நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன பிறவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சில நாட்களில் வெள்ள நீர் முற்றிலும் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கப்போவது இல்லை. குறிப்பாக கல்வி, உணவு சமைக்க தேவையான பொருட்கள், அரிசி பருப்பு, மாற்றுவதற்கு உடை போன்றவை கூட அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு இந்த உடனடி நிவாரணம் அளித்த நிறுவனங்கள், தனி நபர்கள், அரசு அமைப்புகள் அனைத்தும் மெல்ல மெல்ல அவர்களை மறந்துவிடும். ஆனால் அடுத்த சில மாதங்கள் கழித்தும் கூட அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. அதற்கு நாம் தொலைநோக்கு அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
‘போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். ‘ஞானம்” சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” என்ற தொகுப்பாகும்.” இவ்வாறு ‘ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அண்மையில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி. ஞானசேகரன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘போர் இடம்பெறும் வேளையில் உள்நாட்டில் இருப்பது தமது உயிர் பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்து சென்ற ஏக்கத்தினையும், சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அல்லல் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. நாம் தொகுத்த இந்தச் சிறப்பிதழில் போர்க் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பயண அனுபவங்கள், தாயக நினைவுகள், புலம்பெயர் வாழ்வின் அவலங்கள், கலாசாரக் கலப்பு மற்றும் முரண்பாடு, அகதி நிலை, நிறவாதம், புதிய சூழல்சார் வெளிப்பாடுகள், பெண்களின் விழிப்புணர்வு, மற்றும் விடுதலை, அனைத்துலக நோக்கு, அரசியல் விமர்சனம் முதலியவற்றைப் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அவதானிக்க முடியும். இத்தெகுப்பில் 85 சிறுகதைகளும், 125 கவிதைகளும், 50 கட்டுரைகளும், நான்கு நேர்காணல்களும் அடங்கியுள்ளன. இந்த போர் இலக்கியம், மற்றும் புலம்பெயர் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இலக்கிய வகைமைகளாகும்.” என்றார்.
“காலம்” : tamilbook.kalam@gmail.com
– வாசகர்களே! பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக, குறிப்பாகத் தமிழகத்தமிழர்களுக்காக, அவர்கள்தம் மத்தியில் தமிழகத்தின் சிறப்பு முகாம்களென்ற சிறைச்சாலைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, அங்கு வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை பற்றி எழுதப்படும் புனைவுகள், அபுனைவுகள் ஆகியன தொடர்ச்சியாகப்பிரசுரிக்கப்படும். தமிழகத்துச்சிறப்பு முகாம்களில் நீங்கள் அடைபட்டிருக்கின்றீர்களா? அப்படியானல் உங்களது அனுபவங்களை எம்முடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். – பதிவுகள் –
நேற்று , நவம்பர் 29, 2015 அன்று, பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்’ நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின.
எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். இந்த நூல் வெளியீட்டின் இன்னுமொரு சிறப்பு அரசியல்ரீதியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக்கொண்டவர்கள் இணைந்து இந்த நூல் வெளியீட்டினை நடாத்தியிருப்பதுதான். இது வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளுக்குள் நட்புரீதியிலான ஐக்கியத்தைக்காணல் ஆரோக்கியமானதே. நிகழ்விலும் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா, சிவா போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி , சிவவதனி பிரபாகரன் என்று பலரைக்காண முடிந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மார்க் அந்தனி என்னும் இளைஞர் தமிழகச்சிறப்பு முகாமொன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை விபரித்து உரையாடினார். ‘நாடு கடந்த தமிழீழம்’ அமைப்பின் பிரதிநிதிகளிலொருவரான உஷா ஶ்ரீஸ்கந்தராசா தனதுரையில் தமிழகத்துச் சிறப்பு முகாம்கள் மூடப்படுவதனை வற்புறுத்தி உரையாற்றினார். அத்துடன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை புலப்படும் வகையில் ஜெயலலிதாவுக்கு எல்லாரையும் கடிதங்கள் எழுதும்படியும் அறிவுரை பகிர்ந்தார்.
அவரைத்தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச்சபையினைச்சேர்ந்த ஜான் ஆர்கியு உரையாற்றினார். அவர் தனதுரையில் தனக்குக் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான புரிதல் இருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் இவ்விதம் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் பற்றி அவ்வளவான புரிதல் இல்லை என்றும், ஆனால் இனிமேல் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த விடயத்தைச் சர்வதேச மன்னிப்புச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்போவதாகக்குறிப்பிட்டார்.
இவர்களைத்தொடர்ந்து நூல் பற்றிய ஆய்வுரைகள் இடம் பெற்றன. முனைவர் சேரன், எழுத்தாளர் த.அகிலன், கணன் சுவாமி , பரதன் நவரத்தினம் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்கள்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…
torontotamilsangam@gmail.com
‘1824ஆம் ஆண்டுக்குப்பின் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது பட்ட துயரங்களை இன்று ஏழாவது தலைமுறையினரும் அனுபவித்துக்கொண்டிருக்கும் போக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும். மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் பிரஜைகளாக இன்றும் காணப்படும் அவர்களின் வாழ்க்கைநிலை இருப்பிடம், போசாக்கின்மை, சுகாதார வசதிகள், கல்வி போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஆண்களைவிடப் பெண்களே உடற்பலத்தை இழந்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து உழைக்;கும் சக்திகளாகத் திகழ்கின்றார்கள் ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் அவர்களுக்கு கிடைக்காததால் தமது குடும்பத்தை கவனிக்கவோ போசாக்கு நிறைந்த உணவை தமது குழந்தைகளுக்கு வழங்க முடியாது மிகவும் துன்பநிலையில் காணப்படுகின்றனர்’ என்று இலங்கை பண்டாரவளையிலிருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை கீதபொங்கலன் அவர்கள் ‘லண்டன் தமிழர் தகவல் நிலையத்தில்’ இடம்பெற்ற தமிழ்ப்பெண்கள் வலுவூட்ட ஒன்றுகூடலில் கலந்து பேசியபோது தனது ஆய்வுரையில் தெரிவித்தார்.
மலையகப் பெண்களில் பெரும்பாலானோர்; தமது குடும்பம், வாழ்க்ககைச் செலவுகள், பொருளாதார வசதிகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு; வெளிநாட்டுக்குச் செல்கின்றார்கள். வீட்டுத் தலைவியின் கண்காணிப்பின்றி கணவன், பிள்ளைகள் பிறழ்வான செயல்களில் ஈடுபட்டு மேலும் துன்பத்தைச் சம்பாதிக்கும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும். பல்வேறு மன்றங்கள், அரசியல், தொழிற்ச்சங்கங்கள் என்று இருந்தபோதும் அவர்கள்பால் அக்கறை காட்டாது செயற்படுவது கவலை தரும் விடயமாகும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். மலையகப் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் போதிய இடவசதியோ, ; தொழிற்நுட்ப உபகரணங்களோ, போக்குவரத்து வசதிகள், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை போன்ற பல குறைபாடுகள் நிலவிக்கொண்டிருப்பது மற்றுமொரு கவலை தரும் விடயமாகும். உயர்கல்வியில் மிகவும் பின்தங்கியவர்களாகக் காணப்படுவதற்கு போதியளவு போசாக்கின்மை மிக முக்கிய காரணமாக அவதானிக்க முடிகின்றது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மதவாத சக்திகளுக்கு எதிராக, சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் ஒருங்கினைவு.
14-11-2015, சனிக்கிழமை, மாலை 5:30 மணிக்கு
இடம் – இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.
பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்