படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ – யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும். யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும் வெளியான ‘சொல்லத்தவறிய கதைகள்’ கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.
– தகவல்: முருகபூபதி –
ilakkiyavaasal@gmail.com
சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது
பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)
பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)
MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405
இந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என “சினிமா சந்தை” என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
letchumananm@gmail.com
குவிகம் இலக்கிய வாசல் <ilakkiyavaasal@gmail.com>