த மொழியைக் கற்கப் போனாலும் இப்படி இடரப் பட வேண்டி இருக்குமோ? மொழியும்,சுதந்திரமும் உடலும் உயிரும் போன்றது, மொழி எளிமை நல்லதில்லையா?,இந்த சுதந்திரத்திற்காக தானே போராடுகிறோம்.
“ஏய்… என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல…! இதுல என்ன சண்டையும் … உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்…? எதையும்…மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்….அத… அத… அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்…” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!