தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான ‘பதிவுக’ளும் இணைந்து நடத்திய ‘தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்’ என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் இதழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019) கீழுள்ள படங்களை அழுத்தினால், அவை பெரிதாக, தெளிவாகத் தெரியும்.
அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது. கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டார்.
பிராந்திய கால்நடை அபிவிருத்திப் பயிற்சி நிலைய மண்டபம் (மத்திய வங்கியின் பிராந்திய நிலையத்துக்கு அருகில்), அறிவியல் நகர், கிளிநொச்சி
2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை
முன்வைப்புகளும் உரையாடலும்
1. வன்னி – நிலம், நீர், சமூகம்
2. வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி?
3. வன்னிக் காடு – வாழ்வும் அரசியலும்
(பிரதிகளில் உள்ளடக்கப்பட்டவையும் உள்ளடக்கப்படாதவையும்)
5. முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும்
6. அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர் மற்றும் போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை)
7. இலக்கிய அரசியல்: உண்மையும் விடுபடலும்
8. பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் (வரலாற்றுச் சித்திரிப்பும் புதிய உணர்தல்களின் அவசியமும்)
9.போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம்: கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள்
10. போரின் பின்னான பத்திரிகைகள்: அறிக்கையிடலின் உளவியல்
11. ஈழ அகதிகள்: தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும்
12. போருக்குப் பின்னரான சிறுகதைப் பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும்
13. தெய்வம் – சடங்கு – மரபு: வன்னி நிலமும் கையளிப்புகளும்
14. வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும்
15. மரபும் நவீனமும்: மன்னார்ப்பண்பாட்டு இடையசைவுகள்
16. திரையும் நிஜமும்