கனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் அழகைப் பாருங்கள்! உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். என் உள்ளங் கவர்ந்த நாடுகளுள் கனடாவுக்கு…
[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]
வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:
21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.
‘சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்புத் தொடர்ந்து வருடந்தோறும் ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து 25 வருடங்களை பூர்த்திசெய்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். கணபதி வந்தனம், கவித்துவம், கீர்த்தனம், நவீன வடிவில் அமைந்த வித்தியாசமான பூ நடனம், கிருஷ்ண பஜனை, செம்பு நடனம், குறத்தி நடனம், சிவஸ்துதி நடனம், தில்லானா என நாட்டியத்தின் பல்வேறு வடிவங்களை இந்த மேடையில் நடன ஆசிரியர்கள், அவர்களின்; மாணவர்களென தொடர்ச்சியாக முன்னெடுப்பதை சிறந்த ஒரு நாட்டியக் கலையின் வளர்ச்சியாக என்னால் அவதானிக்க முடிகின்றது’ என கீழைத்தேச நுண்கலை அமைப்பின் தலைவியும் ( ழுநுடீடு), நாட்டியக் கோகிலவாணியுமான ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற வெள்ளிவிழா நாட்டிய நிகழ்வின்போது தனது பிரதமவிருந்தினர் உரையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தனது பேசுகையில்; ‘நாட்டிய ராஜேஸ்வரி நர்த்தனம் பட்டம் பெற்ற ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா நாட்டியத்தில் புதிய புதிய வடிவங்களைக் கையாண்டு மாணவர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தி, நாட்டிய நாடங்களையும் இணைத்து புதியரசனையில் உட்படுத்திவிடுவது மகிழ்ச்சிக்;குரிய விடயம். அந்த வகையில் இன்றைய ‘பார்வதி பரியம்’ என்ற நாட்டிய நாடகத்தின் மூலம் புராணக்கதையுருவத்தை கண்முன் நிறுத்திய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ‘மாயா’ நடனக்குழுவை பாங்களுரில் நடாத்தி வரும் பாங்களுர் நாட்டியக் கலைஞரான கே.சி. ருபேஷ் சிவனாகவும், ஜெயந்தி யோகராவின் அன்பு மகளான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜா பார்வதியாகவும் இணைந்து வழங்கிய காட்சிகள் மிகவும் பாராட்டுக்குரிய காட்சிகளாக அமைந்திருந்தன. அவர்களுடன் இணைந்து பல்வேறு பாத்திர வடிவங்களை சலங்கைகளின் சங்கமம் நுண்கலை அமைப்பின் தலைவி நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அந்த அமைப்பின் ஆரியர்கள் மாணவர்கள் என 30 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து சிறப்பித்தமை புத்துணர்வு தரும் புதிய முயற்சி’ என மேலும் அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள்,…
புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை)
இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்
♦ முன்னிலையும் தலைமையும் றியாஸ் குரான
01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )
♦உரையும் கருத்தாடலும் ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )
02 றியாஸ் குரான கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )
03 ஜமீல் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )
04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.
♦உரையும் கருத்தாடலும் ஏ.நஸ்புள்ளாஹ்
வெள்ளி 13 மேற்கத்திய மூட நம்பிக்கையின்படி ஒரு துரதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை. ஆனால் அத்தினம் மிசிசாகா ஒன்றாரியோவில் உள்ள பீல் தமிழ் முதியோர்; சங்கத்திற்கு; ஒரு முக்கியமான நல்ல நாளாகும்.. இலங்கையில் வடக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், பீல் முது தமிழ்ர் சங்கத்திற்கு இரு மணி நேரத்துக்கு வருகைதந்து, உறுப்பினர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். இச் சங்கம் 1999 இல் நிறுவப்பட்டு 900 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தகுதியும், திறமையான முதியவர்களை உள்ளடக்கியது. கௌரவ முதலமைச்சர் தமிழ் தேசிய உடையான வேட்டியோடும் நெற்றியில் குங்குமப்; பொட்டோடும் சமூகம் தந்து, தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.. அவரது முகத்தில் ஆன்மீகத் தன்மை பிரதிபலித்தது. குத்துவிளக்கேற்றி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ; தேசிய க னேடிய கீதம் மற்றும் தமிழ் கீதம் பாடியபின் நிகழ்வு ஆரம்பித்தது, சில அறிமுக உரைகளின் பின், சங்கத்தின் தலைவர் வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும்; பிரச்சனைகளை வரவேற்பு உரையில் குறிப்பிட்டுப் பேசினார்
தமிழில் உரையாற்றிய கௌரவ முதலமைச்சர் வட மாகாண வளர்ச்சி தொடர்பான எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் .கனடாவில் வதியும் ஈழத் தமிழர்கள்.; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளவர்களாக இருப்பதைத் தான் உணர்ந்தாக சொன்னார். தங்கள் சொந்த நிதி பங்களிப்பு மூலம் மாகாண வளர்ச்க்கு பல உறுப்பினர்கள் முன் வந்தார்கள். ” உறவுப் பாலம் ” என்ற திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள முக்கிய நபர்களின் விருத்திக்கான திட்டத்துக்கு, புலம் பெயர்ந்த மக்களின் ஆதரவை மாகாண மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார். இதில் மார்க்கம்-முல்லைத்தீவு, பிராம்ப்டன்-வவுனியா இரட்டை நகரத்; திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. காலப்போக்கில் இந்த இரட்டை நகரத்; திட்டங்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு நீடிக்க வேண்டும். இதே முயற்சியை கிழக்கு மாகாணசபையும் தொடரலாம் என்றார்.
தமிழ்மரபு போற்றும் ஒரு தனித்துவப் பொங்கல்விழா! சிந்தனையில் ஆழ்த்தும் பாரதியாரின் பூமிக்கு வருகை! கலைவேந்தன் கணபதி-தேசபாரதி சந்திக்கும் ஒரு கவிதாநிகழ்ச்சி! சிறுவர் பெரியோர் நிகழ்வுகளோடு மகிழ்விக்கும் விழா!…