நண்பர்களே, சுயாதீன திரைப்பட கலைஞர்களை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லெனின் விருது வழங்ம் விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் பகிர்ந்திருக்கிறோம். வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது வெறுமனே விருது மட்டுமல்ல, இந்திய சினிமாவின் மிக போற்றுதலுக்குரிய கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கலை, கலாச்சார பரிவர்த்தனை மேற்கொள்ளும் மிக முக்கிய நிகழ்வு. சென்ற ஆண்டு அனுராக் காஷ்யப் வந்திருந்தார். இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் சென்னை வருகிறார். வாருங்கள் மலையாள சினிமா குறித்தும் உரையாடுவோம். சுயாதீன கலைஞர்களை போற்றுவோம்.
‘நபிகள் நாயகம்’ எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.
முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளாக்கான் போன்றோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒன்றுதிரட்டப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இதில் சகோதர இனத்துக் கவிஞர்களது கவிதைகளும் இடம்பெற்றிருப்பதானது இந்நூலின் மதிப்பினை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு கணிப்புரை வழங்கியுள்ள கவிஞரும், விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி ‘உலக மக்களால் அறிவிலிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரேபிய பாலைவனப் பூமியில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்நிலையை அடைய முடிந்தது எப்படி? என்ற கேள்விக்கான விடையை இந்நூலில் நீங்கள் பெறலாம்’ மேலும் ‘நபிகள் நாயகம் போன்று ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்? நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அப்படியே இன்றும் பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விக்கான விடைகளும் கவிதை வடிவில் இந்நூல் எங்கும் விரவிக் கிடக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புடையீர் வணக்கம் . இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின் அழைப்பிதழை இணைத்துள்ளேன் . உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு – இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் – செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற நிகழ்வுக்கு, தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் , முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் , சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : ‘திருக்குறள்’ இரா. எல்லப்பன் அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள். உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்.
1. அவுஸ்திரேலியா – விக்ரோறியா மாநிலத்தில் வதியும் தமிழ்மக்களுக்கான விசேட அறிவித்தல்.
அவுஸ்திரேலியாவிற்கு தற்போது வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 04-08-2017 வெள்ளிக்கிழமை மெல்பேனிலும், 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை சிட்னியிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முடிந்தளவில் பங்கெடுத்து, இலங்கைத் தமிழ் அரசியல் நிலவரம் பற்றி தெளிவடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அனைவரும் இச்செய்தியை இயன்றவரையில் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் மிகநீண்டகாலமாக எதிர்பார்த்த இவ்வாறானதொரு கருத்தரங்கு தற்போது இடம்பெறவிருப்பதையிட்டு மனநிறைவு கொள்கின்றோம். மேலும் இந்தச்சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேம்.
Please Kindly Participates in Public Meeting with Hon. Gajendrakumar Ponnambalam, whom will be here in Melbourne on next friday (4/08/2017) and in Sydney on next Sunday (6/08/2017).
– Tamil Organisations of Victoria –
2. ILAM THULIR Music Show 2017 on 5th August at 6pm.
ILAM THULIR IS BACK IN 2017!! After the enormous success of its sold out show in 2012, the Ilam Thulir band are finally back in full force for another memorable night of musical entertainment. This year we have international play back singers SATHYAPRAKASH and PRAGATHI GURUPRASAD and we will also have international comedian and YouTube sensation DAYAN SHAN “TAMILOL” joining the team. Under the direction of Niroshan Sathiyamoorthy, the Ilam Thulir band is one of Australia’s most distinguished and leading Tamil music bands today. The band was formed using the best of Melbourne & Sydney’s Tamil musicians, most of whom are proficient in more than one instrument. Courtesy of our major sponsor Australian Unity, Ilam Thulir 2017 will be the Tamil music event of the year and one not to be missed. From current Tamil and Bollywood hits to the classics there will be something for everyone!
தென் இந்திய இசையமைப்பாளர் ஜனாப். தாஜ்நூர் அவர்களுக்கு எழுத்தாளர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ‘பூங்காவனம்’ காலாண்டு இலக்கிய சஞ்சிகை வழங்குவதையும், ‘பூங்காவனம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம…
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில் வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.
NEWS RELEASE
Entrepreneurs: Make your pitch and pivot to Canada!
Pilot program for newcomers launching companies in Canada to be made permanent
July 28, 2017 – Toronto, ON – Canadians are welcoming to people and ideas from around the globe. Welcoming entrepreneurs who have the expertise to turn their ideas into successful companies is one way that Canada’s openness can help build a world-class innovation economy. The Start-up Visa Program, a pathway to permanent residence for cutting-edge entrepreneurs launching a start-up company in Canada, will become a regular feature of Canada’s immigration landscape in 2018. As part of the five-year pilot, launched in 2013, innovative entrepreneurs can apply to become permanent residents after a Canadian venture capital fund or angel investor group has made a significant financial commitment in their business idea, or after a business incubator has accepted them into their program.
A recent evaluation of the Start-up Visa Program found that it is delivering on its goals; immigrant entrepreneurs are actively developing innovative companies in Canada that are beginning to show positive results for Canada’s economy and creating middle-class jobs across a range of industries. Making the program permanent supports the Government of Canada’s Innovation and Skills Plan, which seeks to attract investment and support the growth of a diverse range of companies, creating well-paying jobs for Canadians. In the months ahead, IRCC will work to finalize regulations for the permanent program in order to have a seamless transition when the pilot expires on March 31, 2018.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு,…