புதுமைத்தேனீ மா.அன்பழகன் பெறுகிறார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை வழங்கும் முதல் பரிசு “என் வானம் நான் மேகம்” நூலுக்கு!

புதுமைத்தேனீ மா.அன்பழகன்தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை,  கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப் பா¢சு அளித்து வருகிறார்கள். போட்டியில் கலந்துகொள்ளும் நூல்களை நடுநிலையான நீதிபதிகளைக்கொண்டு தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இவ்வாண்டு நமது உள்ளூர் எழுத்தாளரும் கவிமாலை பொறுப்பாளருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்ட 6 குறு நாவல்களைக் கொண்ட “என் வானம் நான் மேகம்” என்கிற நூலுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பா¢சளிப்பு விழாவில் அன்பழகனுக்கு 10,000 ரூபாய் ரொக்கமும், கேடயத்துடன் சான்றிதழும் கொடுத்துச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உள்ளூர் எழுத்தாளர் மா.அன்பழகனை தமிழ்முரசு பாராட்டுகிறது. தகவல்: discoverybookpalace@gmail.com