தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 6

- மார்க் ட்வைன் -– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


அத்தியாயம் ஆறு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6முனைவர் ஆர்.தாரணிநல்லது. திரும்பவும் எனது கிழவன் பழையபடி முருங்கை மரம் ஏறி விட்டான். நீதிபதி தாட்சர் மீது அந்தப் பணத்திற்காக வழக்குப் போட்டான். நான் பள்ளிக்குச் செல்கிறேனா என்று என் பின்னால் வந்து உளவு பார்க்கவும் ஆரம்பித்தான். சில சமயங்களில் என்னைக் கைப்பிடியாகப் பிடித்து, கடுமையாக அடித்தான். ஆனால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒன்று அவனைத் தவிர்த்து விடுவேன் அல்லது அவன் என்னைப் பிடிக்கமுடியாத அளவு வேகமாக ஓடி விடுவேன். உண்மையில் பள்ளிக்குச் செல்வது எனக்கு முன்பெல்லாம் பிடிக்காத ஒன்று. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்வது என் அப்பாவை கடுப்பேத்தும் என்பதை உணர்ந்து தவறாமல் செல்ல ஆரம்பித்தேன்.

என் அப்பா போட்ட வழக்கோ மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வழக்கு நடத்தும் செயல்முறையை ஆரம்பிப்பதாகவே தெரியவில்லை. எனவே, அவ்வப்போது நான் நீதிபதி தாட்சரிடம் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் கடன் வாங்கி என்னை அடிக்காமல் இருக்க அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அவனுக்குப் பணம் கிடைக்கும்போதும் கண் மண் தெரியாமல் குடிப்பது மட்டும் அல்லாது கலாட்டா செய்து ஊரையே இரண்டாக்குவான். அப்படி ஊரில் கலாட்டா செய்யும் ஒவ்வொரு முறையும், அவனைச் சிறையில் அடைப்பார்கள். இந்த மாதிரி ஒரு வாழ்கை முறை அந்த மனிதனுக்கு மிகவும் சரியாகப் பொருந்தியது – அவனது பாதையைப் பொறுத்த வரை அவனுக்கு சரியாகப் பட்டது போலும்..

அந்த விதவையின் வீட்டைசுற்றியே அப்பாவின் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த விதவை கடும் எரிச்சலுடன் இவ்வாறு தொந்தரவு செய்தால் அவன் வாழ்க்கையை கடினமாக மாற்றிவிடப்போவதாக கடைசியாக அவரை எச்சரித்தாள். அது அவனை மிகவும் கடுப்படையச் செய்தது. ஹக் ஃபின்னுக்கு யார் உண்மையான பாதுகாவலர் என்று அவளுக்குக் காட்டப்போவதாகத் தெரிவித்தான். எனவே, ஒரு வசந்த கால நாளில் மறைந்திருந்து எனக்காகக் காத்திருந்து என்னைப் பிடித்துவிட்டான். என்னை இழுத்துக்கொண்டு ஒரு தோணியில் மேல் நோக்கி ஓடும் ஆற்றின் திசையில் மூன்று மைல்கள் கூட்டிச்சென்றான். அதன் பின் இல்லினோய் மாகாணத்தை நாங்கள் கடந்து சென்றோம். அடர்ந்த மரங்களால் மறைக்கப்பட்ட மரத்தினாலான தனித்திருக்கும் சிறிய குடிலுக்கு அழைத்துச் சென்றான். அப்படி ஒரு இடம் அங்கே உள்ளது முன்னமே அறிந்திருக்காத பட்சத்தில், நீங்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே இயலாது.

எல்லா நேரமும் அப்பா என்னை தன்னுடனே இருத்தி வைத்துக்கொண்டான். எனவே, தப்பி ஓட எனக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. நாங்கள் அந்த பழைய சிற்றறையில் வசித்தோம். அவன் எப்போதும் அந்த அறையைப் பூட்டி அதன் சாவியை இரவு வேளைகளில் தனது தலைமாட்டில் வைத்துக்கொள்வான். அவனிடம் ஒரு துப்பாக்கியும் இருந்தது. எங்கேயோ அதை அவன் திருடி இருக்கக்கூடும் என்று நான் யூகித்திருந்தேன். வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அதைப் பயன்படுத்தினோம். கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறையாவது என்னை அந்த அறையில் விட்டுப் பூட்டிவிட்டு தோணியை எடுத்து கீழ்த்திசை நோக்கி செலுத்தி அங்குள்ள கடையில் மீன் விற்று , மது வாங்கும் விளையாட்டுக்குச் சென்று விடுவான். நன்கு மூக்கு முட்டக்குடித்து விட்டு, கையிலும் மது பாட்டில் வாங்கி கொண்டு வந்து பழைய காலம் மாதிரியே பொறுப்பற்ற ஊதாரியாக வாழ்ந்து கொண்டிருந்தான், அந்த சமயங்களில் என்னைச் சரமாரியாக அடிப்பான், இதற்கிடையில் என் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த விதவை ஒரு ஆள் மூலம் என்னை திருப்பிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாள். ஆயினும், அந்த ஆளை அப்பா கையில் இருந்த துப்பாக்கி கொண்டு ஓட அடித்துவிட்டான். அங்கே குடியமர்ந்து நீண்ட நாள் ஆகவில்லை எனினும், எனக்கு அந்த இடம் பழக்கமாகி விட்டது. என் அப்பாவிடம் அடி வாங்கும் பகுதியைத் தவிர மற்றபடி அந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துத்தான் போனது.

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 5

- மார்க் ட்வைன் -– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


அத்தியாயம் ஐந்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5முனைவர் ஆர்.தாரணிஅறைக்கதவை அடைத்துவிட்டு நான் திரும்பிப்பார்க்கும் வேளை, அங்கே அவர், என் அப்பா. என்னை அவர் அதிகம் அடித்துத் துன்புறுத்துவதால், அவரைக் கண்டு எல்லாக்காலங்களிலும் நான் பயம் கொண்டிருந்திருக்கிறேன். .அதே போல்தான் அன்றும் பயந்தேன். ஆனால், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அவரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் தன்மை சிறிது மாறியவுடன், எனது மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துத்தளர்த்தினேன். அங்கே பயப்பட ஏதுமிலை என்பதை நான் உணர்ந்தேன்.

அவருக்கு வயது ஐம்பது இருக்கும். வயதுக்கேற்ற தோற்றத்தில்தான் அவரும் காணப்பட்டார். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, வழுவழுப்புடன், நீண்டு கீழே விழும் தலைமுடி வழியாக பளபளத்த கண்கள் திராட்சைக்கொடியினூடே கூர்ந்து நோக்குவதைப் போல் இருந்தது. அவரது தலைமுடியும், முடிச்சு விழுந்து நீண்டிருந்த அவரது தாடியும், கொஞ்சம் கூட நரைக்காமல் கருகருவென இருந்தது. அந்த முடிக்கற்றைகளினூடே வெளிப்பட்ட அவரது முகம், நோயுற்று வெளுத்துப் போயிருக்கும் வெண்மை நிறத்தில், மரத்தின் வெள்ளைத் தேவாங்கு அல்லது நீரின் ஆழத்தில் இருக்கும் மீன் போன்றவைகளின் நிறத்தில் இருந்தது. உங்களை கடும் பீதியில் ஆழ்த்த அதுவே போதுமானது. அவரின் ஆடைகள் கந்தலாக இருந்தன. அவர் தனது ஒரு காலை எடுத்து அதன் கணுக்காலை இன்னொரு காலின் முட்டியின் மீது வைத்து அமர்ந்திருந்தார். அவர் மேலே வைத்திருந்த காலின் பூட் கிழிந்து, காலின் இரண்டு விரல்பகுதிகள் அந்த ஓட்டை வழியே வெளியே தெரிவதை நீங்கள் நன்றாகக் காண முடியும். அந்த விரல்பகுதிகளை அவர் சிறிதாக அசைக்கவும் செய்தார். மேல்பக்கம் உள்ளே குழிந்து, தளர்ந்து இருக்கும் அவரது தொப்பியானது கீழே தரையின் மீது கிடந்தது.

நான் அங்கே நின்று அவரை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, அவரும் நாற்காலியில் இருந்துஅமர்ந்தவாறே, சுழன்று திரும்பி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். மெழுகுவர்த்தியைக்கீழே வைக்கும் வேளையில்தான் ஜன்னல் திறந்து கிடப்பதை, நான் கவனித்தேன். அப்படியானால் அவர் அந்த கூரைக்கொட்டகை வழியாக ஏறி ஜன்னல் வழியாக உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் என்னை மேலும் கீழும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் கூறியதாவது: “சலவை செய்யப்பட ஆடைகள் உனக்கு!. நீ மிகவும் மேலிடத்தை சார்ந்ததாக உன்னை எண்ணிக்கொள்கிறாயோ?”

Continue Reading →

‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..

சுடர் இதழொன்றின் அட்டைப்படம். ஓவியர் - இந்துஎண்ணிம நூலகமான ‘நூலக’த்தில் எழுபதுகளில் சுதந்திரன் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட ‘சுடர்’ சஞ்சிகையின் ஆடி 1975 தொடக்கம் ஜூன்/ஆடி 1983 வரைக்குமாக 32 இதழ்களைக் காண முடிந்தது. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தபோது வரதர், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை , எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தொடக்கம், அனலை இராசேந்திரம், காவலூர் ஜெகநாதன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, மண்டைதீவு கலைச்செல்வி, கோப்பாய் சிவம், கே.எஸ்.ஆனந்தன், இளவாலை விஜேந்திரன், வாகரைவாணன், கே.ஆர்/டேவிட், தென்மட்டுவில் கண்ணன், மங்கை கங்காதரம் என்று மேலும் பலரின் பல்வகைப் படைப்புகளையும் காண முடிந்தது. கலாமோகனின் இலக்கியக் கட்டுரகளையும் காண முடிந்தது.

கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த ‘சுடர்’ சஞ்சிகையும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்றாகக் கருதலாம். ‘சுடர்’ சஞ்சிகையில் மேலுள்ள எழுத்தாளர்களுடன் மேலும் புதிய எழுத்தாளர்கள் பலர் பங்களித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ‘சுடர்’ சஞ்சிகை மரபுக்கவிதை, புதுக்கவிதைக்கென பக்கங்களை ஒதுக்கியிருந்தது. புதுக்கவிதைப் பக்கத்தில் பல இளையவர்கள் எழுதியிருந்தனர். பக்கங்களில் ஆங்காங்கே நறுக்குக் கவிதைகளையும் கவிஞர்கள் பலர் எழுதியிருந்தனர். குறிப்பாகக் கவிஞர் காசி ஆனந்தனின் ‘கணைக் கவிதை’களைக் குறிப்பிடலாம். இவை தவிர ஆரத்தியின் ‘இலக்கியச் சோலை’ பத்தியில் எழுத்தாளர்கள் பலரைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள், வாழ்த்துக்குறிப்புகள் நிறைந்திருந்தன. வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி, அ.செ.முருகானந்தன், சாரதா சண்முகநாதன், தமிழ்ப்பிரியா என்று பலரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. மேலும் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பகுதியையும் சுடர் உள்ளடக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

Continue Reading →

மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

காப்பியத் தலைவனின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வில் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.
மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்” (மணி 25 – 228-231)

என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

ஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை

 - பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -உலக இயக்கமே இயற்கையை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயற்கையின் கொடையில்தான் உலக ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இயற்கையை காத்தலும் காத்த வகுத்தலும் நம் கடமை. உலக இயற்கை வளத்தில் நம் நாட்டின் பங்கு அளவிடற்கரியது. அத்தகைய இயற்கை வளத்தை நாம் பலவிதத்தில் அழித்து வருகிறோம். இயற்கை வளத்தின் இன்றியமையாமை பற்றி நம் வளரும் படைப்பாளர்கள் பல்வேறு விதங்களில் கூறியுள்ளனர். அவற்றை பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள் அனைத்தின் ஒட்டுமொத்த இயக்கமே இந்த உலகம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் இயக்கம் தடைபட்டாலும் இயற்கை பேரழிவுகள் நிச்சயம். அவற்றைப் போலவே ஒவ்வொரு பூதங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. ஒன்றினுடைய பாதிப்பு மற்ற அனைத்தையும் முடக்குவதாகவே இயற்கை அமைந்துள்ளது. இத்தகைய இயற்கையில் இருந்து தோன்றியவை தான் பல உயிரினங்கள். அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரிகள் தாமாகவே தோன்றி மறைந்து வருகின்றன. அந்த இயற்கையின் படைப்பில் பகுத்தறியும் திறன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் தான் மனித இனம். இவா்களிடம் சிக்கிக்கொண்ட இயற்கையானது படாதபாடுபடுகிறது. இதைத்தான் கவிஞர்,

இப்போது அடையாளங்களில்லை
அலங்காரங்களில்லை
அர்த்தங்களிலில்லை
(ந.ந ப 22)

என்ற கவிதையில் இயற்கையை அழிக்கும் மிகப் பெரிய சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இப்படி காடுகளையும் மரங்களையும் நாம் நாள்தோறும் அழித்து வந்தால் கடைசியில் இந்த உலகத்தில் எஞ்சி இருப்பது ஒன்றும் இல்லை. அவ்வாறு மரங்களை அழித்தால் ஏற்படும் பாதிப்பினை,

Continue Reading →

ஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உலகத்து உயிர்கள் ஒவ்வொன்றும் உயிர்வாழ்வதற்கும், அதனூடே இவ்வுலகினில் இடையறாத தொடர்ச்சி நிலையை அடைவதற்கும் உணவென்பது அடிப்படையானதொன்றாகும். மானுட சமூகமானது தொடக்க காலம் முதலாக பல்வேறு முறைகளில் உணவினை சேகரித்து வருவதென்பது, அதன் படிநிலை வளர்ச்சி நிலையினையும், நாகரிக முறையினையும் வெளிப்படுத்துவதாகும். கூடலூர் வட்டாரத்தொல் பழங்குடிகளான பணியர்,காட்டுநாயக்கர்,குறும்பர் போன்றோர் எத்தகு உணவுசெகரிப்பு முறையினை மேற் கொண்டுள்ளனர்,திராவிடப் பழங்குடிகளான இவர்கள் அதற்கு வழங்கும் சொற்கள் என்ன,அச்சொற்கள் பழந்தமிழோடு கொண்டுள்ள உறவு நிலைகளென்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவுச் சொற்கள்

பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்ற ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினங்கள் உடல் ஆதாரங்களைச் செலவிட்டு இயங்குகையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவ்வாதாரங்களின் இருப்பு நிலை மிகவும் குறையும்போது அது பசி எனும் உணர்வாக வெளிப்படுகிறது. உண்மையில் பசி என்பது உடலியல் இயக்கத்தின் போது அடிப்படை எரிபொருள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைவதைச் சுட்டிக் காட்டும் ஓர் உயிரியல் அளவு மானியாகும். பழங்குடிகளின் பண்பாட்டில் உணவு என்பது காடுகளில் கிடைக்கும் காய், கனிகள், கொட்டைகள், தேன். மேலும், கீரைகள், நண்டுகள், நத்தைகள், மீன்கள், வேட்டையாடிக் கிடைக்கும் காட்டு விலங்குகள் முதலானவற்றை கொள்ளலாம். இவைதவிர, தற்கால உணவு முறைகளுக்கும் அவர்கள் ஆட்பட்டுள்ளது பிற சமூகத் தொடர்பால் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். அவ்வாறு உணவுத் தொடர்பான அவர்களின் வழக்கில் காணும் தனித்தன்மையான சொற்களை அதன் பொருண்மை நிலைகளையும் சான்றுகளுடன் காணலாம்.

Continue Reading →

பழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பழங்குடிகளின் பண்பாட்டினையும்,வாழ்க்கை முறையினையும் இன அடையாளங்களையும் இனங்காணத் துணைபுரிவது, அவர்கள் மேற்கொண்டுள்ள மரபார்ந்த தொழில்களாகும். இத்தொழில்கள் அவர்தம் வாழ்நிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபட்டாலும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையும்,பண்பாட்டினை அடிப்படையாக கொண்டுள்ள பழங்குடிகள் அனாதி காலம் தொட்டு இடையறாமல் மேற்கொண்டு வரும் தொழில் என்பது காடுபடு பொருட்கள் சேகரித்தல் என்பதாகும். வேட்டையாடித் தங்களது உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்த பழங்குடிகள், அதற்கடுத்த நிலையில் செய்யும் தொழிலானது காடுபடு பொருட்களைச் சேகரிப்பதாகும். ‘மீன்பிடித்தல், தேன் எடுத்தல் ,காட்டில் கிடைக்கும் காய்கனிகள், கொட்டை வகைகள், கிழங்குகள், கீரைகள்,முதலானப் பொருட்களைச் சேகரித்தல், மரப்பட்டைகள், நார், மரப்பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து பிற மக்களுக்குக் கொடுத்து அவர்களிடம் இருந்து தேவையான பொருட்களைப் பெறுதல் ஆகியவை மூலம் உணவுத் தேவைகளை ஈட்டும் முறையை காடுபடு பொருட்களை சேகரிக்கும் முறையாகும்’. இவ்வாறு காடுபடு பொருட்களைச் சேகரித்து, தங்களது தேவைகளுக்கும், பண்டமாற்று முறையாகவும் பயன்படுத்தும் முறையானது பொதுவான ஒன்றாக பழங்குடிச் சமூகங்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையானது கூடலூரில் வாழும் தொல்பழங்குடிகளான குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோரிடம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

மீன்பிடித்தல்

வனம் சார்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன்களை பின்வரும் முறைகளில் பிடிக்கின்றனர். மடைமாற்றம் செய்தும், வலைபோட்டும், தூண்டில் வைத்தும், முறம் போன்ற கருவி கொண்டும் பழங்குடியினர் மீன்பிடிப்பதைக் இப்பகுதியில் காணமுடிகிறது. மீன் பிடிப்பதில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். இவற்றுள் பழங்குடிகளிடம் மேற்காணும் மீன்பிடி முறையானது பரவலாகக் காணப்படுவதை அறிய முடிகிறது.

Continue Reading →

பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள்!

பதிவுகளின் வாசகர்கள் விபரங்கள்..

‘பதிவுகள்’ இணைய இதழில் இப்போது நீங்கள் நியாயமான கட்டணங்களில் விளம்பரம் செய்யலாம். பதிவுகளில் தற்போது கூகுள் நிறுவன விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ‘அட் சென்ஸ்’ (Ad Sense) விளம்பரங்கள் தற்போது தமிழ் இணையத்தளங்களையும் புரிந்துகொள்கின்றன. அதனால் பதிவுகள் போன்ற தமிழ் இணையத்தளங்கள் பயனடைகின்றன.

‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ”பதிவுகள்’ இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். ‘பதிவுகள்’ இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் ‘பதிவுகள்’ விளம்பரம்‘ என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும்.


பதிவுகள் இணைய இதழுக்கு ஏப்ரில்  வரை  தந்தவர்கள், வாசித்த பக்கங்கள் மற்றும் மொத்த ஹிட்ஸ் பற்றிய விபரங்கள்.

இவ்விபரங்கள் பதிவுகள் தளத்தைப் பராமரிக்கும் ‘ஹொஸ்டிங்’ நிறுனத்தில் பதிவுகள் இயங்கும் ‘சேர்வ’ரில் நிறுவப்பட்டுள்ள Webalizer  மென்பொருள் மூலம் கிடைக்கப்பெற்றவை.

Continue Reading →

சிறுகதை: மச்சுப்படி வைக்கிறார்கள்

கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான சீனர்.அவருடைய மகன் ,மகள்…என கூட்டுக் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீட்டை விட்டுப் போறது தெரிந்தது.பார்க்கிற்குத் தான் போறார் .இவர், போகிற பிரகலாதன் பார்க்கிற்கு காலையிலே மற்ற சீனர்களும் வந்து … காற்றைக் கையால் வெட்டி,வெட்டி பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்

அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது. எழுபத்தஞ்சு … . இருக்கலாம். பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர். இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் ..  சேர்ந்து சரியா ய் பழகத் தெரியவில்லை .

சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு.  வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது. எதிர்படுற போது புன்னகைக்கிறது. இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம், அதைப் போய் குழப்புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.

பெரியவர் இவர்க்கு யாலுயாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள‌ மாட்டார்களா, என்ன !

இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள். சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள். ரேவதியும், கமலும் சரியான‌ உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும். இப்ப‌ நண்பிகள், நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.

சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 4

- மார்க் ட்வைன் -என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


அத்தியாயம் நான்கு

முனைவர் ஆர்.தாரணிநல்லது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள்  நிறைவுற்ற  பின்  தற்போது குளிர்காலத்தின் தொடக்கம். பெரும்பாலான சமயங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் நான் சில வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். ஆறும் ஏழும் முப்பத்தாறு என்ற அளவில் பெருக்கல் வாய்ப்பாடும் என்னால் சொல்ல முடிந்தது. ஆனால் என் வாழ்நாள்  முழுதும் வாழ்ந்தாலும்,  என்னால் அதற்கு மேல் போக முடியும் என்று தோணவில்லை. கணிதம் அந்த அளவுக்கு பயனுள்ளது என்று நான் கருதவில்லை.
முதலில் நான் பள்ளியை வெறுத்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவு அதிகமாக பள்ளிக்குச் செல்கிறேனோ, அவ்வளவு சுகமாக அது இருந்தது. அலுப்புத்தட்டும் வேளைகளில் ஹாக்கி

Continue Reading →