எது ஆண்மை ? எஸ்.பி.பாமாவின் ” தாயாக வேண்டும் ” நாவல் எழுப்பும் கேள்விகள்.

செயற்கை கருத்தரிப்பு,  சர்வாகேட் வுமன் *,  மிட் மதர் * " என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும்,  பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப்  பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.சுப்ரபாரதிமணியன்மலேசியா கோலாலம்பூரில் ந்டைபெற்ற , நான் கலந்து கொண்ட  மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நாவல் பட்டறையில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள்,  தங்களுக்குப் பிடித்த நாவலைப் பற்றி பேச வேண்டும் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இடம் பெற்ற நாவல்களின் பட்டியலில் அதிக எழுத்தாளர்களைக் கவர்ந்தவையாக மலேசிய எழுத்தாளர்களின் இரு நாவல்கள் இடம் பெற்றன.

1. ரெ.கார்த்திகேசுவின் ” சூதாட்டம் ஆடும்  காலம் “
2. எஸ்.பி.பாமாவின் ” தாயாக வேண்டும் “
 
செயற்கை கருத்தரிப்பு,  சர்வாகேட் வுமன் *,  மிட் மதர் * ” என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும்,  பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப்  பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.

சந்திரனும் மேனகாவும்படித்து வேலைக்குப் ”போன ஜாதியில்”   நட்பாகி,  திருமணம் செய்து கொண்டவர்கள் தான். சந்திரன் பெண்ணை பாலியல் ரீதியாக திருப்தி படுத்துபவன்தான். ஆனால் உயிர்சத்து இல்லாதவன். எனவே குழந்தை  பாக்கியம் இல்லாமல் போகிறது. பொட்டையன், ஒன்பது என்ற வசவுகள் மறைமுகமாக அவன்மீது வீசப்படுகிறது. அண்ணன் ராஜாராமிடமிருந்து விந்தைப்  பெற்று தாயாக சந்திரன் சிபாரிசு செய்கிறான். மேனகாவுக்கு அதிர்ச்சி. ஒரே குடும்பத்திலிருந்தா?  குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஒத்துக் கொள்ளச் செய்கிறது. மேனகா கர்பமாகியிருக்கும் போது  அண்ணனின் பூரிப்பும் சந்தேக மிருகத்தை அடக்கி வைத்துப் பார்ப்பதில் அதன் பின் சந்திரன் போராடி ஓய்ந்து போகிறான். வளைகாப்பு, பிரசவம், குழந்தை வளர்ப்பு என்ற நிலைகளில் சந்தேக மிருகம் விஸ்வரூபித்து  அடங்குகிறது. இந்த மிருகம் ஆடும் ஆட்டத்துள் மூவரும் அகப்பட்டு உச்சபட்சமாய் சந்திரன் சிதைந்து போகிறான். ஒரே வீட்டில் இருக்கும் அபாயம் தவிர்த்து,  வேலையில் மாற்றல் கேட்டு மனைவி பெற்ற பிள்ளையை அண்ணனிடம் விட்டுவிட்டு வேறு ஊருக்கு மனைவியுடன் போகிறான். பிரச்னையின் தீர்வாக பாமா வைக்கும் இறுதிக்கட்ட விசயம் வெகுசுவாரஸ்யமானது.
                                         
பாமாவின் எழுத்தின் தீவிரம் பலவகையில் வெளிப்பட்டிருக்கிறது.. பாலியல் ரீதியான உடம்பு சுகத்திலிருந்து  பிள்ளையாய் கரு இன்னொரு உடம்பாய் மாறும் சுகம் வரைக்கும் ஒளிவு மறைவில்லாத சிலாய்கிப்புகள். கர்ப்பிணி உடல் சார்ந்த பூரிப்பு, சமையல் ருசி, குழந்தைக்கு பெயர் தேர்வு, குழந்தையின் மலவாடையை ரசிப்பது, மலம்கூட ரசிக்கத்தக்கதாய் மாறுவது என்றெல்லாம் சரளமாக எழுதிச் செல்கிறார்.

பிறக்கும் குழந்தை அண்ணனின் அச்சு போல பிறந்தால் மற்றும் அண்ணனின் தாவக் கொட்டை கீறல் முகமாக பிறந்தால் என்ன செய்வது என்ற பயம் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. இதற்கு ஒப்புவமையாக கலைஞர் கருணாநிதியின் கதை      ” வான்கோழி ” சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆண்மையில்லாத கணவன் வேலைக்காரனைக் கொண்டு மனைவியைத் திருப்தி படுத்துகிறான். பிறக்கும் குழந்தை வேலைக்காரனின் சாயலில் அவனின் ஆறு விரல்களைக் கொண்டே பிறக்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் சாதாரண குடும்ப நபர்களை  இத்துடன் தொடர்புடன் பாதிப்பதையும், தமிழ்த் திரைப்படங்கள் தமிழர்களை பாதிக்கிற விசயத்தின் ஆய்வாகக் கொள்ளலாம். இந்த ஆய்வு சமாச்சாரத்தைப் போல பாமா தேர்ந்த சமையல் குறிப்புகள், திரைப்படங்கள், இலக்கியக் குறிப்புகள், பத்மா என்ற பெண் எழுத்தாளரின் படைப்புகள் என்று பல்வேறு அடுக்குகளில் நிரப்புகிறார். இது நாவல் வாசிப்பில் சுவாரஸ்யம் கூட்டுகிறது. இதைத் தவிர கன்னிமேரி  யேசு, நாய் பிணத்தைக் காணும் யேசுவின் வெள்ளைப் பல் தத்துவம் உட்பட பல, சுவாரஸ்யத்துக்குப்  பயன்படுக்கின்றன.

ஒரே குடும்பத்து அண்ணன் தம்பி பங்காளிகள் ஆகிற அவலம் கூட்டு குடும்ப சிதைவின் அதிர்ச்சியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதன் உச்சகட்டமாய் சந்திரனின் உரத்த அழுகையை எவ்வகையிலும் அதீதமாக எடுத்துக் கொள்ளமுடியாது.

செயற்கை கருத்தரிப்பு,  சர்வாகேட் வுமன் *,  மிட் மதர் * " என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும்,  பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப்  பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை பல சிறுகதைகளிலும் வானொலி தொலைக்காட்சி  நாடகங்களிலும் பதிவுசெய்திருக்கும் பாமா, இதில் விந்துதானம் பிரதானமாகவே என்றாலும்  அதை சிறு கீற்றுகளாக அங்கங்கே உலவ விடுகிறார். எஸ்டேட்டில் வெள்ளைக்காரர்களின் ஆதீக்கம் பற்றி குறிப்பிடுகிறார். வெள்ளைக்காரனுக்குப்பின் வந்த தமிழனும், கிராணியும், மேனேஜரும் மக்களை பாடு படுத்திய விதத்தில், தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் அவலம் தெரிகிறது. விந்துதான சிகிச்சை சிங்கப்பூரில் நடப்பதாக காட்டப்படுகிறது. மலேசியாவில் அதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லை என்பது எங்கும் சொல்லப்படவில்லை. அரவாணிகள் பற்றிய எழுத்து வெளிப்பாட்டிற்கு மலேசிய அரசு நிர்வாக சமுகம் அனுமதித்தாலும், ஓரினப்புணர்ச்சியாளர்கள் பற்றிய எழுத்துக்கு அனுமதி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. தலித் இலக்கிய வகைப்பாட்டிற்கான சமூக சூழல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

விந்துதானம் செய்தபின் ஒரு குடும்பத்து அண்ணன் தம்பிகள் மத்தியில் ஏற்படும் உளவியல் சிக்கல்களை விரிவாகச் சொல்லும் இந்நாவலில் எது ஆண்மை என்று ஒரு விவாதப் பகுதிபோல் பல விசயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் உணர்வுகளின் மொத்த வடிகாலாக அமைந்திருக்கும் தீவிரமானப் பகுதிகள் தீவிர பெண் எழுத்தின் வலிமையைப்  புலப்படுத்துகிறது. எது பெண்மை என்று அதே சமயம் சிந்தனையைக் கிளறுகிறது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இயங்கும்  பெண்களின் உலகத்தை துல்லியமாக காட்டுகிறது. அதை தாண்டி உலகம் மிகப் பெரியது. அதை கவனிக்கத் தவறியிருக்கிறார்.

நாவல் பட்டறையில் அவரின் அடுத்த நாவலின் கதாநாயகன் பவித்திரன் என்று தெரிவித்தார். இந்த நாவலில் விந்துதானத்தில் பிறந்த குழந்தைக்கு பவித்திரன் என்றே பெயரிட்டு இருக்கிறார். பவித்திரம்  தூய்மையானது, உண்மையானது,  ராஜாராமின் விந்துதானத்தில் பிறந்தவன் என்றாலும் தூய்மையான உறவில் பிறந்தவன். அந்த உயிரணுவைக் கொடுத்தவனும் தூய்மையானவன், அதை சுமந்து பெற்றவளும் தூய்மையானவள், ரேவதியும் சந்திரனும் தூய்மையானவர்கள் என்ற குறிப்பு நாவலில் காணப்படுகிறது.

( தாயாக வேண்டும் எஸ்.பி.பாமா நாவல், உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா. கிளை – தமிழகம்,  )

subrabharathi@gmail.com /  9486101003