சிற்றிலை- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம்

லதா ராமகிருஷ்ணன்இயற்கையை தனது அடிமையாக பாவித்து மனிதன் அதை பலவிதங்களிலும் சேதப்படுத்திவருவதன் பலனை உலகமும், அதிலுள்ள உயிரினங்களும் அனுபவித்துவருகின்றன. புவி வெப்பமயமாதல் என்ற சொற்பிரயோகத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கநேர்கிறது. மரம் நடுவதன் அவசியத்தைப் பேசியபடியே மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காடுவளர்ப்புப் பற்றி பேசியவாறே காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. புலி, யானை போன்ற எத்தனையோ விலங்கினங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே போகிறது. தட்பவெப்பநிலையில் விரும்பத்தகாத பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தொடர்ந்தரீதியான அக்கறையும், விவாதங்கள், வழிகாட்டல்களும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளன.

Continue Reading →

டாக்கா: பிசாசு நகரம் – சுப்ரபாரதிமணியன் –

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.

Continue Reading →

இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்

சு.குணேஸ்வரன்1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.

2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு

Continue Reading →