எதிர்வினை: இனப்படுகொலையா? இனக்கொலையா?

வாசகர் கடிதங்கள் சில.Siva Ananthan <atpu555@yahoo.co.uk> Today at 9:59 AM

அன்புள்ள கிரிதரன், உங்கள் பதிலுக்கு நன்றி. எனது மடலில் என் எண்ண ஓட்டத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். கலவரம் என்ற சொல்லுள் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம், சமூகக் கலவரம், இனக்கலவரம் இப்படிப் பல்வேறு வகைகள் அடக்கம். இனக்கலவரம் என்ற சொல்லுள் இருசமூகத்தவர் ஒருவரையொருவர் தாக்குதலும் (உ+ம்: சிலவருடங்களுக்குமுன் பாக்கிஸ்தானியரும் இந்தியரும் இங்கிலாந்தில் சண்டையிட்டுக்கொண்டனர்),ஒரு சமூகத்தவரை இன்னொரு சமூகத்தவர் தாக்குதலும் ஆகிய இரு வகைகளும் அடக்கம். எமக்கு நடந்தது இரண்டாவது வகையானது என்பது தெளிவு. அதிலும் ‘கலவரம்’ என்ற சொல் அதன் கொடூரத்தை, 1000 க்கு மேற்ற்பட்ட கொலைகளைப் புலப்படுத்தவில்லை.

எனது ஆதங்கம் என்னவெனில், எவ்வாறு கலவரம் என்ற சொல் எமக்கு நடந்த அவலத்தைக் குறிக்கப் போதாத வார்த்தையோ, அதுபோலவே ‘இனக்கலவரம்’ என்ற சொல்லும் போதாது என்பதே. தவறானது அல்ல. போதாது. ஏனெனில், அச்சொல், இன்னொரு கருத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படக்கூடியது. அதாவது – இரு சமூகங்கள் ஒருவரையொருவர் தாக்குதல். அதனால், ‘தமிழினப் படுகொலை’ அல்லது ‘தமிழர் படுகொலை’ என்பது போன்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது என்ன நடந்தது என்பது விள்ங்கப்படுத்தத் தேவையில்லாமல் புரிகின்றது.  குறிப்பாக, இது பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கு. அ-து, இது சிங்களவ்ர்களுக்கும் தமிழருக்கும் இடையே நடந்த ‘க்லவரம்’ அல்ல. சிங்களக் காடையகர்களால் தமிழர்கள் கொலையும் கொள்ளையும் செய்யப்பட்ட நிகழ்வு.

ஆங்கிலத்திலும், Riots அல்லது Race riots எனும் சொற்கள் தவறானவை அல்ல. ஆனால் என்ன நடந்தது என்பதைத் தெற்றெனப் புலப்புடுத்த குறைந்தபட்சம் Anti Tamil Riots (இதுவும் அதன் பயங்கரத்தைச் சரியாகப் புலப்படுத்தவில்லை) என்றோ, Anti Tamil Pogrom என்றோ சொல்லவேண்டும் என்பது என் கருத்து. அதுதான் பிறமொழி பேசுபவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒரே சொல்லில் விளங்கவைக்கும். என்னைப் பொறுத்தளவில் Tamil Genocide என்பதே சரியான வார்த்தைப் பிரயோகம்.

இனப்படுகொலை அல்லது Genocide என்று ஐ.நா. இன்னும் ஏற்றுகொள்ளாதிருப்பதால் அது இனக்கொலை இல்லை என்பதல்ல. எனக்கு முன்னால் என் தாய் கொலை செய்யப்படுகிறாள். நீதிமன்றம் கொலையாளியை நிரபராதி என்று கூறி விடுவிக்கிறது. அல்லது இன்னும் வழக்கு நீதிமன்றத்துக்கே போகவில்லை. அதனால் நடந்தது கொலையல்ல என்று பிற மக்கள் கூறலாம். அனால் நானே கூறமுடியுமா? எனவே, தமிழர்கள் தமிழினப் படுகொலை என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும். அல்லது Tamil Genocide or Genocide against Tamil. At the very least, it should be Anti Tamil Riots.

உங்கள் கடைசி வசனத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வெளிப் பார்வையாளனுக்கு ‘இனக் கலவரம்’ என்ற சொல் அதன் உண்மைத் தன்மையை நீர்த்துப்போக வைக்கிறது.

அன்புடன்,
ஆனந்தன்.