அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனுபவப்பகிர்வு – தமிழ்க்கவிதை இலக்கியம்

அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம்: அனுபவப்பகிர்வு -   தமிழ்க்கவிதை   இலக்கியம்அன்புடையீர், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு   எதிர்வரும்    24 -5-2014 Darebin Intercultural Centre   மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில்   கவிதை  வாசிப்பு மற்றும் கவிதை இலக்கிய அனுபவப்பகிர்வு  முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு  கவிஞர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

“தமிழில் கவிதை இலக்கியம்” என்ற தலைப்பிலான இந்த அமர்வில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளில் ஏதேனும் ஒன்றை வாசித்தல்  (5 நிமிடங்களுக்கு மேற்படாமல்) “என்மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை” என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கவிதையைப் படித்துக்காட்டுதலும், அதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலும். (10 நிமிடங்களுக்கு மேற்படாமல்) சங்க காலம் முதல் இன்றுவரை கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.

Continue Reading →

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்
உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம்

நாள்: 26-04-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: மெய்யகம்
3A, 5637, Finch avenue East,
Scarborough, M1B5k9

சங்க கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் – ஓர் அறிமுகம்

Continue Reading →

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள்,  வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.

Continue Reading →

தமிழகம்: ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!

தமிழகம்: 'இலக்கு' என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!வணக்கம், ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம், 14.03.2014 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது. தலைமை : பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள்;  சிறப்புரை: திரு லேனா. தமிழ்வாணன்.. விருதாளர்: தடகள வீராங்கனை செல்வி ஆ. இந்து.. அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.. தாங்களும், தங்கள் இல்லத்து இளைய தலைமுறையினரும், கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் ..

Continue Reading →

சிட்னி தமிழ் நிகழ்வுகள்: விழிப்பு ஒன்று கூடல்

சிட்னி தமிழ் நிகழ்வுகள்: விழிப்பு ஒன்று கூடல்வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது.  ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.

Continue Reading →

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

 நிகழ்ச்சி நிரல் தமிழ் இலக்கிய அறிமுகம் | உரை: கலாநிதி நா.சுப்பிரமணியன்ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 29-03-2014 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரைஇடம்: மெய்யகம் |…

Continue Reading →

‘ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!

'ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!‘ஞானம்’ சஞ்சிகையானது, ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்’ ஒன்றை 700 பக்கங்களில் கொண்டுவரவுள்ளது. இச்சஞ்சிகைக்கு பின்வரும் தலைப்புகளில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரை ஒன்று எழுதித்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – ஆஸ்கர் விருது – திரையிடல் – நிகழ்ச்சி நிரல்:

balumahendraபாலு மகேந்திரா அவர்களின் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை திரைப்படங்களின் திரையிடல் எதிர்வரும் சனி (08-03-2014) மற்றும் ஞாயிறு (09-03-2014) நடைபெறும். நாள்: 08-03-2014, 09-03-2014 (சனி மற்றும் ஞாயிறு) – அனுமதி இலவசம், அனைவரும் வருக. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில், தொடர்புக்கு: 9578780400. நேரம்: காலை 10 மணி முதல், 08-03-2014 – சனிக்கிழமை.

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும்  கலை -  இலக்கிய சந்திப்புஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்  நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03- 2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை – இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில்  காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில் நடைபெறும். இலக்கிய  கருத்தரங்கு –  தமிழ்  தட்டச்சு  மற்றும்  விக்கிப்பீடியா  செயல் விளக்கம் –  நூல்  அறிமுகம் – மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள்    இடம்பெறும்   இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள்  – கலைஞர்கள் மற்றும்  அன்பர்கள் தமிழ்  ஆசிரியர்கள் மாணவர்கள்    –  கலை,  இலக்கிய    சுவைஞர்கள்  – ஊடகவியலாளர்கள் மேலதிக  விபரங்களுக்கு  தொடர்புகொள்ளவும்.

Continue Reading →

மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாஇலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி சனிக்கிழமை மாலை 4  மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும்  நூல்கள்:

* மருதூர்க்கனி  கவிதைகள்
* சந்தனப்பெட்டகமும்  கிலாபத்  கப்பலும்
* என்னை  நீங்கள்  மன்னிக்கவேண்டும்.

நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Continue Reading →