நிலானியின் ஓவியங்கள்

  நிலானியின் ஓவியங்கள்

இழப்பும் இருப்பும் (LOSS AND EXISTENCE) காண்பியக்காட்சி யாழ்.பல்கலைக்கழக கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. கடந்துபோன காலங்களையும் கடந்து கொண்டிருக்கும் காலங்களையும் கண்முன்கொண்டுவரும் வகையில் நிலானியின் ஓவியங்கள் அமைந்துள்ளன. வேலிகளும் எல்லைகளும் வீடுகளும் முகப்புக்களும் வாழ்விடங்களும் Unveiled Barrier, Address of Residence ஆகிய தலைப்புகளில் கோடுகளால் நிறைந்து அவரவர் வாழ்வனுபவத்திற்கு ஏற்ப அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. அவரின் Yall Jewellery எனப் பெயரிடப்பட்ட காட்சிகள் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டு வந்துள்ளன. ஈழத்து ஓவியக் கலைக்கு நிலானியின் தொடர் பங்களிப்பு வளம்சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள்.

Continue Reading →

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா

அன்புடையீர் வணக்கம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது   உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும்  சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள்  முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக்  கொண்டாடப்பட்டன.  இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக‌. வட  அமெரிக்கத் தமிழர்  வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது.  உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன்,  அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை  திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்  திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.

பேரவை விழா மற்றும் 10வது  உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த  புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள்  உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர்   வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு  விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Continue Reading →

ஒரு புளியமரத்தைச்சுற்றி நடந்த கதை ! அரைநூற்றாண்டுக்குப்பின்பும் பேசப்படும் கதையாக்கிய மெல்பன் வாசகர் வட்டம் ! சுந்தர ராமசாமியின் படைப்பாளுமையும் தீர்க்கதரிசனமும்! !

ஒரு புளியமரத்தைச்சுற்றி நடந்த கதை ! அரைநூற்றாண்டுக்குப்பின்பும் பேசப்படும் கதையாக்கிய மெல்பன் வாசகர் வட்டம் ! சுந்தர ராமசாமியின் படைப்பாளுமையும் தீர்க்கதரிசனமும்! ! சுந்தர ராமசாமிஇந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி. இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை. அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை  கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.

அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது. மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து,  “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.

அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல், பல பதிப்புகளையும் கண்டது. அத்துடன் இந்திய மொழிகளிலும் ஒரு சில பிறநாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதுடன், நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கத்தக்க நாவல் என்று சிலாகித்தும் பேசப்பட்டது. மெல்பன் வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக்கொண்டாடுமுகமாக கடந்த ஞாயிறன்று வாசகர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இலக்கியப்பிரதிகளை அயராமல்  தொடர்ந்து வாசித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துவரும் தீவிர வாசகர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்தனர்.

மிலேனியம் வருடத்திற்கு முன்பின்னாக பிறக்கும் ஒருவர் வாசகராகும்  பட்சத்தில்,  அது என்ன ஒரு புளியமரத்தின் கதை..? அந்தமரத்தில்   என்ன இருக்கும்? அது எப்படி வளரும் ? அதன் பயன்பாடு என்ன ?  தாவரவியல் பாடத்திற்கான எளிய விளக்கங்களுடன் அமைந்த நூலா..? எனவும் கேட்கவும் கூடும்!

Continue Reading →

பாவலர் துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரை – 2019

24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் –  24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன் –


வணக்கம். எனது உரையை ஆரம்பிக்கு முன், கனடாவில் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து எம்மை வழி நடத்தியவர்களும்,  மகாஜனன்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்து எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுமான முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் அகவணக்கம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

‘கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன்
துரையப் பாபுகழ் துதிப்போம்’

இந்த வரிகள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட, காலத்தால் அழிக்க முடியாத மகாஜனன்களின் இதயத்தில் பதிந்து விட்டதொன்றாகும். இன்று ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் திக்கெல்லாம் மகாஜனாவின் புகழ்பரப்ப அன்று அடிக்கல் நாட்டியவர்தான் எங்கள் கல்விக் கலைஞன் பாவலர் துரையப்பாப்பிள்ளையாவார்.
இந்தப் பாடல் வரிகளைக் கல்லூரிக் கீதத்தில் எமக்காக விட்டுச் சென்றவர், எமக்குத் தமிழ் அறிவைத் தந்து தமிழ் உணர்வைப் புகட்டிய எமது ஆசான், அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனராவார். கல்லூரியில் படித்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கனடாவில் பழைய மாணவர் சங்க நிர்வாகசபை கூட்டங்களிலும் சரி, ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் சரி நிகழ்ச்சி தொடங்கும் போது, கல்லூரிக் கீதத்தை நாங்கள் இசைப்போம். அனேகமான நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் எமது கல்லூரிக் கீதத்தின் மூலம் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை எப்பொழுதும் மீட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எமது நினைவுகள் எல்லாம் நாம் கல்விகற்ற கல்லூரியைச் சுற்றியே இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதுண்டு. ‘பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் கல்லூரியை இங்கே இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா?’ என்ற பதில்தான் அவர்களுக்காக எம்மிடம் இருக்கும்.

சமூக மேன்மைக்கான கலை, இலக்கியங்களின் பெறுமதியை மகாஜனன்களுக்கு உணர்த்திய கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எங்கள் கலை, இலக்கியப் பயணம் புலம் பெயர்ந்த மண்ணிலும் இன்று ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கே கலை இலக்கிய விழாக்கள் நடந்தாலும் அங்கே கட்டாயம் குறைந்தது ஒரு மகாஜனனின் பங்களிப்பாவது இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் கல்லூரிக்கு அந்த நிகழ்வுகள் எப்பொழுதும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

Continue Reading →