வன்னியின் வரலாறு பேசும் இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும்!

–முன்னைநாள் யூனியன் கல்லூரி அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் வன்னியில் இறுதிக்காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஒட்டியதாகப் போர்க்கால நாவல் “வன்னி”.நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களால் தொகுத்துப்…

Continue Reading →

ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015! நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு, கவியரங்கு, விவாத அரங்கு, மற்றும் மகளிர் அரங்கு!

எஸ்.பொ.காவலூர் ராஜதுரைஅவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் – நடனம் – ஓவியம் – ஊடகம் – சமூகம் – பண்பாடு முதலான துறைகளில் தேடலையும் சிந்தனையையும் மேம்படுத்தும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள 15 ஆவது எழுத்தாளர் விழா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது.  நூல்களின் கண்காட்சி அரங்கு – இலக்கிய கருத்தரங்கு – நூல் விமர்சன அரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக  இலங்கையிலிருந்து எழுத்தாளர் டொக்டர் ச. முருகானந்தன் திறனாய்வாளர் திரு. எஸ். வன்னியகுலம்  இங்கிலாந்திலிருந்து எழுத்தாளரும் நாழிகை ஆசிரியருமான திரு. மாலி . மகாலிங்கசிவம்  சிட்னியிலிருந்து நடன நர்த்தகி நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் ஆகியோர் வருகை தருகின்றனர்.

அத்துடன் சிட்னி மெல்பன் எழுத்தாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர். இலக்கியக்கருத்தரங்கு திரு. வன்னியகுலம் தலைமையிலும் நூல் விமர்சன அரங்கு அவுஸ்திரேலியா வள்ளுவர் அறக்கட்டளை இயக்குநர் திரு. நாகை. சுகுமாறன் தலைமையிலும் கவியரங்கு திரு. கேதார சர்மாவின் தலைமையிலும் விவாத அரங்கு திரு. ஜெயகாந்தன் தலைமையிலும் மகளிர் அரங்கு திருமதி சாந்தினி புவநேந்திர ராஜாவின் தலைமையிலும் நடைபெறும்.

Continue Reading →

‘டொராண்டோ’வில் வெங்கட் சாமிநாதனுக்கான அஞ்சலி நிகழ்வு!

- வெங்கட் சாமிநாதன் -இன்று நவம்பர் 7, 2015 அன்று தமிழ் இலக்கியத்தோட்டம் மற்றும் காலம் சஞ்சிகை ஏற்பாட்டில் அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவாக அஞ்சலிக்கூட்டமொன்று நடைபெற்றது. எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முனைவர் நா.சுப்பிரமணியன், ‘உரையாடல்’ நடராஜா முரளிதரன், ‘காலம்’ செல்வம், முனைவர் வெங்கட்ரமணன், எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் மற்றும் தலைமை வகித்த என்.கே. மகாலிங்கம் ஆகியோர் வெங்கட் சாமிநாதன் பற்றிய தமது கருத்துகளை முன் வைத்தனர்.

வழக்கமாக நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் போலன்றி, நிகழ்வில் உரை நிகழ்த்தியவர்கள் தாம் இருந்த இடங்களில் இருந்தபடியே தமது கருத்துகளை எடுத்துரைத்தனர். சபையோரும் தம் கருத்துகளை உரையாடல்களுக்கு மத்தியில் தெரிவிக்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது பயன்மிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்திருந்தது.

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் வெங்கட் சாமிநாதனின் கலை, இலக்கியப்பங்களிப்பு குறித்து, ‘பாலையும், வாலையும்’ என்னும் ‘எழுத்து’ சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மூலம் தமிழ்க்கலை, இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன் பலரது கவனத்தை ஈர்த்தது பற்றி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் எவ்விதம் மஹாகவி போன்ற பலரை ஒதுக்கினார்கள் என்பது பற்றி, அக்காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் கலகக்குரலாக இயங்கியது பற்றி, பிரமிள் மற்றும் கவிஞர் திருமாவளவன் போன்றோர் பற்றி குறிப்பாக கவிஞர் திருமாவளவன் பற்றி எழுதித் தமிழகத்தில் அவர் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்தது பற்றி, பிரமிள் டெல்லியில் வெங்கட் சாமிநாதனுடன் சென்று தங்கியிருந்தது பற்றி, பின்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இலக்கிய மோதல்கள் பற்றி, மடை திறந்த வெள்ளமென பக்கம் பக்கமாக எழுதும் வெ.சா.வின் இயல்பு பற்றி, ஆரம்பத்தில் வெ.சாமிநாதன் என்றே எழுதியவர் பின்னர் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியது பற்றி, தி.ஜானகிராமனின் எழுத்தில் வெ.சா. கொண்டிருந்த மதிப்பு பற்றி, வெ.சா.வின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கிலக்கட்டுரைகள் மூலமான பங்களிப்பு பற்றி,  இவ்விதம் பல்வேறு கோணங்களில் வெங்கட் சாமிநாதனைப்பற்றிய தனது நினைவுகளைப்பகிர்ந்து கொண்டார்.

Continue Reading →

எழுத்தாளர்கள் சந்திப்பு – திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )

நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா ) ஒருங்கிணைப்பு:இலக்கிய அமர்வுகள் : இளஞ்சேரல்குறும்பட, ஆவணப்பட  அமர்வுகள்: அமுதன்சுற்றுச்சூழல் அமர்வுகள் : சேவ் அலோசியஸ் இரு…

Continue Reading →

“உலகத் தொல்காப்பிய மன்றம்” கனடாக்கிளை உதயமானது.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

ஆரம்பக் கூட்டம் ஒக்டோபர் 29.10.2015 திகதி பிஞ் மற்றும் மிடில்பீல்ட் சந்திக்கருகாமையில் உள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.0மணிக்கு மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய விளக்கமாக அமைந்திருந்தது அவரது உரை. பிராஞ்சில் இடம்பெற்ற முதலாவது உலகத்தொல்காப்பிய மன்றத்தின் மகாநாட்டிற்குத் தலைமை தாங்கியமைபற்றியும் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

திரு.சின்னையா சிவநேசன் அவர்கள் இந்த அமைப்பின் நோக்கம் சிறப்பாக அமையவேண்டும் தொடர்ந்து இயங்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

திரு. த.சிவபாலு அவர்கள் தலைமைச் சங்கத்தோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினையும் அதனை முன்னெடுத்துச் செல்ல செய்யவேண்டியவைபற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

ரொறன்ரோ அனைத்துலக மொழிகள் திட்டஅலுவலர் பொ.விவேகானந்தன் உரையாற்றும்போது தொல்காப்பியத்தின் சிறப்புப்பற்றியும் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு தொல்காப்பியம் பேசப்படாமைக்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்தார். அதனை முன்னெடுத்துச் செல்வதால் மட்டுமே தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் பேசப்படமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

Continue Reading →

கவிக்கோ பவளவிழா !

​கவிக்கோ அப்துல்ரகுமான்​கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க

நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.

கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான். அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,

Continue Reading →

நோர்வே: கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இடம்:  நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாககாலம்: வியாழக்கிழமை  05.11.2015நேரம்: மாலை 18:00…

Continue Reading →