இலண்டனில் றீற்றா பற்றிமாகரனின் ‘சங்க காலத் தமிழர் வாழ்வும், கலைகளும்’ நூல் வெளியீடு!

இலண்டனில் றீற்றா பற்றிமாகரனின் 'சங்க காலத் தமிழர் வாழ்வும், கலைகளும்' நூல் வெளியீடு!அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் – இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon Rise, London SE13 5ES; – 24.04.2011 காலம் – 24.04.2011 ஞாயிறு மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை. சங்க இலக்கியத்தின் இன்றைய தேவைகள்” என்னும் கலந்துரையாடல் நூல் வெளியீட்டை அடுத்து இடம்பெறும். திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டு இந்நிகழ்வில் ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரனின் “ ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ தத்துவம் தந்த அப்பர் சுவாமிகள்”, என்னும் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறும்.

இதில் தாங்களும் கலந்து சிறப்பித்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்

விழாக்குழுவினர் தொடர்புகளுக்கு : 01865437397ஃ07877302731

தகவல்: விசாகப்பெருமாள் வசந்தன்
visagaperumal_vasanthan@yahoo.co.uk