வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன்…
தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பு 05.07.2015
இடம்: பெரிய சிவன் ஆலய கலாசார மண்டபம்
1148 பெல்லாமி வீதி. ஸ்காபரோ. ( 1148 Bellamy Road, Scarborough)
திகதி; 05.07.2017 புதன்கிழமை — நேரம்: மாலை 5:00 – 6:30 மணி
அன்புடையீர்:
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் எழுதி வெளியிடவுள்ள “கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் – ஓர் வரலாற்றுப் பதிகை” என்ற நூலானது கனடாவில் வாழும் ஈழத் தமிழரது வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஓர் அரிய வரலாற்று ஆவணமாகும். 1950ஆம் ஆண்டு முதலாக இலங்கைத் தமிழர் கனடாவுக்குக் கல்வி, தொழில், ஏதிலிக் கோரிக்கை, குடிவரவு என்ற அடிப்படைகளில் வருகை தந்துள்ளனர். அவர்களின் வரலாறு, இந்நாட்டில் அவர்கள் கல்வி கற்றுத் தம் வாழ்வை வளமாக்கிய வரலாறு, கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றைப் பேணுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட முயற்சிகள், ஈழத்தமிழரின் அரசியல் செயற்பாடுகள், கனேடிய அரசியல் பிரவேசம், குடும்பம், வாழ்வியல், இளையோர், முதியோர், தலைமுறைஇடைவெளி. தமிழ் ஊடகங்களின் தோற்றம், வளர்ச்சி என்ற பல்வேறு விடயங்கள் இந்நூலிலே வரலாறாக எழுதப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் பற்றிய தரவுகளைக் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரட்டி, ஆராய்ந்து 530 பக்கங்களில் தனிநூலாகத் தந்துள்ளார். இது எமது எல்லோரது வாழ்வியல் பற்றிய வரலாற்று ஆவணமாகும.; இந்நூலின் வெளியீடு இம்மாதம் 16. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை மேலே குறிப்பிடப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அன்புடையீர் வணக்கம். அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவிபெறும் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பயின்று நிதியத்தின் உதவி பெற்ற செல்வி க. ஹர்சினி, இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்மாணவி தற்போது தனது பட்டப்படிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராஜா, மற்றும் சமூகப்பணியாளர் செங்கதிர் கோபாலகிருஷ்ணன், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், சீர்மிய ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் ஆகியோருடன் முருகபூபதியும் பங்குபற்றினர். உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.
தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் – balasundarame@yahoo.com
‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.
ஈலிங் நூல் நிலையத்தைச் சார்ந்த திருமதி சாந்தி அகிலன் ஒழுங்கு செய்திருந்த ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் மு. நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: ‘லண்டனில் வாழும் 33 பெண் ஆளுமைகளின் தேர்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்த நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் இசைப் புலமை சார்ந்த தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா போன்றவர்களின் நேர்காணல்கள் அவர்கள் இருவரின் மறைவின் பின் கூடிய அர்த்தம், முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இசை, நாட்டியம் போன்ற துறைகளில் நேர்காணல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ள 12 பெண் ஆளுமைகளின் பல்வேறுபட்ட குடும்பப் பின்னணி, இசை நாட்டியப் பின்புலம், வௌtவேறுபட்ட சமயப் பின்னணிகள், செழுமை மிக்க இசை நாட்டிய வல்லுநர்களிடம் பயின்றமை போன்ற வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.
– யூலை 9, 2017 அன்று ‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும்…
25-06-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு மாலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
எஸ்.ஆர்.பிரபு வணிக வெற்றியோடு நல்ல தரமான படங்கள் எடுப்பதிலும் நல்லார்வம் கொண்டவர். அண்மையில் வெளியாகி மக்களாலும் பாராட்டப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே. வெளியானது முதல் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்று வருகிறது.
சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘இறுதி மணித்தியாலம்’ எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 வரை …