கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்”

கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்"இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada.; காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி  தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.

“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம்  ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.

இந் நிகழ்வில் நக்கீரன் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்), பொன்.பாலராஜன் (நாடு கடந்த தமிழீழ அவை), ராஜ் சுப்பிரமணியம் (கனடியத் தமிழர் தேசிய அவை), தேடகம், ரகுமான்கான் (மே 18 இயக்கம்), பகீரதன் (Canadian Human Rights Voice) ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவிஞர் சேரன், கவிஞர் சுல்பிகா, நேரு குணரட்ணம், ஈழவேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.

மதிய உணவு வழங்கப்படும். ஆர்வலர்கள் அனைவரையும் இக் கருத்தாடல் களத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
தொடர்புகட்கு: 416-568-2450, 647-237-3619, 647-891-8597
 
-ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம்-

தகவல்: முரளிதரன் நடராஜா: nmuralitharan@hotmail.com