அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அமரர் அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1.உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்    இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2.ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3.சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’அமரர் அருண்.விஜயராணி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
4.போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6.சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
7.அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: லெனின் விருது – தமிழகம் முழுவதும் திரையிடல்…

நண்பர்களே 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது இயக்குனர் தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லெனின் விருது பெறுபவர்களின் படங்கள் தமிழ்நாடு…

Continue Reading →

திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “  டாலர் சிட்டி “  உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில்.
இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர்.

சென்றாண்டு நடந்த விழாவில் திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் :

Continue Reading →

செல்வி. செயானா சிவகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்!

[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தல் தவறுதலாக விடப்பட்டுவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. – பதிவுகள் ] ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு அவர்களின் கலைமன்ற…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது 2016

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!2016 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தீபா தன்ராஜ்

ஐதிராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980’இல் பணி புரிந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். மிக முக்கியமான ஆவணப்படப் படைப்பாளிகளில் ஒருவர். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார், மற்றும் பயிற்சிக்கான திரைப்படங்கள் பல உருவாக்கியுள்ளார். விருது பெற்ற ஆவணப்படங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல தொடர் திரைப்படங்கள் இதில் அடங்கும். உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

Continue Reading →

மெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு!

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

Continue Reading →