சிறுகதை: துக்கத்தின் உச்சம்!

செகாவ்வின் சிறுகதை: துக்கத்தின் உச்சம்!.அன்டன் செகாவ்[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து)  அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.

 அதுவும் அவரைப் போலவே இயக்கமற்றிருந்தது. எலும்புந்தோலுமாயிருந்த அதன் கால்கள் மரத்தால் செய்யப்பட்டவை போலிருந்தன. ருஷ்ண நாணயத்தில் ஒரு கொப்பெக் மதிப்புடைய ஜிஞ்சர்பிரெட்  குதிரையை ஒத்திருந்தது அதன் தோற்றம். அதுதான். எந்தச் சந்தேகமும் இல்லை. திடீரென நினைவுகளினூடாக ஆழ்ந்தார் ஐயோனா. பனிபடர்ந்த பகுதியிலிருந்து பனிவாriயால் திடீரெனக் கைப்பற்றப்பட்டுப் பிரம்மாண்டமான ஒளி நிறைந்த பள்ளத்தில் வீயெறியப்பட்டால் எப்படியிருக்கும்? நீடித்த வேகத்திலிருக்கும் மக்களிடையே இது நிகழ்ந்தால், அதை நினைத்துப் பார்ப்பது கூட உங்களுக்குக் கடினமாயிருக்கும். ஐயோனாவும் அவருடைய சிறு குதிரையும் வெகுநேரம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. இரவு உணவுக்கு முன் அவர்களுடைய இடத்தை விட்டு வந்திருந்தார்கள். மூடுபனி நகாpன்மேல் இறங்கிக் கொண்டிருந்தது. விளக்குகள் பளிச்சிட்ட வெண்ணிறக் கதிர்களை மூடுபனியின் இடத்திற்கு இடம் மாற்றிக் கொண்டிருந்தன. அந்தத் தெருவின் இரைச்சல் வேறு அதிகமாகிக் கொண்டேயிருந்தது. ‘வண்டியோட்டியே விபார்க் செல்லலாமா’ திடீரென ஐயோனா ‘வண்டியோட்டி’ என்ற சொல்லைக் கேட்டார்.
 
அந்த இடத்திலிருந்து ஐயோனா குதித்தார். தலையை மூடியிருக்கும் பெரும் அங்கி அணிந்திருந்த அதிகாriயை ஐயோனா அவருடைய பனிபடர்ந்த இமைகளின் வழியாகப் பார்த்தார். ‘விபார்க் போகலாமா?’ என்றார் அவர். ‘என்ன தூங்கிக்கிட்டு இருக்கீங்களா? விபார்க் போகலாமா’ மறுபடியும் கேட்டார் அதிகாரி.
 
ஐயோனா தலையசைத்து இசைவைத் தெரிவித்ததுடன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுக்கவும் செய்தார். அதைத் தொடர்ந்து குதிரையின் பின்புறத்திலும் அதன் கழுத்திலும் படர்ந்திருந்த பனி அடுக்குகள் கீழே சாய்ந்தன. குதிரையால் இழுத்துச் செல்லப்படும் அந்தப் பனிச்சறுக்கு வண்டியில் அதிகாரி ஏறி அமர்ந்தார். வண்டியோட்டி குதிரையை ஓடத் தயார் செய்வதற்காக அவருடைய உதடுகளின் மேல்உள்ளங்கையால் அடித்துச் சத்தமெழுப்பினார். அவருடைய கழுத்தை அன்னப் பறவையைப் போல் நீட்டினார். ஐயோனா அமர்ந்தவாறே வழக்கத்திற்கு மாறாகத் தேவைக்கு அதிகமாகச் சாட்டையைச் சுழற்றினார். அவருடைய குதிரையும் கழுத்தை நீட்டியதுடன், மரத்தால் செய்யப்பட்டது போன்ற அதன் கால்களை வளைத்துத் தெளிவற்று நகர ஆரம்பித்தது. நகரத் துவங்கியவுடன் முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்த இருளினூடாக இருந்து ‘பௌர்ணமி நாளின் ஓநாய் மனிதனே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ற உணர்ச்சி மிகுந்த குரலைக் கேட்டார் ஐயோனா. ஐயோனா குதிரையிடம், ‘நீ எங்கே போகிறாய் சைத்தானே? வலதுபுறம் திரும்பு’ என்றார். உடனே அதிகாரி சினத்துடன், ‘உங்களுக்கு வலப்புறமாகச் செல்லத் தெரியாதா?’ என்று கேட்டார். ஐயோனாவை ஒரு கோச் வண்டியோட்டி கடுமையாகத் திட்டிக் கொண்டே போனார். சாலையைக் கடந்த பாதசாரி ஒருவர் குதிரையின் மூக்கை உரசிக் கொண்டு போனதுடன் சீற்றத்தோடு அவரது சட்டைக் கையின் மேலிருந்து பனியை அகற்றினார். அவருடைய இருக்கையில் தேவையற்று அங்குமிங்கும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார் ஐயோனா. அவருடைய சமநிலையைத் தக்க வைக்க முழங்கைகளை நகர்த்திக் கொண்டிருந்தார். யாரோ மூச்சுத் திணறுவது போல உற்று நோக்கிக் கொண்டிருந்தார். என்ன காரணத்துக்காக அவர் அப்படிச் செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் புriயவில்லை. அதிகாரி, ‘அவங்க எல்லாம் பொறுக்கிகளா இருக்காங்க’ என்று நகைச் சுவையாகக் கூறினார். ‘அவங்கள்ள ஒருத்தராவது யோசிக்கணும். ஒண்ணு அவங்க எல்லாரும் உங்கள முரட்டுத் தனமா எதிர்ப்பது என்ற ஒப்பந்தத்துக்கு வரணும். அல்லது உங்களுடைய குதிரைக்குக் கீழ விழுகணும்’. ஐயோனா அதிகாriயைச் சுற்றிலும் பார்த்து விட்டு அவருடைய உத்டை அசைத்தார். அவர் எதையோ சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூற நினைத்தார். ஆனால் மூக்குறிஞ்சிய ஒலி மட்டுமே கேட்டது. ‘என்ன?’ என்று ஐயோனாவிடம் கேட்டார் அதிகாரி. ஐயோனா அவருடைய உதட்டை நெளித்துப் புன்னகைக்க முயன்றார். சிறிது முயற்சிக்குப் பிறகு கம்மிய குரலில் கூறினார். ‘இந்த வாரத்தில் என்னுடைய மகன் பேரின் இறந்து போனான்.’  ‘அவர் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்?’ ஐயோனா அவருடைய முகத்தை நோக்கித் தன் முழு உடலையும் திருப்பி, ‘யாருக்குத் தெரியும் கடுமையான காய்ச்சல்னு சொன்னாங்க. மூன்று நாள் மருத்துவமனையில் இருந்தான். அதன்பின்புதான் இறந்தான். கடவுள் நினைப்பதுதான் நடக்கும்’ என்றார்.
 
‘சைத்தானே திரும்பு’ இருட்டடிலிருந்து சத்தம் கேட்டது. ‘ஏன் திடீர்னு சத்தம் போடறே கிழட்டு நாயே உன் கண்ணத் திறந்து பாரு’. ‘சரி கிளம்பிப் போங்க’ என்றார் அதிகாரி. ‘இல்லைன்னா நாளைக்குக் கூடப் போய்ச் சேர முடியாது. வேகமாகப் போங்க’ வண்டியோட்டி ஐயோனா மறுபடியும் அமர்ந்து கொண்டு தன் கழுத்தை நீட்டியவாறே இரக்கமில்லாமல் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்தார். ஐயோனா அதன்பிறகு பலமுறை அதிகாரியின் முகத்தை திரும்பிப் பார்த்தார். ஆனால் அதிகாரி கண்களை மூடியிருந்தார். அவர் கவனிப்பதைத் தட்டிக் கழிக்கிறாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஐயோனா அதிகாரியை விபார்க்கில் விட்டு விட்டு ஒரு உணவு விடுதி முன் நின்றார். அவருடைய இருக்கையில் மீண்டும் உடலை வளைத்து அமர்ந்தார். ஐயோனாவிடம் எந்த இயக்கமும் இல்லை. மறுபடியும் அவர் மேலும் குதிரையின் மீதும் பனி விழத் தொடங்கியது. ஒரு மணி நேரம் கடந்தது. மேலும் ஒரு மணி நேரம். அந்த நேரத்தில் நடைபாதையில் காலணிகள் கீச்சிடும் ஒலி கேட்டது. அத்துடன் சண்டையிடும் ஒலியும்கேட்டது. மூன்று இளைஞர்கள் வந்தார்கள். அவர்களின் இருவர் ஒல்லியாக, உயரமாயிருந்தார்கள். மூன்றாமவர் குட்டையாகவும் கூன்முதுகுடனும் காணப்பட்டார்.

‘வண்டியோட்டியே காவலர் பாலத்துக்குப் போகணும்’ உடைந்த குரலில் கேட்டான் கூனன். ‘நாங்க மூணுபேருமே வரணும். பத்துக் கொப்பெக்’ ஐயோனா அவருடைய சாட்டையை எடுத்துக் கொண்டு உதட்டை அடித்துக் கொண்டு சத்தமெழுப்பினார். பத்து கொப்பெக் என்பது அதிகமான விலையில்லை. ஐந்து கொப்பெக்களோ ஒரு ரூபிளோ அதைப் பற்றியெல்லாம் அவர் சட்டை செய்யவில்லை. அவரைப் பொருத்தவரையில் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே விலை அவ்வளவுதான். அந்த இளைஞர் மூவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோசமான மொழியைப் பயன்படுத்தியவாறு வண்டிக்குள் ஏறி ஒரே நேரத்தில் இருக்கையில் அமர முயன்றார்கள். அவர்களிடையே அமர்ந்து வரும் இருவர் யார் நின்று கொண்டே வரும் ஒருவர் யார் என்பதில் விவாதம் தொடங்கியது. கடும் விவாதத்திற்குப் பின் இறுதியாக ஒருவரை ஒருவர் வசைபாடியவாறு மிக எரிச்சலுடன் கூனனே நின்று கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார்கள். ஏனென்றால் அவர்களுள் அவனே உருவத்தில் சிறியவன். ‘இப்பச் சீக்கிரம் போங்க’ என்றான் மூக்கிலிருந்து கூனன்.

அவன் அவனுடைய இடத்தில் நின்று கொண்டான். ஐயோனாவின் கழுத்தில் மூச்சு விட்டான். ‘நண்பா என்ன தொப்பி வச்சுருக்கீங்க. பீட்டர்ஸ்பர்க்லயே இவ்வளவு மோசமா யாரையும் கண்டுபிடிக்க முடியாது’

‘ ஹி..ஹி..ஹி..ஹி.. ‘ ஐயோனா அசட்டுத்தனமாகச் சிriத்தார். ‘அப்படியா’ ‘ஆமா அப்படித்தான். நீங்க வேகமாப் போங்க, இல்ல இங்கயே இருக்கப் போறீங்களா..உங்க கழுத்துப் பக்கம் இப்படியே இருக்கணுமா?’ ஒல்லியான இருவரில் ஒருவன், ‘ஐயோ என் தலை வெடிச்சிடும்போல இருக்கு’ என்றான். ‘நேத்து இரவு வாஸ்காவும் நானும் டாண்க்மாகோவ்ஸில் நாலு குப்பி காக்னேக் குடிச்சோம்’.

மற்றொருவன் சினத்துடன், ‘நீ ஏன் பொய் சொல்லறன்ணு என்னால புரிஞ்சுக்க முடியல?’ என்று கேட்டான். மேலும் ‘நீ இரக்கமில்லாமப் பொய் பேச’ என்றான். ‘கடவுளே! என்ன நம்பு உண்மையாத்தான் சொல்றேன்’. ‘பேரினுக்கு இருமல் வந்துச்சாம். அது மாதிri நீ சொல்றது ரொம்ப உண்மையாத்தான் இருக்கும். ஐயோனா பல்லைக் காட்டிச் சிரித்தார், ‘என்ன ஆளுங்க நீங்க’. ‘எங்கயாவது நரகத்துப் போ’ என்றான் கூனன் கொதிப்புடன். ‘கிழவா, நீ போகப் போறியா இல்லையா? இப்படித்தான் ஓட்டுவாங்களா? கொஞ்சமாவது சாட்டையைப் பயன்படுத்து. சைத்தானே குதிரைக்கு நல்லாக்குடு’ ஐயோனா தன் பின்புறத்தில் அந்தக் குட்டை மனிதன் நெளிந்து கொண்டிருப்பது போல உணர்ந்தார்.

அவனுடைய குரல் கூட நடுங்கியது. ஐயோனா அவர்மீது சுழற்றி எறியப்பட்ட அவமதிப்பான வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டுதான் வந்தார். சுற்றியுள்ள மக்களைப் பார்த்தார். சிறிது சிறதாகத் தனிமை அவரைவிட்டு நீங்கியது. அந்தக் கூனன் அவனுக்கு இருமல் வரும்வரை அல்லது வேறு ஏதாவது உறுதிமொழி ஏற்கும்வரை ஐயோனாவை வார்த்தைகளால் அவமதித்துக் கொண்டே வந்தான். நடேஜா பேட்ரோவ்னாவைப் பற்றி ஒல்லியான மனிதர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். ஐயோனா அவர்களைப் பலமுறை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.

அவர் தற்காலிக அமைதிக்காகக் காத்திருந்தார். மறுபடியும் திரும்பி, ‘இந்த வாரம் என் மகன் இறந்து விட்டான்’ என்று முணுமுணுத்தார். ‘நாம எல்லோரும் ஒரு நாள் இறந்துதானாகணும்’ பெருமூச்சுடன் கூறிய கூனன், அந்த இருமலுக்குப்பின் அப்போதுதான் அவன் உதடுகளைத் துடைத்தான். பிறகு, ‘கண்ணியவானே! இப்பச் சீக்கிரமாப் போகணும். என்னால் இதுமாதிரி வெகுதூரம் பயணம் செய்ய முடியாது’ என்றவன், ‘எப்ப அங்க இறக்கி விடுவாரோ’ என்றான். ‘சரி நல்லது. அவரோட கழுத்தைப் பிடித்துக் கொஞ்சம் தூண்டு’ ‘கிழவா கேட்டுக்கிட்டிருக்கியா? நான் உன் கழுத்தெலும்பை உடைச்சுடீவேன். உன்ன மாதிரி ஓட்டிக்கிட்டிருந்தா நடந்துதான் போகணும். உனக்குக் கேட்குதா? கிழட்டுப் பாம்பே கொஞ்சம் கூட சிரத்தை எடுக்க மாட்டியா?’

ஐயோனா கேட்டதைக் காட்டிலும் அவர்கள் நடத்திய முறையில் அதிர்ந்து போயிருந்தார். ‘ஹி..ஹி.. அவர் சிரித்தார். ‘அவர்கள் இளைஞர்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்’ ஒல்லியானவர்களுள் ஒருவர், ‘வண்டியோட்டி, நீங்க திருமணமானவரா’ என்று கேட்டார். ‘எனக்கா ஹி..ஹி.. இளைஞர்களே! இப்ப எனக்கு ஒரு மனைவியும், ஈரமான மண்ணும் மட்டும்தான் இருக்கு. ஹி..ஹோ..ஹோ.. அதைச் சொல்லணும். சுடுகாடு. என் மகன் இறந்து போனான். ஆனால் நான் உயிருடன் இருக்கிறேன். என்ன அற்புதம்….சாவு தவறான கதவத் தட்டீடுச்சு.. என்கிட்ட வருவதற்குப் பதில் அது என் மகன் கிட்டப் போயிடுச்சு. ஐயோனா அவர்களிடம் அவர் மகன் இறந்தது எப்படி என்று சொல்லத் திரும்பினார். ஆனால் அவர் திரும்பிய அதே கணத்தில் ஒரு சிறிய பெருமூச்சுடன் கூனன் அறிவித்தான், ‘கடவுளுக்கு நன்றி. கடைசியில் நாம வர வேண்டிய இடத்துக்கு வந்துட்டோம்’ அவர்கள் ஒரு இருண்ட நுழைவாயிலில் நுழைந்து மறைவதை ஐயோனா கவனித்தார்.

மறுபடியும் ஒருமுறை அவர் தனிமையில். மீண்டும் அவரை நிசப்தம் சூழ்ந்தது….அவருடைய துக்கம் குறுகிய காலத்துக்கு வலுவிழந்தது.

ஆனால் மேலும் அதிவேகத்துடன் துக்கம் அவருடைய இதயத்தைத் தாக்கியது. மனக் கலக்கத்துடன் அவர் விரைவாகப் பார்வையை ஓட்டினார். தெருவின் இருபுறமும் கடந்து கொண்டிருந்த கூட்டத்திற்கிடையில் யாராவது ஒருவராவது அவரை கவனிக்க மாட்டார்களா எனத் தேடினார். ஆனால் அவரையோ அவரது கவலையையோ கவனிக்காமல் கூட்டம் வேகமாகக் கடந்து கொண்டிருந்தது. துக்கம் இன்னும் பிரம்மாண்டமாகவும் அளவிட முடியாததாகவும் மாறிப் போனது. அவருடைய இதயத்தைப் பிளந்து துக்கத்தை வெளியே ஊற்ற வேண்டும். அவ்வாறு ஊற்றினால் அது பூமி முழுவதும் வழிந்தோடும். இருப்பினும் யாரும் பார்க்கவில்லை. நான் அதை யாரும் அறியாமல் ஒரு கூட்டுக்குள் மறைத்து வைக்க முயல்கிறேன். யாரும் அதைப் பகலிலோ அல்லது ஒளியினூடோ வடப் பார்க்க முடியாது.

செகாவ்வின் சிறுகதை: துக்கத்தின் உச்சம்!.ஐயோனா சாக்குப் பையுடன் கூடிய ஒரு சுமை தூக்கியைப் பார்த்தார். அவருடன் பேச முடிவு செய்தார். ‘நண்பா, இப்ப நேரம் என்ன இருக்கும்?’ என்று கேட்டார். ‘மணி ஒன்பது. நீங்க ஏன் இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க. நகருங்க’ ஐயோனா சில அடிகள் நகர்ந்தார். உடலை வளைத்தார். அவரது துக்கத்துக்காக அவரையே கைவிட்டார். மக்களிடம் உதவியை எதிர்பார்ப்பது பயனற்றது என்பதை உணர்ந்தார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாயிருக்கும். நேராக நிமிர்ந்தார். கடுமையாக வலிப்பது போல் தலையைப் பிடித்துக் கொண்டார். குதிரையின் கடிவாளத்தை வேகமாகப் பிடித்திழுத்தார். அவரால் இதை வெகுநேரம் தாங்கவியலாது. ‘குதிரை லாயம’ அவர் நினைத்தமாத்திரத்தில் அந்தச்சிறு குதிரை புரிந்து கொண்டது போல ஓடத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் கடந்திருக்கும். அழுக்கான பெரிய கணப்படுப்பு ஒன்றின் முன் ஐயோனா அமர்ந்திருந்தார். அந்த அடுப்பைச் சுற்றிலும் தரையிலும் நீண்ட பெஞ்சிலும் மனிதர்கள் படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். காற்று அசையாததால் சூடாக இருந்தது. மூச்சுத் திணறியது. ஐயோனா தூங்குபவர்களைப் பார்த்தவாறே சொறிந்து கொண்டார். நேரத்தில் வந்ததற்காக வருந்தினார். ‘நான் எனது உணவுக்குக் கூட சம்பாதிக்கவில்லை’ என்று நினைத்தார். மேலும் ‘இதுதான் என் சிக்கல். தன்னுடையை வேலையை அறிந்த மனிதனால்தான் தனக்கும் தன் குதிரைக்கும் உண்ணத் தேவையான அளவு உணவு வைத்திருப்பவனால்தான் நிம்மதியாக உறங்க முடியும்’ என்று எண்ணினார். அங்கு மூலையிலிருந்த இளம் வண்டியோட்டி அரைகுறைத் தூக்கத்தில் எழுந்தும் எழாமலும் லேசாக ஒலி எழுப்பியவாறே தண்ணீர் வாளியை நோக்கிக் கையை நீட்டினான். ஐயோனா அவனிடம், ‘உனக்குத் தண்ணி வேணுமா?’ என்று கேட்டார். ‘இல்ல எனக்குத் தண்ணி வேணும்’ ‘அப்படியா. நீ நல்லா இரு. கவனியேன். என் மகன் இறந்து விட்டான். உனக்குத் தெரியுமா? நான் சொல்றதக் கேக்கிறியா? இந்த வாரம்தான். மருத்துவமனையில், அது ஒரு பெரிய கதை. ஐயோனா அவர் வார்த்தைகள் அவனுக்குள் என் விளைவை ஏற்படுத்தியிருக்கின்றன எனப் பார்த்தார். ஆனால் எதுவும் இல்லை. அந்த இளைஞன் முகத்தை மூடியவாறே விரைவாகத் தூக்கத்தில் ஆழ்ந்தான். அந்த முதியவர் பெருமூச்சுடன் தன் தலையைச் சொறிந்து கொண்டார். அந்த இளைஞர் நீர் அருந்த எவ்வளவு விரும்பினானோ அந்த அளவுக்கு ஐயோனா பேச விரும்பினார். அவருடைய மகன் இறந்து ஒரு வாரம் ஆயிற்று. ஆனால் சரியாக அதைப்பற்றி யாriடமும் பேச முடியவில்லை. அதை மெதுவாகவும் கவனமாகவும் கூற வேண்டும். அவருடைய மகன் எப்படி நோய்வாய்ப்பட்டார்? எப்படித் துன்பங்களை அனுபவித்தார்? இறப்பதற்கு முன் அவர் என்ன கூறினார்? எப்படி இறந்தார் என்பதையெல்லாம். அவனுடைய இறுதிச் சடங்கு எப்படி நிகழந்தது என்பதையெல்லாம் விriவாகப் பேச வேண்டும். மருத்துவமனைக்குப் போய் இறந்த மகனின் ஆடைகளை எடுத்து வந்ததை. ஐயோனாவின் மகள் அனிஷ்யா கிராமத்திலேயே தங்கி விட்டாள். அவளைப் பற்றி வேறு பேச வேண்டும். அவருக்குப் பேச எதுவுமே இல்லையா என்ன? இந்தக் கொடுமையைக் கேட்பவர்கள் நிச்சயம் மூச்சுத் திணறிப் போய்ப் பெருமூச்சு விடுவார்கள். அவர் மேல் பரிதாப்படுவார்கள். ஒரு பெண்ணிடம் பேசுவது மிக நல்லது. அவர்கள் அறியாமை மிக்கவர்களாயிருப்பதால் இரண்டு வார்த்தைகள் பேதும் அவர்களைத் தேம்ப வைக்க. ‘நான் போய் என் குதிரையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என நினைத்தார் ஐயோனா. ‘தூங்குவதற்கு எப்பொதும் நேரம் கிடைக்கும் அதற்குப் பயப்பட வேண்டாம்’ அவருடைய அங்கியை அணிந்து கொண்டார். குதிரையை நோக்கிச் சென்றhர். அவர் கோதுமையையும், வைக்கோலையும் குளிர்ந்த கால நிலையையும் சிந்தித்தார். தனித்திருக்கையில் மகனைப் பற்றி நினைக்க அவருக்குத் தைரியமில்லை. அவரால் அவனைப் பற்றி யாriடம் வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் அவனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதோ, அவனைக் கண்ணுக்குள் நிறுத்திப் பார்ப்பதோ தாங்க முடியாத வலியாயிருந்தது. ‘நீ சாப்பிட்டாயா’ ஐயோனா குதிரையிடம் அதன் பளீriட்ட கண்களைப் பார்த்துக் கேட்டார். பின்பு, ‘போ. போயி திருப்தியாச் சாப்பிடு. நாம நமக்குத் தேவையான கோதுமையைச் சம்பாதிக்கலைன்னாலும் வைக்கோல் இருக்கு சாப்பிட. எனக்கு வயசாயிடுச்சு. வண்டியோட்ட முடியல. என் மகனால ஓட்ட முடிஞ்சிருக்குமாயிருக்கும். ஆனா என்னால முடியல. அவன் முதல்தரமான வண்டியோட்டி. அவன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்’ ஐயோனா ஒரு கணம் அமைதியாயிருந்தார் பின் தொடர்ந்தார், ‘அதுனால அது அப்படித்தான். வயதான குதிரையே இனி குஸ்மலோriட்ச் இல்லவே இல்ல அவன் நாம் எல்லாம் வாழ்வை வாழணும்னு நம்மை விட்டுட்டுப் போயிட்டான். அவன் போயிட்டான். உனக்கு இப்பக் குதிரைக்குட்டி இருந்துதுன்னு வை. நீ குட்டிக் குதிரையின் அம்மாவா இருந்த. அந்தக் குட்டிக் குதிரை உன்னை விட்டுட்டுப் போயிடுச்சு. அதுக்கப்புறமும் நீ வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தால் அது பெரிய சோகம் இல்லையா?! அந்தச் சிறு குதிரை மென்றது, கவனித்தது, தன் எஜமானின் கரத்தின் மேல் மூச்சு விட்டது. ஐயோனாவின் உணர்வுகள் அபரிமிதமாயிருந்தன. அவர் சிறிய குதிரைக்கு முழுக் கதையையும் கூறி முடித்தார்.

smekala10@gmail.com