அ.ந.க.வின் கவிதைகள், நாவல் மனக்கண் மின்னூல்களாக…

அ.ந.க.வின் மனக்கண் மின்னூலாக

இதுவரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் இரண்டு நூல்கள் அச்சு வடிவில் வெளியாகியுள்ளன. ஒன்று தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளியான ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது தேசிய கலை இலக்கியப் பேரவையூடாக வெளியான ‘மதமாற்றம்’ நாடகம், தற்போது பதிவுகள்.காம் வெளியீடுகளாக அவரது கவிதைகள் தொகுப்பு மற்றும் ‘மனக்கண்’ நாவல் ஆகியவை வ.ந.கிரிதரனின் விரிவான முன்னுரைகளுடன் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. அவற்றை நூலகம் இணையத்தளத்தின் நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
‘எண்ணிம எழுத்தாவணங்கள்’ பிரிவில் வாசிக்கலாம்.

நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
‘எண்ணிம எழுத்தாவணங்கள்’ பிரிவு உண்மையில் மிகுந்த பயனுள்ள பிரிவு. மின்னூல்களை இன்றைய வடிவங்களாக அங்கீகரித்து உருவாக்கப்பட்ட பிரிவு. இதுவரை அச்சேறாத தம் படைப்புகளை எழுத்தாளர்கள் மின்னூல்களாக்கி ஆவணப்படுத்த வழியேற்படுத்தியுள்ளது. இதனை எழுத்தாளர்கள் முறையாக, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆக்கங்களைத் தொகுத்து அவற்றைப் பிடிஃப் கோப்புகளாக்கி நூலகம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: noolahamcollections@gmail.com

கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25302
அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25301