“தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை “

ந.பிச்சமூர்த்திதமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் .பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் . பிச்சமூர்த்தி ஆவார். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய .பிச்சமூர்த்தி தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டமாகத் திகழும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடேச தீட்சிதர்காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். 

அவருடைய இயற்பெயர் வேங்கட மகாலிங்கம் என்பதாகும். இவருக்கு முன்னர் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் இறந்து விட்டதால் வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை , பிச்சை என்று இவருடைய பெற்றோர்கள் மாற்றி வைத்தார்கள். அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில்பிச்சைஎன்று அழைத்தனர். இங்ஙனம் பெற்றோர்களால்பிச்சை” என்று அழைக்கப்பட்டவரே பின்னாளில் பிச்சமூர்த்தி ஆனார்.

பிச்சமூர்த்தியின் தந்தை ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தவர். இத்தகைய காரணத்தால் கலை, சமயம், பண்பாடு, கல்வி, தொண்டு இவற்றில் ஊறி இருந்த ஒரு குடும்பப் பின்னணியில் பிச்சமூர்த்தி வளர்ந்தார். பிச்சமூர்த்திக்கு ஏழு வயது ஆகியபோது அவரது தந்தை காலமானார். தந்தையை இழந்த சூழலில் பிச்சமூர்த்தி கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். பின்னர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தத்துவத்தைப் பாடமாக எடுத்து பி.. இளங்கலைப் பட்டம் முடித்தார். அதன்பின்னர் சென்னையிலுள்ள சட்டக்கல்லூரியில் வழக்குரைஞர் படிப்பையும் முடித்தார்.

1925-ஆம் ஆண்டு பிச்சமூர்த்தி சாரதா என்ற பெண்மணியை மணந்தார். பிச்சமூர்த்தி 1924-ஆம் முதல் 1938-ஆம் ஆண்டு வரை கீழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இக்காலங்களில் கும்பகோண நகரசபை உறுப்பினராகவும் பிச்சமூர்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பதினெட்டு ஆண்டுகாலம் தொடர்ந்து இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகப் பணியாற்றினார்.

அதன்பின்னர்ஹனுமான்’, ‘நவ இந்தியா’ பத்திரிகைகளில் துணை ஆசிரியராகவும் பிச்சமூர்த்தி பணியாற்றினார். பிச்சமூர்த்தி பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றினார். முதலில்ஹனுமான்பின்புநவ இந்தியாஆகிய பத்திரிகைகளில் இவர் ஏற்றுக்கொண்ட பணியும், தொடர்ந்து சுதேசமித்திரன், சுதந்திரச்சங்கு, தினமணி, மணிக்கொடி என்று பல பத்திரிகைகளுடன் பிச்சமூர்த்தி கொண்டிருந்த தொடர்பு ஆகியவை பிச்சமூர்த்தியை அவரை அறியாமலேயே எழுத்துத் துறைக்கு இழுத்து வந்தது எனலாம். . பிச்சமூர்த்தி பத்திரிக்கை ஆசிரியராக மட்டுமல்லாமல் நடிகராகவும் விளங்கினார். 1938-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டஸ்ரீராமானுஜர்’ திரைப்படத்தில் பிச்சமூர்த்தி ஆளவந்தார் வேடத்தில் நடித்தார் என்பது நோக்கத்தக்கது.

பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். பிச்சமூர்த்தி குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஓராண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து துறவறத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்து திரிந்தார். 1935-ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சென்று ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் தனக்குத் துறவறத்தை நல்குமாறு மனமுருகி வேண்டினார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று எடுத்துரைத்து பிச்சமூர்த்தியை இல்லறத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனை ஒரு கட்டுரையில் பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருப்பது நோக்குதற்குரியதாகும்.

பிச்சமூர்த்தி ஆன்மீகச் சிந்தனைகள் மீது மட்டுமல்லாது, காந்தீயத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இளமையிலேயே காந்தீய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதிலும், நகரச் சுத்திகரிப்பு வேலைகளிலும் பிச்சமூர்த்தி ஈடுபட்டிருந்தார். பிச்சமூர்த்தியின் இளம் வயது தொட்டு கு.. ராஜகோபாலன் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதிய பிச்சமூர்த்தி, பின்னர் பாரதி இலக்கியத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தமிழில் எழுதத் தொடங்கினார். முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதினார். பின்னர்த் தமிழில் எழுதத் தொடங்கினார். பிக்ஷு, ரேவதி என்னும் புனைப் பெயர்களில் பிச்சமூர்த்தி எழுதினார். மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் சிறப்பாக எழுதிய தொடக்கக் காலப் படைப்பாளிகளில் ஒருவர் . பிச்சமூர்த்தி விளங்கினார். பிச்சமூர்த்தி மணிக்கொடி இதழில் (1934) காதல் என்ற தலைப்பில் தனது முதல் புதுக்கவிதையை எழுதினார்.

பிச்சமூர்த்தியின்ஸயன்ஸுக்குப் பலி’ என்ற முதல் தமிழ்ச் சிறுகதை 1932-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியானது. இவரது முதல் புதுக்கவிதைகாதல்’ என்ற தலைப்பில் 1934-ஆம் ஆண்டு வெளியானது. கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்றமுள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதைதான் தமிழிலக்கிய உலகத்தில பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத் தந்தது எனலாம். பிச்சமூர்த்தி தொடர்ந்து கலைமகள், .ரா. ஆசிரியராக இருந்த மணிக்கொடி, பின்னர் ராமையாவின் மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகிய பத்திரிக்கைகளில் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதினார்.

பரிவும், மனிதாபிமானமும் கொண்ட நல்ல எழுத்தாளராகத் திகழ்ந்த பிச்சமூர்த்தியை அவரது இயற்கையை நேசிக்கும் பண்பானது, கவிதைப் பக்கம் தானாகவேத் தள்ளிக் கொண்டு வந்து விட்டது எனலாம். மேலும் பாரதியின் கவிதைகள் மற்றும் வசன கவிதைகள், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்னும் கவிதை ஆகியவற்றால் தூண்டப்பெற்று பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுதத் தொடங்கினார் என்பது நோக்கத்தக்கது.

பார்க்கின்ற இயற்கைக் காட்சியெல்லாம் கவிதை உணர்வாய், வார்த்தைக் கோலமாய் அவர் உள்ளத்திலிருந்து ஊற்றாய்ச் சுரந்தது. யதார்த்தப் பார்வையும், பார்த்ததை அப்படியே வரிகளில் தேக்கி வார்த்து எடுக்கும் நேர்த்தியும் அவரைக் கவிதையை நேசிக்க வைத்தது. பாரதி ஏற்கனவே கொஞ்சம் கொத்தி சீர்படுத்தி வைத்திருந்த வசனக்கவிதை ராஜபாட்டை, சுகமான பயணத்திற்கு வசதியாயிற்று. கற்பனைப் பூச்சு இல்லாத பாதிக்கும் உணர்வுகளை நேரடியாகக் கொட்ட அதுவே உணர்வுபூர்வமான வடிகாலானது.

இந்த காலகட்டத்தில்தான் சி.சு. செல்லப்பா திடீரென்று ஏற்பட்ட ஒரு உத்வேகத்தில்எழுத்துபத்திரிகையை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடலானார். தனது நெருங்கிய சக எழுத்தாள நண்பர்களிடம் கதைகள் எழுதித் தருமாறு கடிதம் எழுதினார். செல்லப்பா பிச்சமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். கடிதம் பெற்ற பிச்சமூர்த்தி அந்த குறைந்த அவகாச காலத்தில், கைவசம் சிறுகதை ஒன்றும் இல்லாததால், ‘பெட்டிக்கடை நாரணன்என்று ஏற்கனவே வெளியாகி இருந்த ஒரு கவிதையை அனுப்பி வைத்தார்.

அந்தக் கவிதையும், அதை பிச்சமூர்த்தி வசன வார்த்தைகளாய் அமைத்திருந்த முறையும் பலரையும் கவர்ந்த்து. இதனால் பலருக்கும் இவரைப் பின்பற்றி இப்படியே இனிக் கவிதை எழுதலாம் என்கிற புது உற்சாகமும், உந்துதலும் அவர்களுடைய மனதில் ஏற்பட்டது எனலாம். அதிலும் குறிப்பாக எளிமையான கவிதை எழுதுகிற ஆசை மாணவர்களிடையே வெகுவாகப் பரவிற்று.

தமிழின் முதல் புதுக்கவிதையாகபெட்டிக்கடை நாரணன்என்ற கவிதை அனைவராலும் அறியப்பட்டு சிறப்பாகப் பாராட்டப்பெற்றது. ‘பெட்டிக்கடை நாரணன்என்ற அந்தக் கவிதை மிகவும் எளிய மொழியில் பேசப்படுவது; எளியோருக்காக நியாயம் கேட்பது; சமூக நலனை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. .பிச்சமூர்த்தியின் நெஞ்சிலிருந்து புறப்பட்ட கனல் தான் அக்னியை வளர்க்காமலேயே அங்கத மொழியில் இப்படி ஒரு கவிதையாயிற்றோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சந்தத்தைத் தக்க வைத்துக் கொண்டு தனது ஆரம்பகாலக் வசன கவிதைகளை பிச்சமூர்த்தி எழுத முற்பட்ட பொழுதே பலரின் பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. புதுமைப்பித்தன் கூட கவிதை யாப்பதில் நிகழ்ந்த இந்தப் புதுமையை மறுத்து, இவையெல்லாம்கோவேறுக் கழுதை‘, வெஜிடபிள் பிரியாணிபோலத்தான் என்று விமர்சனம் செய்தார். ஆனால் அவரே அடுத்த வருடத்தில் பிச்சமூர்த்தியைப் பின்பற்றி புதுக்கவிதைகளை எழுதினார்.

இவ்வாறு ஒரு கால் நூற்றாண்டு தத்தளிப்புக்குப் பின், பிச்சமூர்த்தியின்பெட்டிக்கடை நாரணன்புதுக்கவிதையின் வரவால் தமிழக கவிதை இயக்கம் ஒரு புதுப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்தது. . பிச்சமூர்த்தியின் இக்கவிதையானது, தமிழ்க் கவிதை உலகில் ஒரு புது மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த்து எனலாம். இங்ஙனம் பிச்சமூர்த்திபெட்டிக்கடை நாரணன்என்ற புதுக்கவிதையைப் படைத்ததன் வாயிலாகத் தமிழ்ப் புதுக்கவிதை உலகின் தந்தை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

புதுக்கவிதையின் தந்தையாகிய . பிச்சமூர்த்தி, சிறுகதைகள், புதுக்கவிதைகள் மட்டுமல்லாதுமனநிழல்” என்ற தலைப்பில் கட்டுரைகளையும், சிறுவர்களுக்கான கதைகள், ஓரங்க நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதினெட்டாம் பெருக்கு (1944); காளி (1946); ஜம்பரும் வேஷ்டியும் (1947); மோகினி (1951); குடும்ப ரகசியம் (1959); பிச்சமூர்த்தியின் கதைகள் (1960); மாங்காய்த் தலை (1961); வழித்துணை (1964); குயிலின் சுருதி (1970); காக்கைகளும் கிளிகளும் (1977); மனநிழல் (1977); பிச்சமூர்த்தி கவிதைகள் ஆகிய பிச்சமூர்த்தியின் புத்தகங்கள் 1985-ஆம் ஆண்டில் வெளிவந்தன.

புதுக்கவிதைகளின் முக்கியப் பண்பான படிமங்களைப் பயன்படுத்தி ஆழம் தந்தவர் பிச்சமூர்த்தி. பூக்காரி என்ற கவிதையில் அன்பும் அஹிம்ஸையும் போன இடம் தெரியாததை,

“வானெங்கும் எஃகிறக

தெருவெங்கும் பிணமல

பீரங்கிக் குரல்பேசக

கேட்டதொரு வேறுகுரல

அன்பும் அஹிம்ஸையும்

விற்றுவந்தேன் ஆதிமுதல

பூக்காரி பூவைப்போலக

கண்ணெடுப்பார் யாருமில்ல

எஃகிறகின் உயரம

தெய்வக்குரல் ஏறவில்லை”

எனப் படிமக் காட்சியாகக் காட்டுகின்றார். இவரது கவிதைகள் திருமூலரின் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதால் இவரைத் தமிழ்ப் புதுக்கவிதையின் திருமூலர் என்றும் அழைக்கின்றனர்.

பிச்சமூர்த்தி எழுதிய பல கதைகளுக்கு இடைஇடையே கூட புதுக்கவிதை போன்றதொரு நடை வந்து விட்டுப் போகும். தன்னை மீறிய ஒரு ரசிப்பின் வெளிப்பாடு அவற்றில் உண்டு. பிச்சமூர்த்தியையும், இந்த ரசிப்பையும் பிரித்துப் பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

‘குட்டிக் குளவி’ கதையில் குளவி பற்றிய வர்ணனையில், “என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!”எனக் கதைக்கு இடையில் இவ்வாறு நயமுற எடுத்துக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. பிச்சமூர்த்தி தம் இறுதி நாள் வரை புதுக்கவிதைகளை எழுதினார். அவர் 83 சிறந்த கவிதைகள் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் 7 குறுங்காவியங்கள் ஆகும்.

இங்ஙனம் தமிழ்ப் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அதனை வளப்படுத்த அயராது பாடுபட்ட தமிழ்ப் புதுகவிதையின் தந்தையாகிய பிச்சமூர்த்தி 1976-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் நாள் தனது எழுபத்தி ஆறாவது வயதில் சென்னையில் காலமானார். தமிழின் புத்திலக்கியத்தின் முன்னோடி மறைந்தாலும் அவர் உருவாக்கிய புத்திலக்கியம் அவரின் பெயரை என்றென்றும் தமிழிலக்கிய வரலாற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

malar.sethu@gmail.com