இலண்டன் எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய ‘காலத்தை வென்ற காவிய மகளிர்’ (Women of the Epics who outdated their times) என்ற…
தொடக்க உரை – ராஜேஸ் பாலாவழிப்படுத்தல் எம் .பௌசர்காலம் 03 செப்டம்பர் 2016சனி மாலை 5.30 தொடக்கம் 8.30 வரை அவரது நூல் அறிமுகமும், புலம் பெயர்…
04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக…
nandavanam10@gmail.com
கரவை மு. தயாளன் எழுதிய ‘சில மனிதர்களும் சில நியாயங்களும்’ என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள் முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள தொகுப்பு நூலும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் Dandenong North Senior Citizens Centre ( 41 A, Latham Crescent, Dandenong North , Victoria 3175) மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து 7.00 மணிவரையில் நடைபெறும்.
நூலாசிரியர் கரவை மு.தயாளன் லண்டனில் கல்வி, கலை இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ளவர். ஏற்கனவே கடல் கடந்து போனவர்கள் என்னும் நாவலையும் மண்ணில் தெரியுது வானம் என்னும் கட்டுரைத்தொகுப்பையும் வெளியிட்டிருப்பவர். நாளை மெல்பனில் அறிமுகமாகவுள்ள ‘சில மனிதர்களும் சில நியாயங்களும்’ என்ற நாவல் தொடர்கதையாக லண்டன் தமிழர் தகவல் இதழில் வெளியாகியிருக்கிறது. பின்னர், இலங்கையில் தினகரன் வாரமஞ்சரியிலும் லண்டனில் பார்வைகள் என்னும் இதழிலும் தொடராக வெளிவந்துள்ளது.
“இந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று லண்டனில் குடியேறியவர்களையும் அவர்களின் வாரிசுகளான அடுத்த சந்ததியினரையும் பாத்திரங்களாகக்கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் மூலவேர், அவர்கள் பிறந்த தாய் நாட்டு மண்ணிலேயே இன்றும் ஆழப்பதிந்திருக்கின்றது. ஆதனால் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மண்ணுடன் முழுமையாக ஒன்றிக்க முடியாத அவலங்களுக்கும் ஆளாகின்றனர். அவர்களது வாரிசுகளின் வாழ்வும் சிந்தனையும் புலம்பெயர்ந்த நாட்டு மண்ணுடன் இசைவாக்கம் பெறுகின்றன. அதனால் இரண்டு தலைமுறையிலும் நடவடிக்கையிலும் முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு. அந்த முரண் நிலையை இந்த நாவல் சித்திரிக்கிறது ” இவ்வாறு இந்நாவல் பற்றிய தனது மதிப்பீட்டை ஈழத்தின் மூத்த படைப்பாளி தெணியான் பதிவுசெய்துள்ளார்.
யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத் துணைக்கண்டத்துக்குரிய நடுவர்களிலொருவருமான நண்பர் ரூபானந்தசிவம் (ரூபன்) சிவனடியான் கீழ்க்கண்ட செய்தியினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Attention All Srilankan Old School Associations:
Dear Sports Secretary and President, please take part in the “SRILANKAN LEGENDS CUP”, 7 A-Side 6-Over Cricket Tournament to be held in Toronto on Saturday 27th August 2016
The “SRILANKAN LEGENDS CUP” Cricket Tournament is organized to explore the hidden talents among Srilankan female and male cricketers in Canada .This tournament is to be held as an annual event.
*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.
All Srilankan School Associations (SSA) in Canada are invited to take part in the upcoming “SRILANKAN LEGENDS CUP”. This Tournament gives young girls and boys a new opportunity to participate even if they don’t have a team to play for. For all tournament related communication, correspondence and registration please contact Ruban R Sivanadian ( Old student of Jaffna Hindu College, ICC Umpire- Americas) at rubanhit6@yahoo.com or call 416 200 2330.
‘வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே ‘பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை” ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் ‘பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்” தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது.”
இவ்வாறு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்ää பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்களது கல்விச்சேவை மற்றும் பொதுப்பணிகளைப் பாராட்டிக் கௌரவித்த ‘அமுதவிழா”வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் தமிழர் கல்விநிலையத் தலைவர் திரு. எஸ். பகிரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வி. ரி. இளங்கோவன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:’கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்கள் தாயகத்தில் முன்னணியில் திகழும் கல்லூரிகளில் பணியாற்றச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதனைத் துறந்து தான் நேசித்த பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி – சமூக முன்னேற்றத்தை மனதில்கொண்டு அப்பிரதேசங்களில் பணியாற்றி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். புலம்பெயர்ந்த மண்ணிலும் எம்மவரின் எந்த விழாவிலும் அவரது சிறப்புரை இடம்பெறுவதை எல்லோரும் அறிவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவையோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பேசும் ஆற்றலாளர். அவரது பணிகள் மேலும் தொடர நாம் என்றும் உறுதுணையாகவிருந்து ஒத்துழைப்பு நல்குவோம்” என்றார்.
தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே இனி நன்கொடை கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். அத்தனை கசப்பான சம்பவங்கள். அதன்படியே தொடர்ந்து ஓராண்டாக எவ்வித நன்கொடையும் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை, செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு லெனின் விருது மிக பிரம்மாண்டமாக தானாகவே உருவெடுத்துவிட்டது. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செல்வமாகும். ஆனால் அவ்வளவு பணம் நல்ல சினிமா சார்ந்து இயங்கும் இயக்கத்திற்கு எப்படி கிடைக்கும். எனவே நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அனுராக் காஷ்யப் போன்ற உலகப் புகழ் பெட்ரா இயக்குனர் இந்த நிகழ்விற்கு வரவிருப்பதால் இதற்கென ஒரு சிறப்பும் தானாகவே சேர்ந்துவிடுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுக்க தயங்கினால், ஸ்பான்சர் செய்யலாம். உங்கள் நிறுவனம் அல்லது தொழில் கொஞ்சம் பிரபலமடைய இந்த ஸ்பான்சர்ஷிப் உதவலாம். இதுவரை இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்க இயலாவிடிலும் தங்களால் இயன்ற வகையில் 500, 1000 என்று கூட நன்கொடை செலுத்தலாம். தொகையைவிட உங்களது பங்களிப்பு மிக முக்கியம்.
நன்கொடை கொடுக்கவிரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு மின்னஞ்சல் செய்யவும். ஐந்தாயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்படும்.