பிரதிலிபியின் அடுத்த போட்டி – கவிதைத் திருவிழா

பிரதிலிபியின் அடுத்த போட்டி - கவிதைத் திருவிழா

வணக்கம்,  தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம். ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம். கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம். போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும். மொத்தம் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மூன்றும் எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com

Continue Reading →

ஆஸ்திரேலியா: எழுத்தாளர் முருகபூபதியின் ‘சொல்லவேண்டிய கதைகள்’ நூல் வெளியீடு! ‘ரஸஞானி’ ஆவணப்படம் திரையிடல்!

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்   30-09-2017 ஆம் திகதி  சனிக்கிழமை…

Continue Reading →

எழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவ்து பிறந்த நாள் விழா!

அன்புடையீர், வணக்கம்!  எழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவ்து பிறந்த நாள் விழா 16 செப்டெம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அனைவரும் வருகை  தருமாறு கேட்டுகொள்கிறோம்.

அன்புடன்,
பா.செயப்பிரகாசம் | க.பஞ்சாங்கம்,| சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.

Continue Reading →

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ நூல் வெளியீடு

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி,  படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது.

இலங்கை அரசும், இராணுவமும், விடுதலைப்புலிகளும் ஏற்படுத்திய அவலங்களை அவர் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இத்துணை மனிதப் பலிகளை நிறுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழர்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதை இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. போலியான பிரகடனங்களின் பின்னால் செல்வதைவிடுத்து சிறிதரன் நெறிப்படுத்தியிருக்கும் அரசியல் பாதை நடைமுறை சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று அரசியல் விமர்சகர் மு.நித்தியானந்தன் லண்டனில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

‘திரு. சிறிதரனின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக … என்ற தலைப்பு எங்கள் தமிழ் சமுதாயத்தின் மிகப் பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தொகுப்பே என்று நினைக்கிறேன். இந்த நூலில் இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இழந்துவிட்டவற்றை சொல்லியடங்காத துயருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பதுää தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சுகுபோன்ற தன்னலமற்றவர்களிடம் இருந்து துளிர்ப்பது யதார்த்தமானதாகும்’ என்று பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது உரையின்போது தெரிவித்தார்.

Continue Reading →