அன்புடையீர், வணக்கம்.
தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.
அழைப்பில் மகிழும்
வயல்வெளித் திரைக்களத்தினர்
புதுச்சேரி – 605 003
தொடர்புக்கு: 9442029053
நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி
கருணாகரனின் “இப்படி ஒரு காலம்“ நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு “மதக வன்னிய“ (Mathaka Wanniya) கருணாகரன் ( Sivarasa Karunagaran ) எழுதிய “இப்படி ஒரு காலம்“…
இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான மொழிபெயப்புக்கான சாகித்திய விருது எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான உபாலி லீலாரத்தினாவுக்கு இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’…
24-09-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு MM திரையரங்கம், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சிறப்பு விருந்தினர்கள்: இயக்குனர் சமுத்திரக்கனி, கவிஞர் சல்மா சண்டான்ஸ், பெர்லின் போன்ற…
ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை…
[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகிறோம். ஒரு பதிவுக்காக இங்கே விபரம் பதிவாகின்றது. – பதிவுகள் ]
இலங்கையில் நீண்ட கால வரலாற்றைக்கொண்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு தற்பொழுது 200 வயது. அதனை முன்னிட்டு உலகில் பல நாடுகளில் வதியும் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி தமது கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்விச்சாலைக்கு நன்றி தெரிவிக்கும் எண்ணத்துடனும் அங்கு பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையை நினைவு கூர்வதற்காகவும் பழைய மாணவர் ஒன்றுகூடல்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துவருகின்றனர்.
அந்த வரிசையில் அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் வதியும் யூனியன் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர்.
மெல்பனில் Dandenong Menzies மண்டபத்தில் ( Menzies Avenue, Dandenong) நடைபெறவுள்ள இவ்விழா, Athys Jewellers – Perpetua Money Transfer, Prime Developers ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.