‘மண் மறவா மனிதர்கள்” அறிமுகவிழா – சென்னை – யாழ்ப்பாணம்

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவன் அவர்களின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அறிமுகவிழா அண்மையில் (15 – 04 – 2012) சென்னை ‘இக்சா” மையத்தில் (ICSA CENTRE) நடைபெற்றது.  பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘கலைமாமணி” வி. கே. ரி. பாலன் நூலினை வெளியிட்டுவைக்க எழுத்தாளர் – சட்டத்தரணி கே. நடராசன் பெற்றுக்கொண்டார். கவிஞர் பச்சியப்பன்ää திரு பாஸ்கர்ää கவிஞர் விஜேந்திராää கவிஞர் சொர்ணபாரதி, கவிஞர் யாழினி முனுசாமி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். கலைமாமணி வி. கே. ரி. பாலன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கவிஞர் யாழினி முனுசாமியின் ‘மோகினியுடனான சாத்தானின் உரையாடல்” என்ற நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. வி. ரி. இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார். ‘மண் மறவா மனிதர்கள்” நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் மாநகரிலும்ää அறிமுக விழாக்கள் அண்மையில் கொழும்பில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அறிமுகவிழா யாழ் நகரில் ‘டி. எம்; ஐ.” (DMI) கல்வி நிலைய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலாநிதி மனோன்மணி சண்முகததாஸ் , கலாநிதி செ. திருநாவுக்கரசு, மூத்த எழுத்தாளர் தெணியான், வட இலங்கை சர்வோதய இயக்குனர் பொ. யமுனாதேவி,  டானியல் வசந்தன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் எழுத்தாளர் கே. டானியலின் 26, வது நினைவு தினச் சொற்பொழிவும் இடம்பெற்றது.

vtelangovan@yahoo.fr