Uyirppu: Progressive Tamil Women Artistic Organization, 1250 Brimley Road Unit #92 Scarborough ON, M1P 3G1Introducing ‘Niyoga’ to the Media ‘Niyoga’…
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.…
உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை இதுவரையில் நான்கு நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றது. ”உயிர்ப்பு” நிகழ்வுகள் விழிம்பு நிலை மக்களின் குரலாய் நாடகங்களின் மூலம் ரொரொன்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. புதிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடக அமைப்பாக உயிர்ப்பு நாடகப்பட்டறை அமைந்துள்ளது . சீரிய நாடகங்களை எழுதித் தயாரிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள உயிர்ப்பு ஆர்வமாக உள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் உயிர்ப்பின் 5ஆவது நிகழ்வில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
மீராபாரதியின் எழுத்து இயக்கத்தில் – ”கங்கு”
தணலாய்த் தகித்து கொண்டிருக்கும் மனித மனங்கள், உணர்ச்சிகள், உணர்வுகள் என்பவற்றின் பிரதிபலைப்பாய்த் தோற்றம்பெற்றிருப்பதே கங்கு என்னும் இந்த அரங்க அளிக்கை. ‘ஒடுக்கப்பட்டவருக்கான அரங்கு’ என்ற அரங்க அணுகுமுறையின் அடிப்படையில், பங்களிப்போர் எல்லோரினதும் கூட்டு முயற்சியில் உருவாகியதே இந்தப் படைப்பு. ஈழத் தமிழ் சமூகம் பல்வேறு ஒடுக்குமுறைகளை புறவயமாக எதிர்கொண்டபோதும் அது தனக்குள்ளும் பல்வேறு அக அடக்குமுறைகளை கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளின் சிறு துளியாய்க் கனல்கிறது கங்கு.
இளங்கோவின் எழுத்து இயக்கத்தில் – ”சாம்பல் பறவைகள்”
இருப்பிற்கும் இழப்பிற்கும் இடையில் ஒரு பறவையைப் போல அலைகிறது வாழ்வு. வாழ்க்கையின் அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிடும் எத்தனிப்பில் கழிகிறது காலம். வானமெங்கும் உலாவித்திரியும் பறவையொன்று உதிர்த்துவிடும் சிறகொன்றை வைத்து பறவையின் வாழ்வை அளந்துவிடமுடியாதோ அவ்வாறே மனிதர்களுக்குள் சுழித்தோடும் எண்ணங்களையும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடிவதில்லை. இறுதியில் வாழ்வில் எதுவுமே எஞ்சுவதே இல்லையெனினும் ஏன் இவ்வளவு வெறுப்பையும் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். நேசிக்க மனிதர்களும், நேசிப்பதற்கு இயற்கையையும் இருக்கும்போது கூட நாம் ஏன் இன்னும் தனிமைப்பட்டுப் போனதாய் உணர்கின்றோம். வாழ்க்கையிற்கு உண்மையில் அர்த்தம் ஏதும் இருக்கவேண்டுமா? இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமா? நாம் நம்முடைய வாழ்வை வாழ்கின்றோமா அல்லது யாரோ ஒருவரின் வாழ்க்கையைத்தான் வாழத்தான் எல்லாவற்றையும் தொலைத்து அலைந்து கொண்டிருகின்றோமா? நம் வாழ்வில் ஒருகாலத்தின் குறுக்கு வெட்டிலிருந்து தம் சிறகுகளை அசைத்துப் பறப்பதிலிருந்து விரிகிறது, சாம்பல் பறவைகள் என்கின்ற நாடகம்.
சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
பல கவிஞர்களின் மரபுக் கவிதைகள் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன. கனடாவில் மரபுக் கவிதையை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போது எனக்குள் அந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வத்தை விதைத்தவர் எனது தொடக்க காலத்தில் தலைவராக இருந்த கவிஞர் கந்தவனமாகும். இதைப்பற்றி நான் அதிபர் பொ. கனகசபாபதி அவர்ளுடன் கதைத்த போது பண்டிதர் ம.செ. அலக்ஸாந்தர் அவர்களும் மரபுக்கவிதையில் சிறந்தவர் என்ற பரிந்துரையைத் தந்தார். எனது தேடலில் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் பெயர் இடம் பெற்றாலும் போக்குவரத்து வசதியீனம் காரணமாக அதைத் தவிர்த்திருந்தேன். எனவே ஒரு நாள் அதிபரின் வீட்டில சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினேன். அந்த சந்திப்பு பற்றி கவிச்சரம் என்ற இதழில் அவர் அதைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ கவிச்சரம் இதழில் உள்ள பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தரின் குறிப்பில் இருந்து:
‘அந்த வகுப்பு இங்குள்ள கல்விமான்களும், தமிழார்வலர்களும், கவிஞர்களும், புதுக்கவிதைக் கவிஞர்களும் சேர்ந்த வகுப்பாக அமையவேண்டுமென மகாஜனக்கல்லூரி முன்னைநாள் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களின் வீட்டிலே அப்போதைய கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலாளர் குரு அரவிந்தன் (2004) என்னைக் கேட்டார். அப்போதைய தலைவர் திருவாளர் சின்னையா சிவநேசன், கல்வியாளர் அ.பொ. செல்லையா, கவிஞர் இராசேந்திரம், திரு. சிவபாலு ஆசிரியர், பகிரதன், சண்முகராஜா போன்றோரும் கவிஞர் கந்தவனத்தையும், என்னையும் அழைத்துக் கேட்டதற்கிணங்க ஸ்காபுரோ சிவிக் சென்ரறில் கலந்துரையாடல் வகுப்பாகத் தொடங்கியது.’
கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.
கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் “யாவரும் கேளிர்” என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூகசெயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.
கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில…
அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி போராடி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் போராடி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையே தமது முதற் செயற்பாடா இருக்கும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு முதல் மைத்திரி – ரணில் கூட்டு வரை அது பற்றி இன்று வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாலும், விடுதலை செய்ய முடியாதவர்களாலும் எப்படி நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டடைய முடியும்?
அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்காக கனடாவில் சமவுரிமை இயக்கம் கனடா ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும், மக்கள் பகிரங்க கூட்டம் ஒன்றினையும் நாளை 27-2-2016 சனி அன்று ஒழுங்கு செய்துள்ளது. மிக அதிகளவிலான இலங்கைப் புலம்பெயர் சமூகம் ரொறன்ரொவில் இருப்பதால், இலங்கையிலுள்ள அனைத்து அரசியற்கைதிகளினதும் விடுதலையை வெற்றிகரமாகக் கோருவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும்…
இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது.
பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு – வர்த்தகம் – அயலுறவு – ஒருமைப்பாடு – கல்வி – வர்த்தகம் – கலாசாரம் முதலான துறைகளில் மேற்குறித்த எட்டு தென்னாசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்து கருத்தரங்கு தகவல் அமர்வுகள் நடத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறியிருப்பவர்கள் மத்தியில் இருக்கும் கலை இலக்கிய ஊடகத்துறை ஈடுபாடு மிக்கவர்களுக்காக முதல்தடவையாக ஒன்றுகூடலை நடத்த முன்வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் எதுவித இலாபநோக்கமுமமற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள தென்னாசிய விவகாரங்களுக்கான இந்த அமைப்பு, எதிர்வரும் 27 ஆம் திகதி (27-02-2016) சனிக்கிழமை மெல்பனில்; இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளது.
மெல்பனில் – Stirling theological college மண்டபத்தில் (40-60 Jackson Road, Mulgrave 3150 ) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, நூல்களின் கண்காட்சியுடன் தொடங்கி கவிதா நிகழ்வுடன் இரவு 9.00 மணிக்கு நிறைவுபெறும். குறிப்பிட்ட எட்டுநாடுகளுக்கும் கலை இலக்கிய கவிதைப்பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மக்கள் ஏனைய நாடுகளின் கவிதை முயற்சிகளை அறிந்துகொள்வதற்கும் அந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் தமிழர்களின் கவிபுனையும் ஆற்றலை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்…