எழுத்தாளர் அகஸ்தியருக்குப் பாரீசில் விழா

எழுத்தாளர் அகஸ்தியர்கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.    

 பாரிஸில் அகஸ்தியர் விழா
     
1943ம் ஆண்டிலேயே ‘பாரதி’ என்ற சஞ்சிகை முற்போக்கான கருத்துக்களைத் தாங்கி வந்ததாகக் குறிப்பிட்ட கவிஞரும், முற்போக்கு அணியைச் சாhந்தவருமான வி.ரி இளங்கோவன் 1960களில் முற்போக்கு இலக்கியவாதிகள் பலர் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து தாக்கமான மக்களிலக்கியங்களைப் படைத்திருந்தமை இருண்ட இலக்கிய உலகை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததாகப் பாராட்டியிருந்தார். முற்போக்கு இலக்கியத்தின் கர்த்தாக்கள் என்று வர்ணிக்கப்படும் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களின் எழுத்துநடைகளை விவரித்த வி.ரி.இளங்கோவன் மொழிபெயர்ப்பு சிரமங்களையுடைத்து அலுப்புத்தட்டாமல் எந்த வாசகனும் ஆசையுடன் வாசித்து லெனினைப் புரிந்து கொள்ளும்வகையில், அற்புதமான மொழிநடையில் அகஸ்தியர் சுவாரஸ்சியமான சம்பவங்களால் இந்நூலைச் சிறப்பித்துள்ளார் என்றார். அகஸ்தியரின் பல்வேறுபட்ட எழுத்துக்களின் யுக்திகளை சுட்டிக்காட்டிய வி.ரி. இளங்கோவன் இலங்கையில் எஸ்.பொன்னுத்துரையும், எஸ்.அகஸ்தியரும்; பல்வேறு மொழிநடைகளினூடாக இலக்கியத்தில் பல பரிசோதனைகளை நடாத்திச் சாதனை படைத்தவர்கள் என்றும் கூறினார்.
    

பாரிஸில் அகஸ்தியர் நூல் வெளியீடு
அகஸ்தியர் இந்த நூலில் கையாண்ட எழுத்து தன்னை ஒரே மூச்சில் படிக்கத்தூண்டியதாக கூறிய  நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான எம்.அரியநாயகம் லெனின் குறித்து அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் நாடகமாக்கி நடிக்கலாம்; போன்று தனக்குத் தோன்றியதாகக் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்து பிரான்சில் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகச் செயற்பட்டபோதுதான் அகஸ்தியரை நேரில் சந்தித்தாகக் கூறிய அரியநாயகம் தனது ‘மண்ணைத் தேடும் மனங்கள்’என்ற புலம்பெயர்ந்த புதிய எழுத்தாளர்களின் நூல்வெளியீட்டில் அகஸ்தியர் பிரதம விருந்தினராகக் கலந்து எழுத்தாளர்களை ஊக்குவித்திருந்தமையைப் நினைவிருத்தினார்.

      
அகஸ்தியர் குடும்பத்தோடு தான்  நெருங்கிப் பழகியதாகக் கூறிய ஓசைமனோ அம்மா நவமணி-அகஸ்தியர் இன்றுவரை உற்சாகமாகச் செயற்பட்டு அவரின் நூல்களை வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவது இலக்கிய உலகிற்குப் பெருமை தருவதாகப் பாராட்டினார். அகஸ்தியர் தன்னை  இலக்கியத்துறையில் ஈடுபடுத்தி பல இலக்கிய சஞ்சிகைகளை அறிமுகஞ்செய்து உற்சாகம் தந்து ஊக்குவித்தவர் என்று கூறிய ஓசைமனோ இன்று இலக்கியம் குறித்து தான் மேடைகளில் பேசுவதற்குக்கூட அகஸ்தியர்தான் காரணம் எனப் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டியமை எல்லோரினதும்; இதயத்தை நெகிழ்த்தியது.  புலம் பெயர்ந்து இலக்கிய ஆர்வம்கொண்ட பல இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதில் முன்னின்ற பெருமைக்குரியவர் அகஸ்தியர் என்று கூறிய நடிகர் லோகதாஸ் தனது சிறுகதைகளையும் வாசித்து  வளப்படுத்தியதை நினைவுபடுத்திப் பேசியிருந்தார்.

பா
    
அகஸ்தியரின் மேய்ப்பர்கள் என்ற சிறுகதையை தான் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்ததாகவும் அக்கதை அவ்வேளை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையும்இ அகஸ்தியரின் எழுத்துக்கள்; மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதுபற்றியும் எழுத்தாளர்  தமிழ்ப்பிரியா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.    
   
முற்போக்கான கருத்துக்கள் குறித்த பல நூல்களை தான் தேடிப் படித்தபோது அவை அலுப்புத் தருவதாகவும்இ அந்த விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும் கூறிய  ‘முற்றம்’ சஞ்சிகை ஆயசிரியர் திரு.  டேமியன் சூரி அகஸ்தியரின் இந்த நூலைப் படித்தபோது வாசகனைக் கவரும் வகையில் மிக இலகுபடுத்தி லெனினின் வாழ்க்கைச் சம்பவங்களை அழகாக வடித்திருக்கின்றார்; எனக்கூறினார்.     

பாரிஸில் அகஸ்தியர் நூல் வெளியீடு
    
அகஸ்தியரின் சிறுகதைகள் பலவற்றை நாடக வடிவம் கொடுத்து தமது பாரீஸ் ‘ஏபிசி’ வானொலியில் ஒலிபரப்பியயோது நேயர்களின் மிகுந்த பாராட்டைப்பெற்றிருந்தமையை குறிப்பிட்ட ஊடகவியலாளர் நவா ஜோதி லெனின் பாதச்சுவடுகளில்… என்ற இந்த நூலிலுள்ள சித்தரிப்புக்களும் நாடக வடிமைப்பைக்; கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
    
பதினைந்து ஆண்டுகள் கடந்தும் அகஸ்தியரின் நூல் வெளியீட்டினை ஒழுங்கு செய்து நடாத்திய எழுத்தாளர் வண்ணைதெய்வம், திரு டேமியன் சூரி, ஓசைமனோ மற்றும் பேச்சாளர்கள்,  வருகை தந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் லண்டனில் இருந்த வருகை தந்திருந்த ஊடகவியலாளரும், அகஸ்தியரின் மருமகனுமான எஸ்.பி. யோகரட்னம் நன்றி தெரிவித்தார்.

பாரிஸில் அகஸ்தியர் நூல் வெளியீடு    

2008 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள இலக்கிய ஆர்வலர்களாலும்;இ 2009 ஆம் ஆண்டு ஜேர்மன் தமிழ் எழுத்தாளர்களினாலும், 2011 ஆண்டு இன்று பாரீசில் கலை இலக்கிய ஆர்வலர்களாலும் அவரது நூல் வெளியீடுகள் இடம் பெறுவது என்றால் தன் தந்தை எவ்வளவு தூரம் தனது குடும்பத்தை, தனது சமூகத்தை, இலக்கியவாதிகளை நேசித்திருக்கிறார் என்பது இதன்மூலம் புலப்படுகின்றது என்று கூறிய அவரது மகள் நவஜோதி ஜோகரட்னம் பாரீசில் அகஸ்தியருடன் நெருங்கிப்பழகி மறைந்த கலைச்செல்வன்இ சிவபாலனஇ; கீழ்கரவைப் பொன்னையன, தோழர் சுரேந்திரன், முகத்தார் யேசுரட்னம் போன்ற கலை இலக்கியவாதிகளை துயரத்துடன் நினைவுகூர்ந்து அனைவருக்கும் அஞ்சலி செலுத்தி விழாவை நிறைவு செய்தார்.

பாரிஸில் அகஸ்தியர் நூல் வெளியீடு

அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம்
navajothybaylon@hotmail.co.uk