குடிகார அப்பாக்கள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

பகலவனின் ஒளிக்கீற்றின் வெம்மையை தாங்கி

பொண்டாட்டி களத்துக்கு களம் போய்

பிச்சை எடுத்து வரும் நெல்மணியை

சாராய கடையில் விற்றுப்  போட்டு

சாராயம் குடிக்கும் குடிகார அப்பாக்கள் எத்தனை பேர்

பிள்ளைகள் கிழிந்த உடுப்புடுத்து

நாலு பேர் ஏழ்மையாய் சிரிக்க

தாங்க முடியாமல் வீட்டின் மூலையில்

இருந்து கொண்டு அழும் பிள்ளைகள் எத்தனை பேர்

 

தொட்டிலிலே பச்சிளம் குழந்தை பாலுக்கு அழ

புருசனை நம்பி பால்மா வேண்டி வா என்று.

காசி கொடுத்தால் சாராயக் கடையில்

மதுசாரம் ஊற்றும் அப்பாக்கள் எத்தனை பேர்

பொண்டாட்டி பிள்ளைகள்

நாளெல்லாம் பட்டினியாக் கிடந்தாலும்

பத்து ரூபாய் இருந்தாலும் பக்குவயமாய்

குடித்திடுவர் மதுசாரம் நம் அப்பாக்கள்

 

மதுசாரம் ஒழித்திடுவோம் மதுசாரம் ஒழித்திடுவோம்

ஊர் அதிர பறையடித்தாலும்

மறுநாள் காலையிலே.எதிர்ப்பக்கம்

மறு கடையும் திறந்திருக்கும்

குற்றங்களை சொல்லி! மேல் இடத்தில் முறையிட்டால்

முறையிட்ட மறு கனமே அவர் உயிர் போய் விடுமே.

இந்த நிலை தொடர்ந்தால் குடிகார அப்பாக்கள்

ஊரெல்லாம் குடியும் குடித்தனமும்

கும்மாளம்  தொடருமையா…..

 

rupanvani@yahoo.com