அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.…
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் கலை இலக்கிய இதழின் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு பகிர்வு இலக்கிய அமைப்பினால் எதிர்வரும் சனிக்கிழமை (03-12-2016) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை உட்துறை முக வீதியில் அமைந்துள்ள TDDA மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது. ஆய்வாளரும் பிரபல ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரபல நாவலாசிரியர் க.அருள் சுப்பிரமணியம் பிரதம அதிதியாகவும் பிரபல எழுத்தாளர் திரு. அ.ஜெயராஜா சிறப்பதிதி யாகவும் கலந்து கொள்கின்றனர். வரவேற்பை பகிர்வு செயற்பாட்டாளர் திரு. வ.தர்ம பாலனும் வெளியீட்டுரையினை மலை முரசு ஆசிரியர் மாயன் சிறி ஞானேஸ்வரனும் ” ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் மகுடம் ” என்ற தலைப்பில் ஆய்வுரையை கவிஞர் தில்லை நாதன் பவித்திரனும் நிகழ்த்தவுள்னர். மலரின் முதல் பிரதியை கனடா திரு.எஸ்.லிங்கேஸ்வரன் பெற்றுக்கொள்ள நன்றியுரையை மகுடம் ஆசிரியர் மகுடம் வி.மைக்கல் கொலின் ஆற்றுவார். திருமலை வாழ் கலை இலக்கிய நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்
( குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகத் திரைப்படம் திரையிடல் மற்றும் இலக்கிய அமர்வுகள் )4/12/16 ஞாயிறு மதியம் 3 மணி முதல், சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை,…
eathuvarai@googlemail.com
– – நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இறுதி நேரத்தில் கிடைக்கப்பெறுவதால், சில சமயங்களில் அவை கவனத்துக்கெடுப்பதில் சிறிது தாமதம். ஒரு பதிவுக்காக இந்தத்தகவல் இங்கே. – –…
தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈஸ்ட்ஹாமிலுள்ள அக்ஷயா மண்டபத்தில் நிறைவேறியது. பிரபல எழுத்தாளர் முல்லைஅமுதன் ஜெயராணி தம்பதிகளின் மூத்த புதல்வி கார்த்திகா “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் சமர்ப்பணம் செய்தார்.
முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைச் சமர்ப்பணமும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை சபையோர் இருந்து இரசித்து மகிழ்ந்தமை இது ஒரு தரம் மிக்க நிகழ்வு என்பதை உறுதிப் படுத்தியது.
‘தந்தை எவ்வழி மைந்தரும் அவ்வழி’ என்ற பழமொழிக்கிணங்க மகள் தனது பதின்மூன்றாவது வயதிலேயே அழகாக ஒரு நூலை எழுதி வெளியிட்டது பாராட்டத்தகுந்தது. மகாகவி பாரதியைப் பற்றித் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிவொளி ஊட்டத் தோன்றிய ஒளிமிகு சூரியன் மகாகவி. அவரது அளப்பரிய பெருமை மிகு வரலாற்றையும் சில பாடல்களையும் தனது நூலில் பதிவு செய்துள்ளார் கார்த்திகா.
அது மட்டுமன்றி, கர்நாடக இசை மேன்மையுற்று வளர மூலகர்த்தாக்களான மும்மூர்த்திகளின் வரலாறும், இசைப்பணியும் மட்டுமன்றி அவர்களுக்கு இணையான இன்னும் சில இசைமேதைகளின் (கோபால கிருஷ்ணபாரதி, பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள்) வரலாறும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந் நூலில் இடம் பெற்றுள்ளது. ஈழத்தில் தோன்றி ஈழத்திலும் , தமிழ்நாட்டிலும் இசைக்கும் , தமிழுக்கும் தம் வாழ்வை முழுவதும் அர்ப்பணித்த விபுலானந்த அடிகளின் வரலாறும் இந் நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது இந் நாட்டில் வளரும் இளம் தலைமுறையினருக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தத் துணை நிற்கும். இசை கற்போர் அனைவருக்கும் சிரந்த கைநுலாக அமையும்.
தகவல்: NavajothyBaylon@hotmail.co.uk
தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அறிமுக மற்றும் கலந்துரையாடல் டொராண்டோவில் நடைபெறவுள்ளது. இடம்: Don Montgomery Recreational Center 2467…
பேசா மொழி: பியூர் சினிமா – நூலகம் – புத்தகங்கள் தேவை.
நண்பர்களே பியூர் சினிமா புத்தக அங்காடியில் நூலகம் என்றொரு தனிப்பிரிவு இருக்கிறது. இதில் இலக்கியம், அரசியல், சினிமா, ஓவியம், காமிக்ஸ், சங்க இலக்கியம் என எல்லா வகையான நூல்களும் இருக்கிறது. ஆனாலும் நூலகத்திற்கு இன்னும் நிறைய புத்தகங்கள் தேவைப்படுகிறது. எனவே நண்பர்கள் தங்களிடம் என்ன வகையான நூல்கள் இருந்தாலும் அவற்றை பியூர் சினிமா நூலகத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாக கொடுக்க இயலாது என்றால், குறைந்த அளவு பணம் கொடுத்து கூட வாங்கிக்கொள்கிறோம். ஆனால் பெரும் தொகை கொடுக்க இயலாது. புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நண்பர்கள் வடபழனியில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் கொடுக்கலாம். வெளியூரில் உள்ள நண்பர்கள் கொரியர் அல்லது தபாலில் அனுப்பலாம். நிறைய புத்தகங்கள் இருந்தால் KPN போன்ற டிராவல்ஸ் பார்ஸல் சேவை மூலம் அனுப்பலாம். அல்லது உங்களால் வரமுடியாது என்றால் பியூர் சினிமா அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்களே வந்து எடுத்து செல்கிறோம். உங்களுக்கு தேவையில்லை என்கிற புத்தகங்களை அல்லது நூலகத்திற்கு கொடுத்து உதவலாம் என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம்.
முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.