அஞ்சலி: கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் !

கலாபூஷணம்  பீ.எம்.புன்னியாமீன்இலங்கையின்  பிரபல  எழுத்தாளரும்  கல்வியாளருமான  கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்  (10.03.2016 ) வியாழக்கிழமை  கண்டியில்  காலமானார். கடந்த  ஆண்டிறுதியில்  புனித உம்ராஹ்  கடமையை  நிறைவேற்றுவதற்காக  ஹஜ்  யாத்திரையை,  துணைவியார்  மஸீதா புன்னியாமீனுடன்  மேற்கொண்டிருந்த  இவர்,  புனிதக்கடமையை நிறைவுசெய்தபின்  நாடு  திரும்பும்  வேளையில்  29.12.2015    அன்று  திடீர் சுகவீனம்  காரணமாக  விமானத்திலிருந்து  இறக்கப்பட்டு  துபாய்  ராஷீட் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு  மாத  தீவிர  சிகிச்சைகளின்  பின்னர்  29.1.2016   அன்று   இலங்கை திரும்பிய  அவர்,  மேலதிக  வைத்தியத்துக்காக  மீண்டும்  பல்லேகல ஆயுர்வேத   வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு  நோயினால்  நீண்டகாலம்  பாதிக்கப்பட்டிருந்த  புன்னியாமீன், அதன்  தீவிர  பாதிப்பினால்  இறுதியில்  தாயக  மண்ணிலேயே எம்மை  விட்டுப்  பிரிந்தமை  அவரது  சுற்றுவட்டத்தினரை  கடும் துயரில்  ஆழ்த்தியுள்ளது.

ஆசிரியராகவும்,  சிறுகதை  எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும்,   ஊடகவியலாளராகவும்  பல்வேறு பரிமாணங்களிலும்  அறியப்பெற்ற  பீர்முகம்மது  புன்னியாமீன் 11.11.1960   இல் பிறந்தவர்.  கண்டி  மாவட்டத்தின்  கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில்  உள்ள  உடத்தலவின்ன  என்ற  சிற்றூரில்  பிறந்து, வளர்ந்து,   செழிப்புற  வாழ்ந்து  மறைந்தவர்.

அங்கு  அவர்  நிறுவிய  சிந்தனை வட்டம்  என்ற  அறிவுசார் நிறுவனத்தின்  மூலம்  பல  நூல்களை  எழுதியும்  பலரது  நூல்களை வெளியிட்டும்,  புலமைப்பரிசில்  பரீட்சை  சார்ந்த  பல  கல்விப் பணிகளையாற்றியும்  சிறப்புற்ற  அவர்,  உடத்தலவின்ன  என்ற சிற்றூரின்   பெயரை  உலகளாவிய ரீதியில்  பலரையும்  உச்சரிக்க வைத்ததுடன்,  ஈழத்து  இலக்கியத்  தோட்டத்திற்கு  மௌனமாகப் பொழிந்த  மாமழையாக  நின்று  பணியாற்றியவர்.

2004  முதல்  2009  வரை  இவர்  இலங்கை  முஸ்லிம்  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின்  விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக  எழுதித் தொகுத்து  15  தொகுதிகளில்  அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார்.   புகலிடப்  படைப்பாளிகளின்  வாழ்வும் பணிகளும் பற்றிய  தனியானதொரு  தொகுப்பை   வெளியிடும் நோக்கில்  லண்டன்  வந்திருந்த  புன்னியாமின்  ஒரு மாதம்  அளவில் எமதில்லத்தில்  தங்கியிருந்து  புகலிடப்  படைப்பாளிகளைச்  சந்தித்துத்  தகவல்  பெற்று  சிந்தனை  வட்டத்தின்  236 ஆவது  நூலாக அதனை  2006 இல்  வெளியிட்டிருந்தார்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்க மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்: “தமிழ்ச் சித்தர் இலக்கியம்”

நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர்  உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியம்: ஒரு பார்வை” – முனைவர் மைதிலி தயாநிதி சிறப்புப் பேச்சாளர்கள் உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியங்களை வகைப்படுத்தல் – ஒரு…

Continue Reading →

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள்’ பாடல்கள் நூல் வெளியீட்டு விழா

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘மெல்லிசைத் தூறல்கள்’ பாடல் நூல் வெளியீட்டு விழா 2016, மார்ச்; 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச்…

Continue Reading →

சிட்னியில் தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ஆவணப் படம் – புத்தக வெளியீடு

பிரபல  ஆவணப்பட   இயக்குநர்   அம்சன்குமார்  இயக்கத்தில்   உருவான ஆவணப்பட  வெளியீடும்   தவில்  மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை  பதிப்பித்த  தவில் மேதை  லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் …

Continue Reading →

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

கம்பன்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்  வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு

காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)

21.3.2016 திங்கட்கிழமை   மாலை 5.00 மணி   திருவிழா மங்கலம்

தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர் திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்

இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
மலர் வணக்கம்  – திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி மாணவ மாணவியர்

வரவேற்புரை– திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்

இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு – மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்

Continue Reading →

சிறப்புற நிகழ்ந்த ‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா!

[ மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பு நூலானது முக்கியமானதொரு மைல் கல்லாகும். இது போன்று ஏனைய சஞ்சிகைகளின் தொகுப்பு நூல்களும் வரவேண்டும். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்த முடியும்.  இது போல் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், கவிதைகள்,  நாவல்கள் மற்றும் திறனாய்வுக்கட்டுரைகள் போன்றவையும் பல்வேறு தொகுப்புகளாக வெளிவருவது நல்லது. அவ்விதம் வெளியிடுவதற்கு மிகுந்த பொருட்செலவாகுமென்பதால், அவற்றை முதலில் மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடலாம். இவ்விதம மின்னூல்களாக அவை இருப்பது இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்ற முறையாகப்புரிந்து கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும்.

தற்போது தொகுப்பு நூலாக வெளிவந்த ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பும் மின்னூலாக இணையத்தில் ‘நூலகம்’ போன்ற தளங்களில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இவ்விதம் இணையத்தில் மின்னூல்களாக இவை இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றி பல்வகை ஆய்வுகளை, திறனாய்வுகளைப்புரிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். – பதிவுகள் – ]

ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Continue Reading →

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா! ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்! தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்!

அருண். விஜயராணிதமிழினி ஜெயக்குமாரன்அவுஸ்திரேலியத்  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  எதிர்வரும்  6  ஆம்  திகதி  (06-03-2016)  ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில் நடத்தவிருக்கும்  அனைத்துலகப்பெண்கள்  தின  விழாவில் கவியரங்கு,  விவாதஅரங்கு,  கருத்தரங்கு,  கலையரங்கு,  மறைந்த பெண்ணிய  படைப்பாளிகள்  இருவரின்  நினைவரங்கு  மற்றும் தமிழினியின்  சுயசரிதையான  ஒரு  கூர்வாளின்  நிழலில்  நூலின் அறிமுகம்  என்பன  இடம்பெறவுள்ளன. சங்கத்தின்  துணைச்செயலாளர்  திருமதி  சாந்தினி  புவனேந்திரராஜா  நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளராக  இயங்கும் அனைத்துலகப்பெண்கள்  தின  விழா,   சங்கத்தின்  தலைவர்  பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்  தலைமையில்  6  ஆம்  திகதி மெல்பனில்  பிரஸ்டன்  நகர  மண்டபத்தில்  மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நிகழ்ச்சிகளை   திரு, திருமதி கணநாதன்  தம்பதியர்  மங்கள விளக்கேற்றி    தொடக்கிவைப்பார்கள்.    திருமதி  சகுந்தலா  கணநாதன்   ஆங்கிலத்தில்   படைப்பு  இலக்கியம்  எழுதும்  எழுத்தாளர் என்பது  குறிப்பிடத்தகுந்தது. திருவாளர்கள்  அ. நாகராஜா,  சந்திரசேகரம்  ஆகியோரின்  தமிழ்ப்பெண் வாழ்த்து,  தமிழ்த்தாய் நடனம்  என்பனவற்றுடன்  அரங்குகள் ஆரம்பமாகும். கவிஞர்  கல்லோடைக்கரன்   தலைமையில்  இவர்களின்  பார்வையில் பெண்   என்ற  தலைப்பில்  நடைபெறும்  கவியரங்கில், அறவேந்தன்,  வெள்ளையன்  தங்கையன்,   நந்தகுமார்  இராமலிங்கம், சகீம்  மாத்தயஸ்,  கேதா  ஆகியோர்  பங்குபற்றுவர்.

Continue Reading →

லண்டன் ஹரோ தமிழ் சந்தியில் ஒன்றுகூடல்

லண்டன் ஹரோ தமிழ் சந்தியில் ஒன்றுகூடல் ‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும்  இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

‘புலம்யெயர் தமிழர்களின் அடையாளம் எது என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வளவுதூரம் எமது தாய்மொழித் தமிழை பயில்வார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அமெரிக்காவில் யூதமக்கள் அவர்களின் தாயக மொழியான கீபுறு மொழியைத் தெரியாத சமூகமாக  வளர்ந்திருப்பதைப்போன்றே புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினர் தமிழ்த் தெரியாத தமிழ்ச் சமூகமாக உருப்பெறும் நிலை உருவாகலாம்’ என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார். 

‘புலம்பெயர் நாடுகளில் அமைந்துள்ள ஊர்ச்சங்கங்கள் சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. 1960 களில் இருந்த நிலையைவிட இன்று தாயகத்தில் சாதிய வேறுபாடுகள் கூர்மையுற்று வருவதை அறிய முடிகிறது’ என்று ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா கருத்துத் தெரிவித்தார்.

Continue Reading →