ஆனால், 130 கவிஞர்களில் பாதிப்பேர்கூட தங்கள் விவரக்குறிப்பு அனுப்பித்தரவில்லை. இப்பொழுது அதற்காக இன்னும் காத்துக்கொண்டிருந் தால் இந்த நூலை பொங்கல் சமயத்திலாவது புத்தகக் கண்காட்சியில் கொண்டுவரவேண்டும் என்பது இயலாமல் போய்விடும். எனவே, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் (ஏற்கெனவே தங்கள் புகைப்படங்களையும் விவரக்குறிப்பையும் அனுப்பித்தந்திருப்பவர்களைத் தவிர்த்து) தங்கள் புகைப்படங்களையாவது உடனடியாக அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். கூடவே அவர்கள் விலாசங்களையும் அனுப்பி வைத்தால் ஆளுக்கொரு தொகுதியை அடுத்தவாரம் அனுப்பிவைக்க இயலும். இடம்பெறும் கவிஞர்களின் புகைப்படங்களையும் பெயர்களையும் பின் அட்டையில் வெளியிடலாம், அல்லது, அவர்கலுடைய கவிதைகள் இடம்பெறும் பக்கத்தில் வெளியிடலாம். சிலரின் விவரக்குறிப்புகளை மட்டும் வெளியிட்டு சிலருடையதை வெளியிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, வெறும் புகைப்படங்களை மட்டும் இந்தத் தொகுப்பில் வெளியிட எண்ணம். விலாசங்களையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி lathaa.r2010@gmail.com. இதைப் பார்ப்பவர்கள் பட்டியலில் இடம்பெர்றிருக்கும் தங்கள் சக கவிஞர்களிடம் விவரம் தெரிவிக்குமாறும் அவர்களுடைய புகைப்படங்களை அனுப்பித்தருமாறும் வேண்டிக்கொள்கிறேன். தொகுப்பில் இடம்பெற விருப்பமில்லாதவர்கள் அதைத் தெரிவித்துவிட்டால் நல்லது.
ஒரே கவிஞரின் இரு கவிதைகள் தவறுதலாகப் பட்டியலில் இடம்பெற்றிருந் தால் அதைச் சுட்டிக்காட்டும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பிருந்தால் பொங்கல் சமயம் புதுப்புனல் பதிப்பக அரங்கில் புத்தகக் கண்காட்சியில் நம்முடைய இந்த முயற்சியால் உருவாகும் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்க வழியுண்டு. நான் மொழிபெயர்த்து இந்தத் தொகுப்பில் இடம்பெறாமல் யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அந்தக் குறை அடுத்த தொகுப்பில் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும். இந்தத் தொகுப்பின் உருவாக்கத்தில் தன் எளிய உதவி என்று சக கவிஞர் தர்மிணி ரூ.4000 அனுப்பித்தந்திருக்கும் செய்தியை இங்கே நன்றியோடு பகிர்ந்துகொள்கிறேன். ஒரு தொகுப்பு ரூ.400 அளவில் வரும். தோழி தர்மிணிக்கு 5 பிரதிகளாவது அனுப்பிவைக்க எண்ணம் – அவர் இரண்டு போதும் என்று கூறியுள்ளபோதும். தொகுப்பிற்கு ஒரு சுருக்கமான அறிமுக உரையை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்கள் கவிதை மொழிபெயர்க்கப்பட்டதோ இல்லையோ சக கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு என் டைம்-லைனில் பதிவேற்றப்பட்டபோதெல்லாம் ஆர்வமாக வாசித்து மனமாரப் பாராட்டும் உங்கள் நட்புக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்
FLEETING INFINITY – VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி ! இடம்பெறும் கவிஞர்கள்:
1)ஆசு சுப்பிரமணியன்
2) அப்துல் ஹக் லரீனா
3) அப்துல் ஜமீல்
4) அமிர்தம் சூர்யா
5)அமுதகுணாளன்
6) அனா மிகா
7) அன்பில் பிரியன்
8) அனார் இஸ்ஸத் ரெஹானா
9) அன்வர் புஹாரி
10)அன்வர் முகமது
11) அபுநதா
12) ஆறுமுகம் முருகேசன்
13) பஹிமா ஜான்
14) பாலா கருப்பசாமி
15) போகன் சங்கர்
16) பூமா ஈஸ்வரமூர்த்தி
17) இரா.பூபாலன்
18) பைசல் பைசல்
19) டணிஸ்கரன் கந்தசாமி
20) தீன் கஃபூர்
21) இளங்கோ மதன்
22) ஃபிரோஸ்கான் ஜமால்தீன்
23) வ.ந.கிரிதரன்
24) குணா கந்தசாமி
25) இளங்கோ கிருஷ்ணன்
26) அய்யப்ப மாதவன்
27) ஜாஃபர் சாதிக்
28) ஜெயதேவன்
29) ஜிஃரி ஹாஸன்
30) ஜான்மேரி ரோஸ்
31) ஒணூ. செல்வா
32) கடங்கநேரியான் பெருமாள்
33) டி.கே. கலாப்ரியா
34) ஜி. கனிமொழி
35) கார்த்திக் திலகன்
36) கவிக் கவின்சூரியன்
37) கவின்மலர்
38) கவித்தாசபாபதி
39) க்ரிஷ் ராமதாஸ்
40) குமார் அம்பாயிரம்
41) லட்சுமி மணிவண்ணன்
42) லதா அருனாச்சலம்
43) லீனா மணிமேகலை
44) மானசீகன்
45) மகிழினி சரவணன்
46) மகுடேசுவரன்
46) மானசீகன்
47) மார்க் ஜனாத்தகன்
48) மீனாட்சிபுரம் தெய்வகுமார் முத்துக்குமாரசாமி
49) முகமது பாட்சா
50) மிஸ்பால் உல் ஹக்
51) சி.மோகன்
52) மௌனன் யத்ரீகன்
53) முகமது நிஸ்ரி
54) ஏ.கே.முஜாரத்
55) முல்லை அமுதன்
56) முர்ஷித் அகமது
57) ஏ.நஸ்புல்லாஹ்
58) நெடுந்தீவு முகிலன்
59) நெகிழன்
60) நேசமித்ரன்
61) நிர்மலா கணேஷ்
62) நிதா எழிலரசி
63) நந்தா குமாரன்
64) பாதசாரி
65) பாலைவன லாந்தர்
66) பழனிவேள்
67) பால்நிலவன்
68) பாம்பாட்டிச் சித்தன்
69) பால் ஜெயச்சந்திரன்
70) நா.பெரியசாமி
71) பொன் இளவேனில்
72) பொன் வாசுதேவன்
73) பிரபு
74) பிரதாப ருத்ரன்
75) புஷபராஜ் கந்தசாமி
76) ராகவப்ரியன் தேதஸ்வி
77) ராஜாஜி ராஜகோபாலன்
78) ராஜ் சௌந்தர்
79) ராமலிங்கம்
80) ரமேஷ் கோபால் கவுண்டர்
81) ரமேஷ் பிரேதன்
82) றாம் சங்கரி
83) ராணி திலக்
84) ரவி சுப்பிரமணியன்
85) ரிஷான் ஷெரீஃப்
86)ரியாஸ் குரானா
87) ருத்ரன் ரிஷி
88) சரவணன் கருணாநிதி
89) சசிகலா பாபு
90) சத்யராஜ் ராமகிருஷ்ணன்
91) சத்தியப்பிரியா
92) செல்வராஜ் ஜெகதீசன்
93) எம்.ஏ. சகி
94) ஷக்தி
95) சண்முகம் சுப்ரமணியன்
96) சிவகுமார் கூஈ
97) சிபிச்செல்வன்
98) சிவகுமார் ராஜாராம்
99) சூரர்பதி
100) சொர்ணபாரதி
101) சௌம்யா நட்புடன்
102) ஸ்ரீபதி பத்மநாபா
103) ஸ்ரீதேவி ரம்யா
104) ஸ்ரீனிவாசன் பாலாஜி
105) சுந்தர் நிதர்சன்
106) சூரியதாஸ்
107) சூர்யா வின்
108) தமிழ் மணவாளன்
109) தமிழ்நதி
110) தமிழ் உதயா
111) தர்மினி
112) தீபச்செல்வன்
113) தேன்மொழி தாஸ்
114) திருஞானசம்பந்தன் லலிதகோபன்
115) றாம் சந்தோஷ்
116) வைதீஸ்வரன்
117) வண்ணை சிவா
118) வசந்ததீபன்
119) வத்சலா ரமேஷ்
120) வேதா நாயக்
121) வேல்கண்ணன்
122) வெங்கட் நிழல்
123) விஜேந்திரா
124) விஜயலட்சுமி
126) யாழ் அகத்தியன்
127) யவனிகா ஸ்ரீராம்
128) எஸ்.கே.ஜமான்