எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்!

எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது “ஓர் எழுதுவினைஞனின் டயரி” சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க.…

Continue Reading →

‘காற்றுவெளிச் சிறுகதைத் தொகுப்பு’

வணக்கம் வாசகர்களே! இது வரை காற்றுவெளியில் பிரசுரமான சிறுகதைகளை தரமானவற்றை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அதிலிருந்து தொகுக்கப்படும் சிறுகதைகள் நூலாக்கம் செய்யப்படும். அடுத்த இதழுக்கான படைப்புக்களை விரைவாக அனுப்பி…

Continue Reading →

கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீடு

வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.  விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளனவணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.  விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

Continue Reading →

எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு படைப்பாற்றலுக்கான ‘தமிழர் தகவல்’ விருது!

Kuru Aravinthanபுலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில்  “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான  “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.

Continue Reading →

அறிவோர் ஒன்றுகூடல் – மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்

கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.  கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.  கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

Continue Reading →

சயந்தனின் ஆறாவடு கலந்துரையாடல்

சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர்.  நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார்.சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர்.  நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார்.சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர்.  நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்

நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்
ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்
நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

Continue Reading →