தமிழ்குளோபல்நியூஸ்: போராளியும் நண்பரும் ஊடகவியலாளருமான ரவிவர்மன் அமரரானார்!

 ரவிவர்மன் அக்டோபர் 6, 2013 – சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர்   தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி  பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய்   எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில்  (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த ரவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல்   நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97375/language/ta-IN/article.aspx