பெப்ரவரி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை (15-02-2011) காலை 10.00 மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வளாகத்தில் கணனிக் கற்கைக்காக அமைக்கப்பட்ட விசேடமண்டபத்தின் திறப்புவிழா மிகவும் சிறப்பாக…
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “…
தகவல்: மேமன்கவி memonkavi@gmail.com
39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல்…
2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் ‘வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.’. பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.