முருகபூபதியின் “சொல்லத்தவறிய கதைகள்” – புதிய நூல் பாரிஸில் அறிமுகம்

முருகபூபதியின் "சொல்லத்தவறிய கதைகள்" - புதிய நூல்  பாரிஸில் அறிமுகம்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச்சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி (03-02-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாரிஸில் எழுத்தாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் முகவரி:  TIASCI  — 13, RUE DE L’AQUEDUC  —- 75010 PARIS . பாரிஸிலிருந்து வெளியாகும் ” நடு” இணைய இதழின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை “நடு” ஆசிரியர் எழுத்தாளர் கோமகன் ஒழுங்குசெய்துள்ளார். 

Continue Reading →

இசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே!

இசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே!
தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே! மேலும் ஒரு முயற்சி! காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.

பாடல் வரிகள்  & பாடல் தயாரிப்பு : கவிஞர் அகணி சுரேஸ்
இசையமைப்பாளர் : சுதர்சன்
பாடகர்கள் : மதுசிகன் , மதுசா குகதாசன், டெனின்ரா (மழலைக்  குரல்)
அணிசேர்  கலைஞர்கள் : தசா குகன்  – புல்லாங்குழல் , ரட்ணம் ரட்ணதுரை – மிருதங்கம், ரூபன், அபிஸன், வெற்றி துஷ்யந்தன்
ஒளிப்பதிவு  : வினு 

My sincere appreciation to Music Director Sutharsan and all artists. Kindly sign in to you tube and give your comments.

https://www.youtube.com/watch?v=3tqb2Dx4ZnI

Continue Reading →

பிரமிள் விருது – 2018

பிரமிள்

“வேலணை.காம்” (கனடா) இன் நிதி அனுசரணையில் “தட்டுங்கள்.காம்” (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் “மகுடம்” கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் “பிரமிள் விருது”ம் பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும். 20-04-2019 இல் அமுத விழா காணும் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையாக கருதப்படும் உலகம் போற்றும் தமிழ் கவிஞர் பிரமிள் என அழைக்கப்படும் தர்மு சிவராம் நினைவாக கவிதைக்கு வழங்கப்படவிருக்கும் ” பிரமிள் விருது” தொடர்பான அறிவிப்பும் நிபந்தனைகளும்.

Continue Reading →