இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயான ‘பேச்சுவார்த்தை’ பற்றி உலகத் தமிழர் பேரவை அரசியல் சமூகங்களின் வரலாற்றில் தனியார், குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுப்படையாக மக்கள் போன்றோர் தமது வாழவின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, சமுதாயத்தின் பொது நன்மையையை மேம்படுத்துவதற்காகத் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒன்றாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், மிக அரிதாகவெனினும், ஏற்படுவதுண்டு. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இப்படியான காலகட்டத்தில் உள்ளனர். வெற்றியீட்டிய இலங்கை அரசானது எம்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், அவர்களின் விடுதலையுரிமையை மறுத்தல், உடைமைகளைப் பறித்தல், அவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கான திட்டத்தைச் செயற்படுத்தல் ஆகிய அடாத்துக்களைத் தொடர்ச்சியாகக் குவித்து அவர்களை நிரந்தர அடிமை நிலைக்குத்தள்ள எத்தனிக்கின்றது. இவ்வாறான அரச அடக்குமுறைகளை எதிர்த்துத் தம் வருங்கால நலன்களையும் பாதுகாப்பையும் காப்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். மேற்கூறிய அடக்குமுறைகளை எம்மக்கள் வேறு வழியின்றி அமைதியாகச் சகித்து வாழ்ந்து வரும் இவ்வேளையில் நாம் எம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து தற்போதுள்ள அரசமுறையை மாற்றியமைப்பதற்கு எமது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்துதல் வேண்டும்.
தமிழ் பேசும் மக்களாகிய தமிழர், முஸ்லிம்கள் மீது இது போன்ற கொடுங்கோன்மை ஆட்சியை நிலைநாட்டுவதே சுதந்திரம்பெற்ற காலந்தொட்டு இலங்கை அரசின் வரலாறாக இருந்து வருகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்தாலும் இனப்பிரச்சினை முடிவடையவில்லை என நாம் நம்புகின்றோம். 1948 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்ற அடக்குமுறைக்குக் காரணமான அதே பேரினவாதச் சக்திகளையே தமிழ் மக்கள் இன்றும் எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைபினர் கடந்த ஓர் ஆண்டு காலமாக தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் கண்ணியமானதுமான ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். அத்தீர்வானது தமிழ் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்க வல்லதாகவும் அவர்களுக்கு அவர்களின் வரலாற்றுரீதியான வாழ்விடங்களில் மீளவொண்ணாத தன்னாட்சி உரிமையை வழங்க வல்லதாகவும் அமைவதோடு நாட்டின் அரசாட்சி முறையை மாற்றி அமைப்பதாகவும் இருத்தல் அவசியம். ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வைக் முன்னெடுத்து அதனை நேர்மையாகச் செயற்படுத்தச்செய்ய இலங்கை அரசை ஊக்குவிக்கும்படி அனைத்துலகச் சமூகத்தை நாம் வலியுறுத்துவோம். அவ்வாறான ஓர் உடன்பாடு ஏற்படுமிடத்து அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எமது ஆதரவை நல்குவோம்.
ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 44(0)7958 590196 அல்லது 1 917 512 2992
மின்னஞ்சல்: media@globaltamilforum.org
suren.surendiran@googlemail.com
Issued for immediate Press release: Global Tamil Forum on Government of Sri Lanka and Tamil National Alliance ‘Talks’
14 January 2012 – In the history of political societies, there are times, which come very rarely, when individuals, groups, organisations and peoples in general within it are required to shed their differences and connect one with another, united to repel the aggressive forces threatening their existence in order to promote the general good of society. The Tamil speaking peoples in Sri Lanka are passing through such times. The victorious Sri Lankan state is heaping a long train of abuses on them, occupying their lands, denying their liberty, usurping their property, pursuing a design to reduce them to perpetual servitude. It is the right of the oppressed to reject such state practices and guard their future welfare and security. Such has been the patient sufferance of these peoples that we need to dissolve our differences and strengthen our resolve to alter this system of governance.
The history of the present Sri Lankan state since independence is a history of establishing such a tyranny over its Tamil speaking peoples, both Tamils and Muslims. We believe that the ethnic conflict in Sri Lanka has not ended by ending the armed conflict. The Tamil speaking peoples are still subject to the same chauvinistic forces which have oppressed them since 1948.
We note that the elected representatives of the Tamil people in Sri Lanka the Tamil National Alliance (TNA) has engaged with the Government of Sri Lanka for the past one year, in dialogue to find a durable, and dignified political solution to the National Question. Such resolution must necessarily alter the governance structure of the country to recognise that the Tamil speaking peoples are entitled to the right to self- determination and granting to them irreversible autonomy in the areas of historic habitation. We for our part will support the full implementation of such an arrangement if agreed upon, and urge the international community to encourage the Sri Lankan Government to come up with such an acceptable political solution and ensure its genuine implementation.
Media Contact: Suren Surendiran
Tel: +44 (0) 7958 590196 or +1 917 512 2992
Email: media@globaltamilforum.org