‘பூகோளம் வெப்பமடைதல்’ காலத்தின் தேவையான நூல் வெளியீடு என்ன நடக்கிறது எமது நாட்டில்?

நிகழ்வுகள்[‘நிகழ்வுகள்’ பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் –  பதிவுகள்] ‘சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம். இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள். பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது. ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு  ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.

பாமர மக்களின் நலனுக்காகப் போராடிய தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுப் பேருரை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அவர் ஆற்றிய உரை இப்பொழுது பூகோளம் வெப்படைதல் என்ற நூலூக வெளிவர இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதல் ஆசியா வரை காலநிலை நிலை மாற்றங்களால் அவஸத்தைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது இக்கட்டுரை தொகுக்கப்பட்டு முழுமையான நூலாக வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலருக்கும் பயனளிக்கப் போவதும் நிச்சயமாகும். இந்நூல் பற்றிய ஆய்வரங்கு எதிர்வரும் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6, 58, தர்மராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

தலைமை:- கலாநிதி செல்வி திருச்சந்திரன்.

ஆய்வாளர்கள்
1. த.இராஜரட்ணம்
2. பேராசிரியர். எம். கருணாநிதி
3. பேராசிரியர் சபா. ஜெயராசா

இறுதி நிகழ்வாக நூலாசிரியர் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் அவர்களின் ஏற்புரை நடைபெறும். சுற்றுப்புறம் சூழல், பூகோளம் வெப்பமடைதல்

போன்ற சமூதாயத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றி ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை நிறைவுறச் செய்ய

அழைக்கப்படுகிறார்கள்..

தகவல்: Dr.M.K.Muruganandan
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot .com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com /pathivukal/health.html

kathirmuruga@hotmail.com