நூலகம் அறக்கட்டளை: ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள்

நூலகம் அறக்கட்டளை: ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள்இன்னொரு யாழ்ப்பாண நூலக எரிப்பு நாள் வந்து கடந்து போயுள்ளது. அந்த ஒரு நாளில் நினைவு கூர்ந்துவிட்டுப் போவதால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் ஆவணங்களைக் காக்க முடியாது.

நண்பர்களே, நூலக நிறுவனத்தினராகிய நாம் (www.noolaham.org) ஆண்டு முழுவதும் ஆவணப்படுத்தலில் ஈடுபடுகிறோம். 5,000 நூல்கள், 7,000 சஞ்சிகைகள், 4,000 பத்திரிகைகள், 2,000 பிரசுரங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 18,000 ஆவணங்கள். முழுக்க முழுக்க ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இலட்சம் பக்கங்கள்.

2,700 ஆளுமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி தமிழின் மிகப்பெரும் வாழ்க்கை வரலாற்று அகராதியை உருவாக்கியுள்ளோம்.

அவை தவிர ஏட்டுச் சுவடிகள், நினைவு மலர்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், காணொளிகள் எனச் சகலவிதமான ஆவணங்களையும் திரட்டி ஆவணக்காப்பகமாகச் செயற்படத் தொடங்கியுள்ளோம்.

நாம் செய்வது ஒரு வலைத்தளம் அல்ல. சர்வதேச நியமங்களைப் பின்பற்றி ஓர் எண்ணிம ஆவணக் காப்பகத்தினையே உருவாக்கி வருகிறோம்.

13 முழுநேரப் பணியாளர்கள், அவ்வப்போது பகுதிநேரப் பணியாளர்கள், 2 அலுவலகங்கள், 5 இடங்களில் ஆவணவாக்க நிலையங்கள் உள்ளனர். மேலும் 2-3 இடங்களில் ஆவணவாக்க நிலையங்களைத் தொடங்கும் முயற்சியில் உள்ளோம்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க பெருமளவு நிதி மாதாந்தம் தேவைப்படுகிறது. நூலக நிறுவனம் எந்த இலாபமீட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை. முழுக்க முழுக்க நன்கொடைகளிலேயே இயங்குகிறோம். ஆவணவாக்கத்துக்கு வழங்கப்பட்ட 5,000 க்கும் அதிகமான ஆவணங்கள் போதிய வளங்கள் இன்மையால் தேங்கிக் கிடக்கின்றன என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

நூலகச் செயற்பாடுகளுக்கு நிதிவழங்குவதன் மூலம் ஈழத்து ஆவணவாக்கத்துக்கு உங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சதமும் ஆவணவாக்கத்துக்கு மிக உதவும். நூலக நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுத் தனியான வங்கிக் கணக்குடன் இயங்குவதோடு ஆண்டுதோறும் கணக்காய்வினையும் (audit) வெளியிடுகிறது. சகல பங்களிப்புக்களுக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்படுவதோடு நிறுவன வலைத்தளத்திலும் பதிவு செய்யப்படும்.

இலங்கையிலும் இங்கிலாந்திலும் நேரடியாக நூலக நிறுவன வங்கிக் கணக்குக்கு நன்கொடை அனுப்ப முடியும். விபரங்கள்:

http://noolahamfoundation.org/wiki/index.php…

ஏனைய நாடுகளில் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளலாம்.
கனடா: நற்கீரன் 0014165920980
ஐக்கிய அமெரிக்கா: பிரதீபன் 0013236794666
அவுஸ்திரேலியா : கோபி 0061433482149
சிங்கப்பூர்: முகுந்தன் 0065 9773 6663

ஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் ஆவணப்படுத்தலுக்குக் கைகொடுத்து உதவுங்கள்.

இச்செய்தியைப் பரவலாகப் பகிர்ந்து ஏனையோரையும் பங்களிக்க ஊக்குவியுங்கள்.

தகவல்: நூலக அறக்கட்டளை.