நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.
“சின்னாங்கு இல்லேலா!
அல்லாம்மா வேணாம்லா!
பின் நவீனத்துவம்னா என்னாலா!
சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா!”
”இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.” டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது. கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது. கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.
பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான். “டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா”என்று மதி துரிதப் படுத்தினான். 2..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட கிராமம் அது!செட்டியார் பகுதியில் நகுலன் இருப்பவன்.ஒரு கிலோ மீற்றர் தூரம் தள்ளிய சந்தையடியில் மதி.வரும் போது கூட்டிக் கொண்டு வருவான்.நட்பு வேரிட்டதால் மதியும் காத்திருப்பான். அவர்களுடைய 8ம் வகுப்பில் 15…20 பேர்களாக பெண்கள் இருந்தார்கள்.எல்லா வகுப்புகளிலும் சராசரியாக அப்படித் தான் இருந்தார்கள்.ஆண்கள் தம் மத்தியில் நட்புடன் பழகினார்கள் தவிர பெண்களை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. வெள்ளை நாரை போல ஒல்லிக்குச்சியாக சாரதா,கொஞ்சம் அளவாக சதை போட்ட புவனா,சிரிச்சா அழகாகத் தான் தெரிவாள்.குறுகுறுவென அளவெடுக்கிற மாதிரி பார்த்து ஏதாவது சொல்லி பெடியளை சினமேற்றி விடுற சியாமளா,ஓரே ஆண்டில் பிறந்திருந்தாலும் மாதத்தில் மூத்தவளாக இருப்பாள் போல தோன்றியது.சின்னப் பெட்டைகளாக ராசாத்தி,பவானி,சரசு..பெரும் கூட்டம் தான்.
அன்று கல்லூரியின ‘பெயார்வெல் டே’. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு ‘ஆட்டோகிராப்’ இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் அதிகம் சந்தித்திருக்கி;றார்கள். பேசியும் இருக்கிறார்கள். எல்லாமே சாதாரன பேச்சுக்கள். கல்லூரி தொடங்குவது பற்றி… பாடத்திற்கு வர முடியாமை பற்றி… பாடக் குறிப்புகளை கை மாற்றிக் கொள்வது பற்றி… நண்பர்களின் சுகவீனம் பற்றி.. இப்படி நிறைய ‘பற்றி’ கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சைந்தவிக்கு, ஆகாஷ் மீது நிறையவே நேசம் இருந்தது. இது சக மாணவர்கள் இவர்களிருவரையும் இணைத்துப் பேசியதால் உண்டானதாக இருக்கலாம். இன்னொரு புறம் இவர்களிருவருக்குள்ளும் அது இல்லாமல் எப்படி சக மாணவர்கள் இணைத்துப் பேச முடியும் என்ற கேள்வியும் நியாயமானது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன? ஆகாஷும் சைந்தவியுடன் விஷேடமாகவே பழகுவான். மெல்லிய புன்னகை, காருண்யப் பார்வை, அமைதியான பேச்சு என அவனது ஒவ்வொரு நகர்வும் சைந்தவிக்குள் காதலை நங்கூரமிட்டு உட்கார வைத்திருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் நேசத்தைச் சொல்லவில்லையாயினும் இவர்களது கண்கள் சந்திக்கும் போதெல்லாம் காதல் மொழியில்தான் பேசிக் கொண்டன. கண்களுக்கு இருக்கும் நேர்மை பெரும்பாலும் உதடுகளுக்கிருந்ததில்லை.
“கண்ணா….! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!”
“எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல கோபி. !”
“உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா…….!”
“கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?”
“மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு. ஆனா, நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!”
[ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஜீவநதி’ சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதை. புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பமொன்றின் வீடு வாங்கிய அனுபவத்தை விபரிக்கும் கதையிது. ]
என் பெயர் கனகசபை. நான் ஒரு ஈழத்துத் தமிழ் அகதி. கனடாக் குடிமகன். கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து அகதியாகக் கனடா வந்து கடந்த இருபது வருடங்களாகக் கன்டாவின் முக்கிய நகரான டொராண்டோவில் மனைவி, குழந்தைகளென்று வசித்து வருகின்றேன். நான் எனது வீடு வாங்கிய அனுபவத்தை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதில் நான் உங்களது அபிப்பிராயத்தைக் கேட்கப்போவதில்லை. ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைத்தால் ஓரளவுக்கு ஆறுதல்தானே. அதுதான் கூறலாமென்று நினைக்கின்றேன். மக்கள் ஊரில் அகதிகளாக அலைகின்றார்கள். சொந்த மண்ணிழந்து வாழ்கின்றார்கள். இந்த நிலையில் ‘இவர் பெரிய மசிரு. வீடு வாங்கின கதையினைக் கூற வந்திட்டாராக்குமென்று’ நினைக்கிறீர்கள் போலை. இருந்தாலும் என் கதையினைக் கூறாவிட்டால் என் மண்டையே வெடித்துவிடும் போலையிருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அது தவிர என் அனுபவம் ஒரு சிலருக்குப் படிப்பினையாகவிருக்குமல்லவா? என் வீடு வாங்கிய அனுபவத்தை மட்டும் வைத்து வீடு வாங்குவதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். என் அனுபவம் இது. மேலே படியுங்கள்.
நீண்ட தூரம் கடலில் நீந்திய பின் ஓய்வுக்காக அமர்வது போல், பூவிழி கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்தவள், ‘அப்பாடா…. எல்லா சிரமங்களும் இன்றோடு முடிந்துவிட்டன!’ என்று தனக்குள் கூறியவாறு பெருமூச்சு ஒன்றை வேகமாக விடுகிறாள்! பரந்து விரிந்த இவ்வுலகில்,தான் மட்டுமே எதையோ ஒன்றைப் பெரியதாகச் சாதித்து விட்டதாக எண்ணி அவள் பெருமிதம் கொள்கிறாள். அவளது சாதனைக்குப் பின்னால் பலரது உழைப்பும் உதவியும் பெருமளவில் அடங்கியுள்ளன என்ற பேருண்மையை அசை போட்டுப் பார்க்க ஒரு கணம் மறந்து விடுகிறாள்! கிள்ளான், பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில்தான் பூவிழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது.அத்தோட்டக் குழும மருத்துவமனையில்தான் பூவிழியைப் பெற்றெடுத்தார் தாயார் பொன்னம்மாள். தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டு வரை பூவிழி கல்வி கற்ற பின் கிள்ளான் பட்டணத்தில் இடை நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தாள்.
ஹறூத்; என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். ‘மிக நல்ல செய்தி சேர்…, கேள்விப்பட்டீர்களா…?’ என்றான் பரபரப்புடன். அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல்மூச்சுவாங்க, இணையத்தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது ‘ஐபாட்’ அலைபேசியிலுள்ள ‘இணைய’ செய்தியையும் காண்பித்தான். ‘இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது…’ என அந்தச் செய்தி தொடர்ந்தது.
மனித மூளை என்றும் தீவிரமாக யோசித்துப் பழையன தவிர்த்துப் புதியன காணும் படலத்தில் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதிலும் தமிழர் தரம் ஒரு படி மேலேன்று கூறுவர். இந்த வகையில் ஒரு முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக புத்திசீவிகளான தமிழர் ஒன்று கூடி, அவைத் தலைவராக ஒருவரை நியமித்து, அவர் அத்தீர்மானத்தைச் சபையோர்முன் பின்வருமாறு சமர்பித்தார். “அன்பர்களே! தமிழர்களாகிய எங்கள் வாழ்வியலில் இன்றெல்லாம் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. அதனால் நாம் நினைத்தவாறு ஒன்றும் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நாம் போடும் திட்டமெல்லாம் நிறைவாக்கமுன் எம் இறப்பு முந்திவந்து யாவையும் குலைத்து விடுகின்றது. எங்கள் தேட்டம் எல்லாவற்றையும் சீராக ஒழுங்கு செய்வதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகள், மனைவியர் ஆகியவர்களுடன் நீடூழி வாழலாம் என்பது தவிடு பொடியாகி அவர்களையும் நடுத் தெருவில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்கும் திருமணம் நடாத்தாது தவிக்க விட்டுச் செல்கின்றோம். நாம் வட்டிக்குக் கொடுத்த பணமும் கைநழுவிப் போகின்றது. இவ்வண்ணம் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பலன் ஏதும் கிடையாது. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் எங்கள் இறப்பு நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியன எங்களுக்கு முன்கூட்டியே தெரியவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயமராசனுக்கு மனுக்களை அனுப்பவேண்டும். இதற்குரிய உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். வணக்கம.;” என்று கூறி அமர்ந்து விட்டார்.
1
இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. ‘ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி’ என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. ‘கச்சேரி’ ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.