அவுஸ்திரேலியா: இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் – அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா: இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் - அனுபவப்பகிர்வுஅன்புள்ள கலை, இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு  பொங்கல்  வாழ்த்துக்கள். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் – மெல்பனில் இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ்      என்ற தலைப்பில் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம்.

நடைபெறும் இடம்: Darebin Intercultural Centre ( 59 A, Roseberry Avenue, Preston, Victoria – 3072)
காலம்: 23-02- 2014  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 1  மணிவரை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம்.  கல்வி, இதழியல், வானொலி, ஊடகம் – படைப்பிலக்கியம், சமூகப்பணி, மற்றும் இணையத்தள  – வலைப்பதிவுகளில்    ஈடுபாடுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் – அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக அமையும் என்பதனால் தங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் விக்கிபீடியாவுடன் தொடர்புடைய திரு.முகுந்தராஜ் குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து   வருகைதருகின்றார்.

மேலதிக விபரங்களுக்கு
லெ. முருகபூபதி (செயலாளர்)
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
04 166 25 766   –  (03) 513 46 771 –  
E.Mail: atlas2001@live.co