சனி, ஜூலை 7, 2012 – யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஆங்கில நிகழ்ச்சித் திட்டமே இந்த கண்காட்சியின் ஆரம்ப நோக்கமாக அமைந்திருந்தது. குறித்த பயிற்சியாளர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்காளிகளாக இருந்து வழிப்படுத்தியுள்ளனர். இதில் சிறுவர்களின் ஓவியங்களும் அவர்கள் எடுத்த ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒளிப்படங்கள் யாவும் தொண்டைமானாறு பிரதேசத்தினை மையமாகக் கொண்டதாகவே இருந்தன. வழிகாட்டிகளின் துணையுடன் ஒளிப்படக்கருவிகளை அவர்களிடமே கொடுத்து கிராமத்தின் பலம் பலவீனங்களை இனங்கண்டு அவைபற்றி சில வரிகளையும் எழுதி அவை காட்சிப்படுத்தப்பட்டன. படங்களுக்கான விளக்கம் தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தன.
ஒளிப்படங்கள் அதிகமும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி, ஏனைய அயற்கோவில்கள், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், கெருடாவில் குகை, நீர்த்தாங்கி, தொலைத்தொடர்புக் கோபுரம், சனசமூக நிலையங்கள், கிராமத்து வீதிகள், பாழடைந்த வீடுகள் மற்றும்கட்டிடங்கள், தொண்டைமானாறு கடற்கரை, தொண்டைமானாறு பாலம், குப்பை தேங்கியிருக்கும்இடங்கள், பற்றைக்காடுகள், வெங்காயப் பயிற்செய்கை, வரலாற்று முக்கித்துவம் உடைய எச்சங்கள் என்றவாறு அமைந்திருந்தன.
எங்கள் வளங்களை பிள்ளைகள் இனங்காணவும்அவற்றின் பலம் பலவீனங்களை அறிந்துகொள்ளவும் நல்லதொரு செயற்பாடாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் ஒளிப்படங்களும் கொண்ட கண்காட்சியில் இருந்து இருந்து சிலவற்றைத் தருகிறேன்.
மேலும் சில ஓவியங்கள்:
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்