சூழலைக் கெடுக்கும் 3 இலட்சம் டன் பட்டாசுப்புகை! 7 இலட்சம் பேரைக் காவு வாங்கும் காற்று மாசுபாடு! இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசுகளால் 3 இலட்சம் டன் பட்டாசுப் புகை, அதாவது 300 கோடி கிலோ பட்டாசுப் புகை காற்றில் கலக்கிறது. இதனால் புகையாகப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ 8000 கோடி ரூபாய். இந்தப் பணத்தைக் கொண்டு 60 கல்லூரிகள் கட்டலாம். 1200 பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். பட்டாசு விபத்துக்களால் ஒவ்வோர் ஆண்டு சராசரியாக 400 பேர் மரணமடை கின்றனர். 1,15,000 பேர் படுகாயமடைகின்றனர்.
தீபாவளிப் பட்டாசுகளில் வண்ணங்களை உருவாக்கவும், சத்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன:
சுவாசப் பாதையில் எரிச்சல், ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், உலோகப் புகை காய்ச்சல், உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு, ஈரப்பதம் காற்றுடன் வினைபுரிந்து தோல் பாதிப்புகள், குமட்டல், வாந்தி, மூளை வளர்ச்சி பாதிப்பு, கோமா நிலை.
குழந்தைகளுக்கு நுரையீரல்நோய்கள், மூச்சிளைப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் கோளாறுகள், சுவாசக்கோளாறுகள். நோய் எதிர்ப்புத்திறன் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும். தீபாவளிக் காலங்களில் இவ்வித நோய்கள் 40% அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஒருசில ஆண்டுகளில் இவ்வகைக் காற்று மாசுபாட்டால் உண்டான நோய்களால் இந்தியாவில் 7 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
மனிதனின் காதுகள் தாங்கக்கூடிய ஒலி அளவு 30 டெசிபல் மட்டுமே. ஆனால் தீபாவளி பட்டாசுகளில் மிக எளியதான குழந்தைகள் கையில் துப்பாக்கி மூலம் வெடிக்கும் கேப், பொட்டு வெடியே 70 டெசிபல் ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது. ஆட்டம் பாம் 145 டெசிபல், சரவெடி 142 டெசிபல், தண்டர்போல்ட் 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல்141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் 122 டெசிபல். இந்தச் சத்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர்ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படும்.
இந்திய தேசிய – பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை
இந்த மானங்கெட்ட பண்டிகைக்காக இந்தியாவில் கடந்த 2014 தீபாவளி வாரத்தில் மட்டும் சுமார் 200 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
தீபாவளிக்கால விற்பனைக்காக இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்.
பன்னாட்டு நிறுவனங்களான Amazon, Flipkart, snapdeal, Myntra, Jabong போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தீபாவளிக்கால விற்பனைக்காக விளம்பரங்களுக்கே 1300 கோடியைச் செலவு செய்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளின் விற்பனைகளை அடிப்படையாக வைத்து இந்த நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள 2015 ம் ஆண்டு விற்பனை இலக்கு 3 இலட்சம் கோடி ரூபாய்களாகும்.
புத்தாடை உடுத்த வேண்டும் என்று பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய ஆபாசக் கதையால் சூரத் நகர ஜவுளித்தொழில் வழியாக வடநாட்டு பட்டேல்கள் அடித்த கொள்ளை மட்டும் சுமார் 60 ஆயிரம் கோடி
பட்டாசுகளால் ஒவ்வொருஆண்டும் ஒரு வாரத்தில் விரயமாகும் தொகை சுமார் 8000 கோடி.
அரசு ஊழியர்களுக்கு போனஸ் என்ற வகையில் விரயமாகும் மக்கள் வரிப் பணம் பல ஆயிரம் கோடி.
தீபாவளி (2009) ஒரே நாளில் தமிழ் நாட்டில் மட்டும் டாஸ்மாக் சாராய விற்பனை ரூ 220 கோடி .
தமிழ்நாடு முழுதும் கிளைபரப்பி இனிப்பு விற்பனையில் கொள்ளைஅடிக்கும் சென்னை தி க்ராண்ட் ஸ்வீட்ஸ், அடையாறு ஆனந்தபவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற பார்ப்பன நிறுவனங்களும் பார்ப்பன அடிவருடிகளான அகர்வால் ஸ்வீட்ஸ் மார்வாடிகளும் சுருட்டும் தொகை பலநூறுகோடி.
இப்படி சுற்றுச்சூழலைக் கெடுத்து, இலட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்து, கோடிக்கணக்கான மக்களின் உடல்நலனைக்கெடுத்து. ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுப்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தையும் நாசப்படுத்தும் தீபாவளிப் பண்டிகையின் அடிப்படைக் கதையாவது அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா?
தீபாவளி என்றால் என்ன ?
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின் பேரில் மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து மீண்டும் விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவிசெய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத் தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத் திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது ? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப்பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத் தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக் காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால், இக் கல்விக் கூடங்கள் மடமை யையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்ன வென்று சொல்ல முடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில்தான் மானமும் அறிவும் விளையமுடியும்? – தோழர் பெரியார் ( ‘இந்து மதப்பண்டிகைகள்’ நூலில் இருந்து)
நுகர்வு வெறியைத் திணிக்கும் – சுற்றுச்சூழலைக் கெடுக்கும் – அறிவுக்கும், மானத்திற்கும், உடலுக்கும். உயிருக்கும் எதிரான – தீபாவளியைப் புறக்கணிப்போம்!
காதலர்நாள், மே நாள் – உழைக்கும் மக்களுக்காக உழைத்த பெரியார், அம்பேத்கர் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோம்!
(மேற்கண்ட தகவல்களை அனைவரும் துண்டறிக்கையாக, முகநூல், வாட்ஸ்அப் செய்திகளாகப் பரப்புங்கள்.)
kaattaaru2014@gmail.com