வாழ்க்கையிலிருந்து மட்டுமே இலக்கியம் பிறக்கிறது, என தீவிரமாக நம்பிய காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானவர் திரு.ஜே.எம்.சாலி அவர்கள். இவரைப்பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று அழைத்துக்கேட்டபோது, நேரமில்லாத நெருக்கடியில், திணறத்திணற நான் ஒரு மலையாள ஆய்வுக்கட்டுரையில் மூழ்கியிருந்த நேரம்,என்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அதைவிட குடும்ப சகிதம் இன்னும் ஒருவாரத்தில் லண்டனுக்குப் போகும் பயண அவசரம் வேறு. முடியாது என்றே சொல்லிவிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் யோசித்துப்பார்த்தபோது, பொறி தட்டிய ஒரு வசனம்—-. சாலி சாரைப்பற்றி எழுதாமல் வேறு யாரைப்பற்றி தான் எழுதுவது? அவ்வளவுதான், அனைத்து வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, கணிணிக்கு முன்னால் அமர்ந்தபோது , சாலி அண்ணன் அவர்களின் எழுத்துப்படிவங்கள் தான் கண்முன்னே விரிந்து நின்றன.
தோழமை மிகு நண்பர்களே! இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.
காலம் / இடம்: 25 நவம்பர் 2012 (ஞாயிறு), லண்டன்.
1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள், வரலாற்றுப்பதிவுகளை, முன்னிறுத்தி, இதுவரை அச்சில் பதிவான பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்…
திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல் வெள்ளியன்று நடைபெற்றது.புதுவை யுகபாரதி, திருப்பூர் திருநாவுக்கரசு, கோத்தகிரி தவமுதல்வன் உட்பட பல குறும்பட இயக்குனர்கள்…
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ்…
வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு! வலைத்தளத்தில் புதிய இடுகைகள்: 1. எழுத்தாளன் முகவரி 7: நடைவாசல்கள்2. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்3. மொழிவது சுகம் அக்டோபர் -20 அ. புதுச்சேரி சுதந்திரம் ஆ. மொ.யன்…
256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் ‘நிலாவின் இந்திய வைத்திய உலா’ என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.
அனைவருக்கும் வணக்கம், கடந்த 19-10-2012 அன்று என்னுடைய கவிதைநூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் திரு. வதிலைபிரபா அவர்களும், திரு. உதயகண்ணன் அவர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட நினைவுகள். தொடர்ந்த மழை. மறக்க முடியாத அனுபவம். பசுமையான நினைவுகள். மின்னஞ்சல் ஊடாக பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். நானும் நன்றி தெரிவித்தேன். விடுபட்டவர்களுக்கும் சேர்த்தும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
கவிதை நூல் கிடைக்குமிடங்கள்:
1. முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
அறை எண் 37,
#53, மில்லத் மேன்சன்,
பெரிய தெரு, திருவல்லிக்கேணி,
(இந்து மேல்நிலைப்பள்ளி எதிரில்)
சென்னை – 600005
அலைபேசி: 8754962106.
சென்ற ஞயிற்றுக்கிழமை கனடாவில் உள்ள ஸ்காபரோ விலேச் கொம்யுனிற்ரி மண்டபத்தில் ((Scarborough Village Community Center) குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் வைபவம் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் வரலாற்றுப் பதிவான ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ என்ற பாராட்டு நூலும் சோக்கல்லோ சண்முகத்தால் தொகுத்து, மொன்றியல் இரா. நடராஜா அவர்களின் அனுசரனையோடு வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தலைக்கோல் விருது வழங்கும் விழாவை மொன்றியல் இரா. நடராஜா, தா. சண்முகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் “காலந்தோறும் கம்பன்” INTERNATIONAL CONFERENCE ON KAMBAN AT ALL TIMES”:
நாள்: 23 & 24 மார்ச், 2013
இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி 630 001
மின்னஞ்சல் முகவரி: kambantamilcentre @gmail.com அலைபேசி இலக்கம்: +91 94450 22137
அன்புடையீர், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
காலம்:- 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
நேரம்:- மாலை 4.30 மணி
இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மராம வீதி, கொழும்பு – 06.
தலைமை:- டொக்டர் எம்.கே. முருகானந்தன்
முன்னிலையும், முதற்பிரதியும்:-
புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்