1) அசோகமித்திரன் நினைவலைகள் உரை – முருகபூபதி 2) சிறுகதை வாசிப்பு – “பிரயாணம்”3) அசோகமித்திரனும் நாமும் – ஜேகே 4) அசோகமித்திரனும் நாமும் – கேதா…
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’ வழங்கிய ‘தமிழியல் விருது – 2011’, தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ‘ தமிழியல் விருது – 2014’, இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘ இரா. உதயணன் இலக்கிய விருது – 2016’ என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள், தெய்வங்களின் படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின் “சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்- ” பாரதியும் பெண்விடுதலையும்” என்ற தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும் உரையாற்றினர். இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை, தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear Friends, Delighted to invite you for my special concert “SHREE” to celebrate International Women’s Day at the NGMA on…
எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘மல்லிகை’ இதழுக்கு 2016ஆம் ஆண்டு ஐம்பதாவதாண்டு பூர்த்தியாகிவிட்டது. அது தொடர்பாக .மல்லிகை’ சஞ்சிகையில் பங்களித்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றினை தயாரிக்கும்பொருட்டு அப்படைப்பு பற்றிய விபரங்களை (படைப்பின் தலைப்பு, ஆசிரியர் பெயர், வெளியாகிய இதழ் போன்ற) ‘மல்லிகை’ சஞ்சிகை நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இது பற்றிய அறிவித்தலொன்றினையும் ‘மல்லிகை’ சஞ்சிகையினர் வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிவித்தலை நண்பர் எழுத்தாளர் மேமன்கவி அனுப்பி வைத்திருந்தார். அதனை இங்கு ‘பதிவுகள்’வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
நண்பர்களே! உங்களது படைப்புகள் ‘மல்லிகை’ சஞ்சிகையில் வெளியாகியிருந்தா;ல் அது பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள்.